WHOக்கு ஊ ஊ..அதிரடியாய் ஆப்படித்த டிரம்ப்! உலகத்துக்கே பெரிய பிரச்சனை! வார்னிங் கொடுத்த பில் கேட்ஸ்
நியூயார்க்: உலக சுகாதார அமைப்பில் (WHO) இருந்து அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது. அமெரிக்கா விலகினால் பல சிக்கல் வரும் என நீண்ட காலமாக எழுந்து வந்த எச்சரிக்கைகள், விமர்சனங்கள் அனைத்தையும் புறக்கணித்து, வியாழக்கிழமை இந்த முடிவை அமெரிக்கா நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கும், உலகளாவிய பொது சுகாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என பலரும் எச்சரித்து வந்த நிலையில் டிரம்ப் துணிச்சலாக இந்த முடிவை அறிவிட்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்று காலத்தில் WHO அமைப்பு சரியான முறையில் செயல்படவில்லை என்பதே அமெரிக்காவின் பிரதான குற்றச்சாட்டு. இதன் அடிப்படையில்தான், 2025-ம் ஆண்டில் ஜனாதிபதியாக பதவியேற்ற முதல் நாளிலேயே, டொனால்ட் டிரம்ப் நிர்வாக ஆணை மூலம் WHO-விலிருந்து விலகும் முடிவை அறிவித்தார்.
அந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தற்போது அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அமைப்பிலிருந்து வெளியேறியுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க சுகாதாரத் துறை மற்றும் வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், WHO-வுடன் இனி மிகக் குறைந்த அளவிலான தொழில்நுட்ப தொடர்புகள் மட்டுமே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா WHO விலகல்
மேலும், பார்வையாளர் உறுப்பினராக கூட இணைவதற்கான திட்டம் எங்களிடம் இல்லை. மீண்டும் WHO-வில் சேரவும் எந்த எண்ணமும் இல்லை என மூத்த அரசு சுகாதார அதிகாரி ஒருவர் தெளிவுபடுத்தியுள்ளார். இனிமேல், தொற்று நோய் கண்காணிப்பு உள்ளிட்ட பொது சுகாதாரப் பணிகளில், அமெரிக்கா நேரடியாக பிற நாடுகளுடன் இணைந்து செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, WHO-வில் இருந்து விலகுவதற்கு முன், நிலுவையில் உள்ள கட்டணங்களை செலுத்த வேண்டும் என்ற அமெரிக்க சட்ட விதியை அரசு பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு
சுமார் 260 மில்லியன் டாலர் கட்டணம் செலுத்தப்பட வேண்டியிருந்த நிலையில், அந்த விதி சட்டபூர்வமாக கட்டாயமில்லை என அமெரிக்க வெளியுறவுத் துறை மறுப்பு தெரிவித்துள்ளது. "அமெரிக்க மக்கள் ஏற்கனவே போதுமான அளவு செலுத்திவிட்டனர்" என அந்தத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். அமெரிக்க அரசின் நிதியுதவி நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, WHO கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஜெனீவாவில் உள்ள WHO தலைமையகத்தில் இருந்து அமெரிக்கக் கொடி அகற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிரம்ப் முடிவு
இந்த நிதி இழப்பின் காரணமாக, WHO தனது மேலாண்மை குழுவை பாதியாகக் குறைத்ததுடன், பல திட்டங்களுக்கான செலவுகளையும் வெகுவாக குறைத்துள்ளது. நடப்பு ஆண்டின் நடுப்பகுதிக்குள், அமைப்பில் பணியாற்றும் ஊழியர்களில் சுமார் 25 சதவீதம் பேர் பணிநீக்கம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதுவரை WHO-வின் மொத்த நிதியில் சுமார் 18 சதவீதம் அமெரிக்கா வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த விலகல் உலகளாவிய சுகாதார அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்கு பெரும் சவாலாக மாறும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
டெட்ரோஸ் அதானோம்
WHO பொதுச் செயலாளர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயசஸ் உட்பட பல்வேறு உலக சுகாதார வல்லுநர்கள், இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து பிப்ரவரியில் நடைபெறும் WHO நிர்வாகக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பில் கேட்ஸ்
இதற்கிடையே, உலக சுகாதார துறையின் முக்கிய நன்கொடையாளரான பில் கேட்ஸ், அமெரிக்கா உடனடியாக தனது முடிவை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு இல்லை என்றாலும், மீண்டும் WHO-வில் இணைவதற்காக தாம் தொடர்ந்து வலியுறுத்துவேன் என தெரிவித்துள்ளார். "உலகத்திற்கு WHO அவசியம்" என அவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் இந்த விலகல், உலகம் முழுவதும் நோய் தடுப்பு, கண்காணிப்பு மற்றும் அவசர சுகாதார நடவடிக்கைகளில் புதிய நிச்சயமற்ற நிலையை உருவாக்கியுள்ளதாக உலக சுகாதார நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications