அபார்ஷன் முடிவு தெரியட்டும்.. அதுவரை "அதுக்கு" ஸ்டிரைக்.. பக்கத்துல வராதீங்க.. அலறிப்போன ஆண்கள்!
செக்ஸ் ஸ்டிரைக்கில் அமெரிக்க பெண்கள் ஈடுபட்டு வருகிறார்கள்
நியூயார்க்: அபார்ஷன் விவகாரத்தில் ஒரு முடிவு தெரியட்டும்.. அதுவரை ஆண்களுடன் செக்ஸ் வைத்து கொள்ளாமலேயே, செக்ஸ் ஸ்டிரைக்கில் ஈடுபடுவோம் என்று பல அமெரிக்க பெண்கள் அறிவித்துள்ளனர்.. இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம்?
அபார்ஷன் என்பதை யாருமே அங்கீகரிப்பது இல்லை.. இந்தியா உட்பட கருக்கலைப்பு செய்வது ஒரு குற்றமாகவே பார்க்கப்படுகிறது..
முன்பு போல யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் அபார்ஷன் செய்து கொள்ளலாம் என்ற முறை இப்போது இல்லை.. நிறைய தடைகள், கட்டுப்பாடுகள், உள்ளன.

புது சட்டம்
மிகமோசமான நிலையில் உடல்நிலை இருந்தால் மட்டுமே, அதுகூட கோர்ட் உத்தரவை பெற்றே பல நாடுகளில் அபார்ஷன்கள் செய்யப்பட்டு வருகின்றன.. இதில் அமெரிக்காவும் ஒன்று.. கருக்கலைப்பு சட்டவிரோதம் என்ற சட்டத்தை அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலும் அமல்படுத்தியுள்ளனர். கருவில் சிசுவின் இதயதுடிப்பு உணரப்பட்ட காலத்திற்கு பிறகு, அபார்ஷன் செய்யவே கூடாதாம்.. ஒருவேளை அபார்ஷன் செய்வதாக இருந்தால், அதுக்கு முன்னாடியே செய்து கொள்ள வேண்டும்.. இதுதான் அந்த சட்டம்.. ஆனால் இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது..

வாய்ப்பில்லை
சிசுவின் இதயதுடிப்பானது, பெரும்பாலும் 6 வாரங்களுக்கு பிறகுதான் தெரிய ஆரம்பிக்கும்.. ஆனால், இந்த 6 வார காலகட்டத்திற்குள், தாங்கள் கருவுற்றிருக்கிறோம் என்பதே சம்பந்தப்பட்ட பெண்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.. அப்படியிருக்கும்போது, சிசுவின் இதயதுடிப்பு உணர்ந்தபிறகு அபார்ஷன் செய்ய முடியும்? இது கடுமையான சட்டம்.. பெண்களுக்கு இது ஒத்துவராது என்று போர்க்கொடி தூக்கி உள்ளனர்..

சுப்ரீம் கோர்ட்
அதனால் அங்குள்ள சுப்ரீம்கோர்ட்டையும் பெண்கள் நாடினர்.. ஆனால், அரசின் முடிவில் தலையிட முடியாது என்று கோர்ட் ஒதுங்கி கொண்டது.. இதனால் கோர்ட்டிலும் தங்களுக்கு நியாயம் கிடைக்காத அதிருப்தியில், தாங்களே தங்களுக்கு தீர்வு என்று முடிவுசெய்து பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.. இந்த போராட்டத்துக்கு புகழ்பெற்ற பாடகியும், நடிகையுமான பெட்டே மிட்லர் அழைப்பு விடுத்துள்ளார்..

அழைப்பு
இதை பற்றி அவர் சொல்லும்போது, "அபார்ஷன் சட்டத்தை அரசு முதலில் திருத்தம் செய்யட்டும்.. அதுவரையில் ஆண்களுடன் செக்ஸில் ஈடுபடாமல், செக்ஸ் ஸ்டிரைக்கில் பெண்கள் ஈடுபட வேண்டும்.. ஏனென்றால் இது ஒன்றும் பணமோ, பொருளோ, துப்பாக்கியோ, போர் பற்றியது இல்லை.. இது நம்முடைய உடம்பை பற்றியது.. உடல்நலனை சார்ந்தது.. பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை.. எனவே, குழந்தைகள் பெற்று கொள்வதில் முழு சுதந்திரம் நமக்கு கிடைக்கும்வரை செக்ஸ் ஸ்டிரைக்கில் ஈடுபடுவோம்" என்று அவர் பெண்களை கேட்டுக் கொண்டுள்ளார்..
-
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி! -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
போச்சு.. ஈரானின் ஈரலை அறுத்த அமெரிக்கா! நடன்ஸ் அணுமையம் மீது இஸ்ரேல் அட்டாக்! நெருங்கும் கிளைமேக்ஸ்? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
3ம் உலகப்போர் வாசலில் நிற்கும் உலகம்? ஈரானை வீழ்த்த அணு குண்டை கையில் எடுக்கும் இஸ்ரேல், அமெரிக்கா? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications