bmw, பென்ஸ் காரில் போறாங்க.. டாக்டர்களுக்கு 5 லட்சம் சம்பளம்.. ஐடி ஊழியருக்கு 30k தான் என குமுறல்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஏஐ வளர்ச்சியால் பெரிய ஐடி கம்பெனிகளில் என் போன்ற Tier-1 ஊழியர்களே பணிநீக்கம் செய்யப்படும் சூழலில், 100% வேலை பாதுகாப்பு கொண்ட ஒரே துறை மருத்துவ துறை (எம்பிபிஎஸ்) மட்டுமே. ஒரு டாக்டரால் வேலையின்றி இருக்கவே முடியாது. ஐடி போல் அனுபவம் கூடும்போது வேலையை விட்டு தூக்கிடுவார்கள் என்ற பயமும் இல்லை. சம்பளம்தான் கூடுகிறது. சாதாரண டாக்டரே மாதம் ரூ.5 லட்சம் சம்பாதிக்கிறார். பல டாக்டர்கள் பிஎம்டபிள்யு, பென்ஸ், ஆடி கார்களில் வலம் வருகிறார்கள். ஆனால் ஒரு ஐடி பிரெஸரின் முதல் சம்பளமே ரூ.30 ஆயிரம்தான்.ஆனால் இந்தியாவில் டாக்டருக்கு படிப்பதே வேஸ்ட் என சொல்கிறார்கள்.. ஏன் என்று எனக்கு தெரியவில்லை'' என்று அமெரிக்க ஐடி கம்பெனியில் பணி நீக்கம் செய்யப்பட்ட இந்தியர் ரெட்டிட் தளத்தில் குமுறியுள்ளார்.

அமெரிக்கத் தகவல் தொழில்நுட்பத் துறையில் நிலவும் பொருளாதார மந்தநிலை மற்றும் பணிநீக்கக் கலாச்சாரம் பலரது வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளது. இந்தச் சூழலில், அமெரிக்க நிறுவனம் ஒன்றில் பணிநீக்கம் செய்யப்பட்ட இந்திய ஊழியர் ஒருவர் ரெடிட் சமூக வலைதளத்தில் தனது ஆதங்கத்தைப் பகிர்ந்துள்ளார். அவரது இந்தப் பதிவு இப்போது இணையத்தில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

US IT Layoff Impact Indian Employee Reddit Post Comparison with Doctors Salary and Job Security

ஏஐ வளர்ச்சியால் பெரிய ஐடி நிறுவனங்களில் இப்போதெல்லாம் சீனியர் ஊழியர்களுக்குக் கூட பாதுகாப்பு இல்லை. என்னைப் போன்ற டயர்-1 நிறுவன ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் தூக்கப்படலாம் என்ற அச்சத்துடனே வாழ்கிறார்கள். ஆனால், இந்தியாவில் 100 சதவீதம் வேலை பாதுகாப்பு கொண்ட ஒரே துறை எம்பிபிஎஸ் மட்டுமே என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐடி துறையில் அனுபவம் கூடும்போது சம்பளம் கூடினாலும், எந்த நேரத்திலும் பணிநீக்கம் செய்யப்படலாம் என்ற பயம் கூடவே வருகிறது. ஆனால் மருத்துவத் துறையில் அனுபவம் கூடக் கூட மதிப்பும் வருமானமும் மட்டுமே உயர்கிறது. ஒரு மருத்துவர் ஒருபோதும் வேலையில்லாமல் இருக்க முடியாது என்பதுதான் எதார்த்த நிலை என்று அமெரிக்கா வாழ் ஐடி ஊழியர் தனது பதிவில் ஆதங்கத்தை கூறியுள்ளார்.

சாதாரண மருத்துவர்களே மாதம் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறார்கள். நான் பல மருத்துவர்களைப் பார்க்கிறேன், அவர்கள் பிஎம்டபிள்யூ , பென்ஸ் மற்றும் ஆடி போன்ற விலை உயர்ந்த சொகுசு கார்களில் வலம் வருகிறார்கள். ஆனால் ஒரு சராசரி ஐடி ஊழியரின் ஆரம்ப கால ஊதியம் வெறும் 30 ஆயிரம் ரூபாயாகவே இன்றும் நீடிக்கிறது.

