இந்தியா மீது.. மும்முனை தாக்குதலை நடத்தும் டொனால்ட் டிரம்ப்.. எல்லா பக்கமும் பிரஷர் போடுறாரே!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் மீது மும்முனைத் தாக்குதலைத் தொடுத்துள்ளார். முதலில், ஈரானின் சாபஹார் துறைமுகத்துக்கான தடையை நீக்கும் முடிவை ரத்து செய்தார். சில வாரங்களுக்குப் பிறகு, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 50% வரி விதித்தார். தற்போது, H-1B விசா திட்டத்தை கிட்டத்தட்ட முடக்கிவிட்டது. இது இந்தியாவின் பொருளாதார மற்றும் ராஜதந்திர உறவுகளுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள இந்த விரிசல் பாகிஸ்தானுக்கும் சாதகமாக மாறி உள்ளது.சவுதி அரேபியா உடன் பாகிஸ்தான் மேற்கொண்டு உள்ள ஒப்பந்தம் இந்தியாவிற்கு பெரிய சிக்கலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து இந்த நிகழ்வை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், இந்தியாவின் தேசிய நலன்களைப் பாதுகாக்கவும், அனைத்துத் துறைகளிலும் விரிவான தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Donald Trump India

ஏற்கனவே அமெரிக்கா பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை பாராட்டியுள்ளது. பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாத அமைப்புகளை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான் தொடர்ந்து வெற்றி பெறுவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தான் சவுதி ஒப்பந்தம்

இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமெரிக்கா-பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு நாடுகளும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான தங்களின் உறுதிப்பாட்டை இரு தரப்பும் மீண்டும் வலியுறுத்தின. பாகிஸ்தான் உடன் அமெரிக்கா நெருக்கமான நிலையில் தற்போது சவுதி அரேபியாவும் பாகிஸ்தான் உடன் டீலிங் போட்டு உள்ளது.

சவுதி அரேபியாவும் பாகிஸ்தானும் ரியாத்தில் ஒரு முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளில் ஏதேனும் ஒன்று தாக்கப்படும் பட்சத்தில், அது மற்ற நாட்டின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா கைவிட்டுவிட்டது

இந்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்காவுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்ற போதிலும், அமெரிக்கா இது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இது இந்தியாவின் பாதுகாப்பு குறித்த அமெரிக்காவின் அலட்சியப் போக்கைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். H-1B விசா திட்டம், வரி விதிப்பு, ஈரானின் சாபஹார் துறைமுகத்துக்கான தடையை நீக்கும் முடிவை ரத்து என்று டிரம்ப் மும்முனை தாக்குதல் நடத்தி வருகிறார் .

H-1B விசா திட்டம் தொடர்பாக டிரம்ப் நேரடியாக இந்தியாவைக் குறிப்பிடவில்லை என்றாலும், இந்த மூன்று நடவடிக்கைகளும் இந்தியா-அமெரிக்கா உறவுகளின் அடிப்படையையே உலுக்கியுள்ளன. கடந்த வாரம் இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையே நல்லுறவு ஏற்படும் வகையில் சில போஸ்டுகள் பரிமாறப்பட்ட நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த திருப்பம் நிபுணர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த அணுகுமுறை, இரு நாடுகளுக்கிடையேயான உறவை மீட்டெடுக்கும் முயற்சிகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

இந்தியா-அமெரிக்காவுக்கு மேலும் ஒரு மோசமான செய்தி என்று இதை தேசிய பாதுகாப்பு மற்றும் இந்தோ-பசிபிக் ஆய்வாளர் டெரெக் க்ராஸ்மேன் குறிப்பிட்டுள்ளார். இந்த உறவு சீரடைய வாய்ப்பு குறைவு என்று அவர் கூறி உள்ளார்.

H-1B விசாவில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியாவை பணிய வைப்பதற்கான ஒரு அழுத்த உத்தி என்று சிலர் கருதுகின்றனர். இருப்பினும், வெள்ளை மாளிகையின் உள் வட்டாரங்கள், இந்த இரண்டு விஷயங்களுக்கும் தொடர்பில்லை என்று கூறுகின்றன. வெளிநாட்டு நிறுவனங்களும் அமெரிக்காவின் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை மறுப்பதாக டிரம்ப்பின் MAGA குழு தீவிரமாக நம்புவதால், டிரம்ப் இந்த சீர்திருத்தத்தை மேற்கொண்டுள்ளார் என்கின்றனர்.

பியூஸ் கோயல் பயணம்

பிரதமர் மோடி தனது அமைச்சரவையில் உள்ள முக்கிய அமைச்சரான பியூஸ் கோயலை அமெரிக்காவிற்கு அனுப்ப உள்ளார். மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் இன்று அமெரிக்காவுக்குப் பயணம் செய்யவுள்ளார். இந்தத் தகவலை மத்திய அரசின் அதிகாரபூர்வ அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

முக்கிய சந்திப்பு

இந்தியா - அமெரிக்கா இடையிலான மோதலை தவிர்க்கும் விதமாக மோடி பியூஸ் கோயிலை அமெரிக்காவிற்கு அனுப்ப உள்ளார். இந்தச் சந்திப்பின்போது, இரு தரப்பினரும் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்த ஒப்புக்கொண்டதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சரின் இந்தப் பயணம், கடந்த மே மாதம் வாஷிங்டனில் நடைபெற்ற வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக அமைகிறது.

தனது அமெரிக்கப் பயணத்தின்போது, பியூஷ் கோயல் இது தொடர்பான உயர்மட்டக் குழுவுடன் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்வதே இந்தப் பேச்சுவார்த்தைகளின் முக்கிய நோக்கம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+