Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்காவை அலறவிட்ட "பறக்கும் தட்டு”.. அதுவும் பயணிகள் விமானத்திற்கு அருகில்! வேகமாக பரவும் வீடியோ!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் பறக்கும் தட்டு, அதாவது யுஎஃப்ஓ (UFO) அடிக்கடி தென்படுவதாக அவ்வப்போது தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில், இன்றும் இதே போன்ற தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வேற்று கிரக மனிதர்கள் அடிக்கடி பூமிக்கு வந்து செல்கிறார்கள் என்றும், மனிதனின் கற்பனைக்கு அப்பாற்பட்ட செயல்களை எல்லாம் இவர்கள் செய்கிறார்கள் என்றும் ஹாலிவுட் திரைப்படங்கள் தொடங்கி தமிழ் திரைப்படங்கள் வரை ஏராளமான சினிமாகள் வந்துவிட்டன. ஆனால் இப்போது வரை யாரும் இந்த வேற்று கிரக மனிதர்கள் வாழ்வதாகவோ, அவர்கள் பூமிக்கு வருவதாகவோ உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் இது தொடர்பான செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

UFO flying in mid-air in America is being shared rapidly


அந்த வகையில் தற்போது அமெரிக்காவில் பறக்கும் தட்டை பார்த்ததாக சிலர் கூறியுள்ளனர். அதாவது கடந்த மாதம் நியூயார்க் நகரத்தில் உள்ள லாகார்டியா விமான நிலையத்திலிருந்து விமானம் ஒன்று புறப்பட்டிருக்கிறது. இந்த விமானம் போதுமான அளவு உயரத்தை எட்டியவுடன் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. அப்போது ஜன்னல் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண் ஒருவர், யுஎஃப்ஓ-வை பார்த்ததாக கூறியுள்ளார். அது ஒரு சிலிண்டர் போன்று உருளையாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.

மார்ச் மாதம் 25ம் தேதியன்று இந்த சம்பவம் நடந்திருக்கிறது. மிச்செல் ரெய்ஸ் எனும் பெண்தான் இந்த சம்பவத்தை நேரில் பார்த்திருக்கிறார். இந்த சம்பவத்தை அவர் வீடியோ எடுத்ததாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “யுஎஃப்ஓ-வை பார்த்தவுடன் இது குறித்து விண்வெளி தொடர்பான அதிகாரிகளுக்கு தெரிவிக்க FAA க்கு உடனே மெயில் அனுப்பினேன். இது ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தலாக கூட இருக்கலாம். ஆனால், அவர்கள் என்னுடைய மெயிலை அங்கீகரிக்கவில்லை. இது உண்மை என்று அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை” என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாது இவருடன் பயணித்த மற்றொரு பயணியும் இந்த மர்ம பொருளை பார்த்திருக்கிறார். ஆனால் இது ஒரு செய்தி சேனலின் ஹெலிகாப்டர் அல்லது ட்ரோன் அல்லது ராணுவத்திற்கு சொந்தமான பொருளாக இருக்கலாம் என்று விமானத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இது குறித்து மியூச்சுவல் யுஎஃப்ஒ நெட்வொர்க்கின் மாநில இயக்குநரான தாமஸ் வெர்ட்மேன், விமானத்துறை அதிகாரிகளின் கூற்றை நிராகரித்துள்ளார்.


இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “ட்ரோன் இவ்வளவு உயரத்தில் பறக்க வாய்ப்பில்லை. எனவே, மிச்செல் ரெய்ஸ் பார்த்தது நிச்சயமாக ட்ரோனாக இருக்க வாய்ப்பில்லை. அதேபோல, இது செய்தி சேனலுக்கு சொந்தமான ஹெலிகாப்டர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஹெலிகாப்டர் எப்படி விமானத்திற்கு நெருக்கமாக பறக்க அனுமதிக்கப்படும்? சிலர் இதை ராணுவத்திற்கு சொந்தமான பொருள் என கூறுகின்றனர்.

ராணுவம் மக்களின் உயிருடன் விளையாடாது. எனவே எதுவாக இருந்தாலும், விமானப் போக்குவரத்து முற்றிலும் இல்லாத அல்லது குறைந்த அளவில் விமான போக்குவரத்து கொண்ட இடங்களில்தான் சோதனைகளை மேற்கொள்ளும். இப்படி பட்ட பகலில் பயணிகள் விமானத்திற்கு அருகில் ராணுவ அதிகாரிகள் தங்கள் பறக்கும் பொருட்களை கொண்டுவர எப்போதுமே ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

இன்னும் சிலரோ இதை மற்றொரு விமானம் என்று கூறுகின்றனர். அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பே இல்லை. அந்த மர்ம பொருள் பறந்த வேகத்தை பாருங்கள். எந்த விமானமும் இவ்வளவு நெருக்கத்தில் இந்த கோணத்தில் பறக்காது. விமான நிலையத்தின் அருகே பறக்கும் விமானங்கள் ஒன்று தரையிறங்கும் அல்லது மேலெழும். அப்படி மேலெழும் விமானங்கள் அதிகபட்சமாக 290 கி.மீ வேகத்தில் பறக்கும். தரையிறங்கும் விமானங்கள் 175 கி.மீ வேகத்தில் தரையிறங்கும்.

ஆனால் வீடியோவில் உள்ள பொருள் 370 கி.மீ வேகத்தில் பறந்து சென்றிருக்கிறது. விமானம் என்றால் அதற்கு ஒரு வடிவம் இருக்கிறது. ஆனால் இந்த பொருளுக்கு இறக்கையே இல்லை. எனவே சந்தேகத்திற்கு இடமின்றி இது ஒரு மர்ம பொருள் அல்லது யுஎஃப்ஓ என்பதை அதிகாரிகள் ஒப்புக்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

எனினும் அமெரிக்காவில் யுஎப்ஃஓ குறித்து மீண்டும் பேச்சுக்கள் அடிப்பட தொடங்கியிருக்கின்றன. இருப்பினும் பறக்கும் தட்டு, மர்ம பொருள் எல்லாம் ஏன் அமெரிக்காவில் மட்டும் அல்லது அமெரிக்கர்களின் கண்களுக்கு மட்டும் தென்படுகிறது என சோஷியல் மீடியாவில் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+