பாகிஸ்தானுக்கு உதவியது ஏன்? டிரம்பிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அமெரிக்க ராணுவ தலைகள்.. ட்விஸ்ட்
நியூயார்க்: IMFல் பாகிஸ்தானுக்கு நிதி வழங்குவதற்கு சாதகமாக வாக்களித்ததற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்சி நிர்வாகம் மீது அந்நாட்டு ராணுவ தலைகள் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் தனது பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக தங்களுக்கு 8,500 கோடி ரூபாய் கடன் வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தை பாகிஸ்தான் நாடியது. இந்த வாக்கெடுப்பில் இந்தியாவால் எதிர்த்து வாக்களிக்க முடியாத நிலை இருந்தது. இதனால் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இந்தியா புறக்கணித்தது. இதனை அடுத்து தங்களுக்கு உடனடியாக 8500 கோடி ரூபாய் கடன் வழங்க ஐ எம் எப் ஒப்புதல் வழங்கி விட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

இதற்கு அதிக நிதியை வழங்கும் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆதரவாக நிதி வழங்க ஒப்புக்கொண்டு வாக்களித்தது. இதன் காரணமாக இந்தியாவின் ரூ.500 கோடி நிதி உட்பட 8,500 கோடி ரூபாய் பாகிஸ்தானுக்கு வழங்கப்படும்.
எச்சரிக்கை
IMFல் பாகிஸ்தானுக்கு நிதி வழங்குவதற்கு சாதகமாக வாக்களித்ததற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்சி நிர்வாகம் மீது அந்நாட்டு ராணுவ தலைகள் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னாள் ராணுவ வீரரும் , அமெரிக்கன் எண்டர்பிரைசஸ் இன்ஸ்டிடியூட்டில் மூத்த உறுப்பினரும், பென்டகனின் முன்னாள் ஆலோசகருமான மைக்கேல் ரூபின், பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் பிணை வழங்க சர்வதேச நாணய நிதியம் எடுத்த நடவடிக்கையில் டிரம்ப் நிர்வாகத்தின் செயலற்ற தன்மையை கடுமையாக சாடினார்.
பயங்கரவாதத்தால் வழிநடத்தப்படும், சீனாவை ஆதரிக்கும் பாகிஸ்தான் நாட்டிற்கு 1 பில்லியன் டாலர்களை விடுவிப்பது... பாகிஸ்தானைப் பற்றியது மட்டுமல்ல.. இது சர்வதேச அரசியல் பற்றியது. அதிபர் டொனால்ட் டிரம்பின் கையாலாகாததனத்தை காட்டுகிறது. அமெரிக்காவின் பணத்தை தீவிரவாத நாட்டிற்கு வழங்குவது சரியாக இருக்காது.
உலகின் மிகவும் ஊழல் நிறைந்த நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானுக்கு IMF 1 பில்லியன் டாலர்களை வழங்க ஒப்புக்கொண்டது தவறானது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி, முஸ்லிம் அல்லாதவர்களை அவர்களது குடும்பங்கள் முன்னிலையில் கொன்ற பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற பெரும் நிதியை பாகிஸ்தானை நம்பி வழங்கினால் அது ஐஎம்எஃப்க்கு தான் பெரிய பிரச்சனையை உருவாக்கும்
அதே தீவிரவாத குழுக்களை இந்தியா தாக்கியது. அப்போது பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் சீருடையில் அந்த பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டனர். அதன் பின்னர் இந்தியாவைத் தாக்கினர். ஆனால் அதே காலகட்டத்தில் நாம் அவர்களுக்கு நிதி உதவி வழங்கினோம். ஐஎம்எப் இடம் இருந்து நிதி வாங்கி பாகிஸ்தான் அரசு ராணுவத்திற்கும் தீவிரவாத ஊக்கத்திற்கும் செயல்படுகிறது . ஆனால் இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அமெரிக்கா இவர்களுக்கு பணம் வழங்கி உள்ளது.
கடந்த 35 ஆண்டுகளில் இதுவரை 28 முறை பாகிஸ்தான் கடன் வாங்கி இருக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் பாகிஸ்தான் வளரவில்லை. கடனில் இருந்து மீளவில்லை. பொருளாதார ரீதியாக முன்னேறவில்லை. மாறாக தீவிரவாதத்தை வளர்த்து உள்ளது. அமெரிக்காவின் பணத்தை தீவிரவாத நாட்டிற்கு வழங்குவது சரியாக இருக்காது. அதிபர் டொனால்ட் டிரம்பின் கையாலாகாததனத்தை காட்டுகிறது, என்று அமெரிக்கன் எண்டர்பிரைஸ் இன்ஸ்டிடியூட்டில் மூத்த உறுப்பினரும், பென்டகனின் முன்னாள் ஆலோசகருமான மைக்கேல் ரூபின் தெரிவித்துள்ளார்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications