உக்ரைன் மீதெல்லாம் அக்கறையே இல்லை.. இந்தியாவை டிரம்ப் எதிர்க்க காரணமே வேறு.. பக்கா சுயநலம்!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைன் போருக்கு இடையே இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்தியா ரஷ்யாவிற்கு ஆதரவளிப்பதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார். ஆனால், பல நிபுணர்கள், டிரம்பின் இந்த விமர்சனங்கள் போரைப் பற்றியது அல்ல, மாறாக அமெரிக்காவின் வர்த்தக நலன்களைப் பற்றியது என்று கருதுகின்றனர்.
டிரம்பின் சிறப்புத் தூதராகப் பரிந்துரைக்கப்பட்ட செர்ஜியோ கோர் சமீபத்தில் ஒரு கருத்தை தெரிவித்து உள்ளார். அமெரிக்கா தனது கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை இந்தியா வாங்க வேண்டும் என்று விரும்புவதாகவும், ரஷ்ய கச்சா எண்ணெயைச் சார்ந்து இருப்பதை இந்தியா குறைக்க வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாகவும் அவர் தெரிவித்தார். அமெரிக்கா இந்தியாவிற்கு அதிக எரிசக்தியை விற்க விரும்புவதே இதற்குக் காரணம்.

அமெரிக்கா பிஸ்னஸ்
அமெரிக்காவிற்கு போர் எல்லாம் முக்கியம் இல்லை. அமெரிக்காவிற்கு பிஸ்னஸ்தான் முக்கியம். டிரம்ப் ஒரு பிஸ்னஸ் மேன் என்பதை நிரூபிக்கும் விதமாக இதை செய்கிறார். இந்தியாவில் இன்று உலகின் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கம் உள்ளது. எதிர்காலத்தில் மில்லியன் கணக்கான மக்களுக்கு அதிக பெட்ரோல், டீசல் தேவைப்படும் என்பதால், இது அமெரிக்க நிறுவனங்களுக்கு ஒரு பெரிய சந்தையாகவும், வாய்ப்பாகவும் உள்ளது, என்று அவர் கூறி உள்ளார்.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன. வாஷிங்டன், அமெரிக்கப் பொருட்களுக்கான சந்தைகளை இந்தியா திறந்துவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. ஆனால், அமெரிக்க விவசாய மற்றும் பால்பொருட்களுக்கு அனுமதி வழங்குவது போன்ற சில விஷயங்களில் இந்தியா பின்வாங்க மறுத்துவிட்டது.
டிரம்பின் இந்தியாவை நோக்கிய விமர்சனங்கள் உக்ரைனை விட, எரிசக்தி வர்த்தகம் பற்றியது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்திய நடுத்தர வர்க்கம் அமெரிக்க கச்சா எண்ணெயின் வாடிக்கையாளர்களாக மாற வேண்டும் என்று அமெரிக்கா விரும்புவதாகவும், ரஷ்யா விவகாரத்தை ஒரு அழுத்தக் கருவியாகப் பயன்படுத்துவதாகவும் அவர்கள் விளக்கினர். அதாவது உக்ரைன் போர் என்று டிரம்ப் சொல்வது எல்லாம் வெறும் பூச்சாண்டிதான்..டிரம்ப் அமெரிக்க கச்சா எண்ணெயை இந்தியாவிடம் விற்க வேண்டும் என்று நினைக்கிறார். வேறு மனிதாபிமான காரணம் எதுவும் இல்லை என்று இந்திய நடுத்தர வர்க்கம் அமெரிக்க கச்சா எண்ணெயின்
இந்தியா டிரம்ப் வர்த்தக போர்
ஆகஸ்ட் 27 முதல் இந்தியா மீது டிரம்ப் 25% பரஸ்பர வரிகளையும், ரஷ்ய எண்ணெய் கொள்முதல் செய்ததற்காக இந்தியா மீது கூடுதலாக 25% வரிகளையும் விதித்துள்ளார். இதனால் இந்தியா மீதான மொத்த வரிகள் 50% ஆக உயர்ந்துள்ளது. டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% கூடுதல் வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த உத்தரவில், ரஷ்ய எண்ணெயை இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது அமெரிக்காவிற்கு அசாதாரணமான மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை கவலைகள் மற்றும் பிற வர்த்தக சட்டங்களை மேற்கோள் காட்டி அவர் இந்தியாவிற்கு எதிராக அபராதம் விதித்தார்.
அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள 50% இறக்குமதி வரிகளுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீன மக்கள் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போரின் வெற்றி மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போரின் 80வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் கருத்தரங்கில் பேசிய ஸு, "அமெரிக்கா நீண்ட காலமாக சுதந்திர வர்த்தகத்தால் பயனடைந்துள்ளது. ஆனால் இப்போது அது அதிக விலைகளைக் கோருவதற்கு வரிகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. இந்தியாவின் மீது 50% வரி விதிப்பது நியாயமற்றது, மோசமானது, அதை சீனா உறுதியாக எதிர்க்கிறது," என்று குறிப்பிட்டார்.
-
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications