Trump: டிரம்ப் எச்சரிக்கையை தூக்கி வீசிய இந்தியா.. தரமாக எடுத்த முடிவு.. ரஷ்யாவுடன் போட்ட டீலிங்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் (Donald Trump) கருத்துக்களைப் பொருட்படுத்தாமல், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து கொள்முதல் செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்தியாவின் எரிசக்தி கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் அது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. டெல்லி, ரஷ்ய எண்ணெய்க்கான இறக்குமதியை நிறுத்திவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்த நிலையில், இந்த விளக்கம் வந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்திவிட்டதாக கேள்விப்பட்டதாக கூறினார். இதை அவர் ஒரு நல்ல நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார்..

ஆனால் ஏ.என்.ஐ (ANI) மற்றும் ராய்ட்டர்ஸ் (Reuters) வட்டாரங்கள் இந்திய அரசு அதிகாரிகளை மேற்கோள் காட்டி, டிரம்ப்பின் கூற்றை நிராகரித்து உள்ளன. இந்திய எரிசக்தி கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. விலை, தரம், போக்குவரத்து வசதி மற்றும் சந்தை நிலவரங்களின் அடிப்படையில் தான் எண்ணெய் நிறுவனங்கள் கொள்முதல் முடிவுகளை எடுக்கின்றன. ரஷ்ய இறக்குமதியை நிறுத்த எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை," என்று கூறி உள்ளன.

No official directive has been issued to oil companies to stop buying Russian crude oil

இந்தியா ரஷ்யா எண்ணெய் இறக்குமதி

வாய்ப்பில்லை என்று தெரிகிறது. உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா, ரஷ்யாவிலிருந்து கடல் வழியாக இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயை அதிகம் வாங்கும் நாடாகும். ரஷ்யாவின் முக்கிய வருவாய்க்கான ஆதாரமாக இது விளங்குகிறது.

இந்தியா ரஷ்யா எண்ணெய் வர்த்தகம்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (HPCL), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (BPCL) மற்றும் மங்களூர் ரிஃபைனரி பெட்ரோகெமிக்கல் லிமிடெட் (MRPL) போன்ற இந்தியாவின் அரசுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், கடந்த வாரமாக ரஷ்ய கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்யவில்லை.

இந்த நிறுவனங்கள் வழக்கமாக ரஷ்ய எண்ணெயை டெலிவரி அடிப்படையில் வாங்கி வருகின்றன. தற்போது, மத்திய கிழக்கு நாடுகளின் மின்பொருட்களான அபுதாபியின் முர்பான் கச்சா எண்ணெய் மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் எண்ணெய் போன்ற மாற்று வகைகளைச் சந்தையிலிருந்து பெற்று வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கருத்துக்களைப் பொருட்படுத்தாமல், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து கொள்முதல் செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்தியாவின் எரிசக்தி கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் அது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகஸ்ட் 7 முதல் இந்தியாவிற்கு எதிராக வர்த்தக வரி விதிக்கப்படும் என்று அறிவித்து இருந்தார். இன்று முதல் அந்த வரிகள் அமலுக்கு வருகின்றன. ஆனால் இந்தியா இதற்கு பதிலடி வரிகள் எதையும் விதிக்காது, இந்தியா இப்போதைக்கு வலுவான பதிலடி எதுவும் கொடுக்காது என்று டெல்லி தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டிரம்ப் எச்சரிக்கை இந்தியா

இந்திய இறக்குமதிப் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என அவர் தெரிவித்தார். மேலும் கூடுதல் அபராதங்கள் விதிக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இது முக்கிய சர்வதேச நிகழ்வாகும்.இந்த அறிவிப்பு குறித்து இந்திய அரசு உடனடியாக பதிலளிக்கவில்லை. பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருதரப்பு நலன் கருதி அமைதி உடன்பாட்டிற்கு இந்தியா தயாராக உள்ளது என்று டெல்லி தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் ராணுவ தளவாடத் தேவைகளில் பெரும்பாலானவை ரஷ்யாவிலிருந்தே பூர்த்தி செய்யப்படுகின்றன. அது மட்டுமல்லாமல், ரஷ்யாவிடமிருந்து எரிசக்தி வாங்கும் நாடுகளில் இந்தியாவும் முன்னணியில் உள்ளது. உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யாவின் போக்கை உலக நாடுகள் கண்டித்து வரும் நிலையில், ஆகஸ்ட் முதல் இந்தியாவுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். இது இந்தியாவுக்கு விதிக்கப்படும் அபராதமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+