ஐரோப்பாவை மிரட்டிய டிரம்ப்..ஸ்மார்ட்டாக காய் நகர்த்தும் இந்தியா..அமெரிக்காவிற்கு காத்திருக்கும் ஷாக்
நியூயார்க்: இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளன. வரும் காலங்களில் இந்த வர்த்தகம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வர்த்தகம் குறித்து இந்தியாவுக்குத் தொடர்ந்து மாறுபட்ட சிக்னல்களை அளித்து வருகிறார். ஒருபுறம் பிரதமர் நரேந்திர மோடியுடன் நட்பு மற்றும் பேச்சுவார்த்தைகள் குறித்துப் பேசுகிறார். மறுபுறம், இந்திய மற்றும் சீனப் பொருட்கள் மீது 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்துகிறார். டிரம்பின் இந்த அணுகுமுறை இந்தியாவுக்குக் குழப்பத்தையும், அபாயத்தையும் உருவாக்குகிறது.

ஏற்கனவே, இந்திய இறக்குமதிப் பொருட்கள் மீதான வரிகளை அமெரிக்கா 50% ஆக இருமடங்காக உயர்த்தியுள்ளது. ரஷ்யாவிடமிருந்து மலிவான எண்ணெய் வாங்கியதற்கான தண்டனையாக இது பார்க்கப்பட்டது. இப்போது, ஐரோப்பாவும் இதே பாதையைப் பின்பற்ற வேண்டும் என்று டிரம்ப் விரும்புகிறார். இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு இது நிலையான வர்த்தகக் கொள்கையாக இல்லாமல், திடீர் அதிர்ச்சியாகவே உள்ளது.
டிரம்ப் ஐரோப்பாவிற்கு அழுத்தம்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மீது அழுத்தம் கொடுக்கும் உத்தியின் ஒரு பகுதியாக, சீனா மற்றும் இந்தியப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறாராம். கடந்த 4 நாட்களுக்கு முன்பே டிரம்ப் இதற்கான கோரிக்கையை வைத்த நிலையில் டிரம்ப் மீண்டும் ஐரோப்பாவிற்கு அழுத்தம் கொடுத்துள்ளாராம்.
ஆகஸ்ட் 27 முதல் இந்தியா மீது டிரம்ப் 25% பரஸ்பர வரிகளையும், ரஷ்ய எண்ணெய் கொள்முதல் செய்ததற்காக இந்தியா மீது கூடுதலாக 25% வரிகளையும் விதித்துள்ளார். இதனால் இந்தியா மீதான மொத்த வரிகள் 50% ஆக உயர்ந்துள்ளது. டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% கூடுதல் வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த உத்தரவில், ரஷ்ய எண்ணெயை இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது அமெரிக்காவிற்கு அசாதாரணமான மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை கவலைகள் மற்றும் பிற வர்த்தக சட்டங்களை மேற்கோள் காட்டி அவர் இந்தியாவிற்கு எதிராக அபராதம் விதித்தார்.
அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள 50% இறக்குமதி வரிகளுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீன மக்கள் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போரின் வெற்றி மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போரின் 80வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் கருத்தரங்கில் பேசிய ஸு, "அமெரிக்கா நீண்ட காலமாக சுதந்திர வர்த்தகத்தால் பயனடைந்துள்ளது. ஆனால் இப்போது அது அதிக விலைகளைக் கோருவதற்கு வரிகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. இந்தியாவின் மீது 50% வரி விதிப்பது நியாயமற்றது, மோசமானது, அதை சீனா உறுதியாக எதிர்க்கிறது," என்று குறிப்பிட்டார்.
இந்தியா ஐரோப்பா உறவு
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளன. வரும் காலங்களில் இந்த வர்த்தகம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருதரப்பு வர்த்தகம் ஏற்கனவே 137 பில்லியன் டாலராக இருக்கும் நிலையில், இரண்டு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவுகளை மாற்றியமைக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் இதை முடிக்கும் நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
அதாவது டிரம்ப் என்னதான் எதிர்ப்பு கொடுத்தாலும், இந்தியா அந்த எதிர்ப்பை கண்டுகொள்ளாது.. ஐரோப்பாவுடன் ஒப்பந்தங்களை செய்ய முயற்சி செய்யும்.. டிரம்ப் அழுத்தம் கொடுத்தாலும் அதை மீறி இந்தியா.. ஐரோப்பாவுடன் ஒப்பந்தத்தை மேற்கொள்ளும். அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு இந்தியா அடிபணியாது என்றே தகவல்கள் வருகின்றன.
-
ஈரான் மீது முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா.. ஹார்முஸ் ஜலசந்தியும் க்ளோஸ்.. ஒரே பதற்றம் -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு












Click it and Unblock the Notifications