இந்தியாவில் பலரும் மருத்துவப் படிப்பு படிப்பது வீணானது எனச் சொல்வதைக் கேட்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. அமெரிக்காவில் ஒரு பொது மருத்துவரின் சராசரி ஆண்டு வருமானம் சுமார் 2.5 லட்சம் டாலர்களாக உள்ளது. இது ஐடி துறையில் உள்ள டாப் லெவல் இன்ஜினியர்களின் ஊதியத்தை விடப் பல மடங்கு நிலையானது மற்றும் உயர்வானது என்று ஆதங்கத்தை கூறியுள்ளார்.

தற்போது உலகெங்கும் உள்ள ஐடி நிறுவனங்கள் செலவுக் குறைப்பு என்ற பெயரில் திறமையான ஊழியர்களைக் கூட வெளியேற்றி வருகின்றன. ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பம் பல கோடி வேலைவாய்ப்புகளைப் பறிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், மனித உயிரைக் காக்கும் மருத்துவத் துறைக்கு என்றுமே அழிவில்லை என்பதை அந்த ஊழியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஐடி ஊழியரின் பதிவுக்கு இந்தியர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டாக்டர் ஐந்து லட்சம் வாங்குறாங்களா. நீ பார்த்த.. ஏன் இப்படி பச்சையாக பொய் சொல்கிறார்.. உண்மை தெரியாமல் பேசதா.. சம்பளமே இங்கு 35 ஆயிரம் தான் கிடைக்கிறது என்று ஒரு டாக்டர் கூறியுள்ளார். இன்னொரு நெட்டிசன், எங்க ஊரில் இருக்கும் மருத்துவரிடம் 5 ஆண்டுகளுக்கு முன்பு காலை மாலை 200 டோக்கன் போகும்
200*200fees : 40000 ஒரு நாளைக்கு கிடைக்கும். ஆனால் இப்போது 40 டோக்கன் கூட போவதில்லை.. சுற்று வட்டரா கிராமங்களில் நிறைய கிளினிக் திறந்து விட்டார்கள் என்று கூறியுள்ளார்.

இன்னொரு நெட்டிசன், எல்லா டாக்டர்ஸ்ஸும் அவ்ளோ சிறப்பா இல்ல. PG முடிச்சிட்டு வந்தாலே கார்பொரேட் ஹாஸ்பிடல்ல 25K தான். 5 லட்சம் வாங்க 15 வருஷம் ஆகும், அதுவும் சில பேருக்குத்தான். இக்கரைக்கு அக்கரை பச்சை என்று கூறியுள்ளார்.

நான்காவதாக ஒரு நெட்டிசன் கூறுகையில், இவர், மாதத்திற்கு 5 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குவதைப் பார்த்திருக்கிறார்; ஆனால், இந்தச் சம்பளத்தைப் பெறுவதற்கு பிஜி படிப்பு முடித்த பிறகு சுமார் 10 ஆண்டுகள் ஆகலாம். உண்மையில், 30 முதல் 40 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்குப் பணிபுரியும் எத்தனையோ எம்பிபிஎஸ் மருத்துவர்கள் இருக்கிறார்கள். துறைசார்ந்த உள்விவரங்கள் எதையும் அறியாமல், ஏதோ ஒன்றை உளறிக் கொண்டிருக்க வேண்டியதுதான். ஒரு விஷயம் மட்டும் உண்மை: இத்துறையில் வேலையின்மை இருக்காது; ஆனால், அதற்குப் பல தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார்.

ஐந்தாவதாக ஒரு நெட்டிசன் கூறுகையில், MBBS-க்கு மாதம் 30 ஆயிரம் தான், சென்னையில் இன்னும் கொஞ்சம் குறைவு. ரேடியோ டெர்ம் தவிர மற்ற முதுகலைப் படிப்புகளுக்கு மாதம் 90-1.2 லட்சம், அதுவும் மாதத்திற்கு 7-8 இரவுப் பணிகளுடன் (24 மணிநேரம்). ரேடியோ டெர்ம் மட்டும் மாதம் 1.5 லட்சம்.
சூப்பர் ஸ்பெஷாலிட்டிக்கு, துறையைப் பொறுத்து 2-2.5 லட்சம். ஆனால் இவை அனைத்திற்கும் குறைந்தபட்சம் 10-13 ஆண்டுகள் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+