புலியை அடுத்து பூனைகளுக்கும் பாசிட்டிவ்! அடுத்த அதிர்ச்சியில் அமெரிக்கா
நியூயார்க்: நியூயார்க் மாநிலத்தில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் இரண்டு பூனைகளுக்க கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் வீட்டு பிராணிகளும் பாதிக்கப்பட்டிருக்கும் முதல் நிகழ்வு அமெரிக்காவில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
Recommended Video
உலகிலேயே கொரோனா வைரஸ் தொற்றால் மோசமாக பாதிக்கப்படான நாடான அமெரிக்காவில் நியூயார்க்கில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் வீடுகளில் செல்லப்பிராணிகளா வளர்க்கப்படும் பூனைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் மூலம் வளர்ப்பு பூனைகளுக்கு கொரோனா பரவி இருப்பதாகவும் இந்த பூனைகள் லேசான சுவாச பிரச்சனைகக்கு பின்னர் குணமடையும் என்றும் அமெரிக்க வேளாண்மைத் துறை மற்றும் நோய் கட்டுப்பாடு மையம் தெரிவித்துள்ளது.

மிருக காட்சி சாலையில்
ப்ராங்க்ஸ் மிருகக்காட்சிசாலையில் சில புலிகள் மற்றும் சிங்கங்களுக்கு அண்மையில் கொரோனா வைரஸ் இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்ட பிறகு இந்போது பூனைகளுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகெங்கிலும் விலங்குகளும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாவது உறுதியாகி உள்ளத.

பிராணிகள் பரப்பவில்லை
ஆனால் சில விலங்குகள் மனிதர்களிடம் இருந்து கொரோனா வைரஸைப் பெற்றுள்ளன. ஆனால் செல்லப்பிராணிகள் மூலம் மனிதர்களுக்கு கொரோனா பரவுகிறது என்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

எந்த ஆதாரமும் இல்லை
அமெரிக்காவில் மனித-விலங்கு சுகாதார தொடர்புகளில் பணிபுரியும் சி.டி.சி அதிகாரி டாக்டர் கேசி பார்டன் பெஹ்ராவேஷ் கூறுகையில் "மக்கள் பீதியடைவதை நாங்கள் விரும்பவில்லை, மக்கள் செல்லப்பிராணிகளைப் பற்றி பயப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. அத்துடன் கொரோனா பரிசோதனையை விலங்களுக்க செய்வதை நாங்கள் விரும்பவில்லை. ஏனெனில் இந்த நோயை மக்களுக்கு பரப்புவதில் செல்லப்பிராணிகள் பங்கு வகிக்கிறது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றார்.

தொடர்பு வேண்டாம்
இருப்பினும், மக்கள் தங்கள் செல்லப்பிராணிகளை தங்கள் வீடுகளுக்கு வெளியே மக்கள் அல்லது விலங்குகளுடன் தொடர்புகொள்வதைத் தடுக்க சி.டி.சி பரிந்துரைக்கிறது - உதாரணமாக பூனைகளை வீட்டுக்குள்ளும் நாய்களையும் நாய் பூங்காக்களுக்கு வெளியே வைத்திருக்கவும் பரிந்துரைக்கிறது.

கொரோனா பரிசோதனை
கொரோனா வைரஸ் உடைய ஒருவருடன் செல்லப்பிராணிகள் தொடர்பில் இருந்தாலோ அல்லது நோயின் அறிகுறிகள் இருந்தால் தான் பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்படுகிறது. மற்றபடி செல்லப்பிராணிகளுக்கான கொரோனா வைரஸ் சோதனை பரிந்துரைக்கப்படுவதில்லை. என்று யு.எஸ்.டி.ஏ-வின் டாக்டர் ஜேன் ரூனி கூறினார். . சோதனை தேவையா என்பதை கால்நடை மருத்துவர்கள் முடிவு செய்ய மாநில அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவில்அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி நடக்கிறது
சீனாவில் ஒரு விலங்கு சந்தையில் இருந்து தான் மனிதர்களுக்கு கொரோனா தொற்று தொடங்கியது என்பது முக்கியமான கோட்பாடாக உள்ளது. ஆனால் வீடுகள், பண்ணைகள் மற்றும் பிற இடங்களில் விலங்குகளுக்கு பரவுவதற்கான சாத்தியக்கூறுகளைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகள் பணியாற்றி வருகின்றனர். இதுவரை, கால்நடைகள் அல்லது கோழிகள் கொரோனாவால் பாதிக்கப்படுவதாகத் தெரியவில்லை என்று டாக்டர் ரூனி கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications