3ம் உலகப்போரை உருவாக்க போறீங்க.. வெள்ளை மாளிகையில் ஓபனாக சண்டையிட்ட டிரம்ப் - ஜெலன்ஸ்கி.. ஷாக்
நியூயார்க்: வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தில் துணை அதிபர் ஜேடி வான்ஸ்சும் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த எல்லா சண்டையும் அங்கே இருந்த மீடியா முன்.. ஓவல் அலுவலகத்தில் நடந்தது.
ஓவல் அலுவலகம் ஒன்றில் அமெரிக்க அதிபர் ஒருவர்.. தனது நட்பு நாட்டு தலைமுறை மிக தரைகுறைவாக, மோசமாக நடத்தியது இதுவே முதல்முறையாகும். மிக கோபமான வார்த்தைகளில், சத்தமான குரலில் கடுமையாக ஜெலன்ஸ்கியை டிரம்ப் கண்டித்தார்.

உக்ரைன் ரஷ்யா மோதல்
உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி, வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ட்ரம்பைச் சந்தித்து, உக்ரைனில் உள்ள கனிமங்களை அமெரிக்காவை பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்த சந்திப்பு நடத்தப்பட்டது. உக்ரைன் - ரஷ்யா போரை டிரம்ப் விரும்பவில்லை. இந்த போருக்கு காரணமாக அமைந்த உக்ரைன் நேட்டோவில் இணையும் விருப்பத்தை அவர் ரசிக்கவில்லை.
உக்ரைன் போருக்கு அமெரிக்கா செலவு செய்வதை அவர் விரும்பவில்லை. உக்ரைன் அதிபர் பணத்தை கொள்ளையடிக்கிறார்.. போர் என்ற பெயரை காரணம் காட்டி ஆட்சியில் நீடிக்கிறார். அவருக்கு ஏன் நாம் உதவ வேண்டும் என்று டிரம்ப் நினைக்கிறார். ரஷ்யாவுடன் பிஸ்னஸ் செய்வது தொடங்கி பல ஒப்பந்தங்களை செய்ய டிரம்ப் நினைக்கிறார். இதனால் உக்ரைனை கழற்றிவிட்டு விட்டார்.
இப்படிப்பட்ட நிலையில்தான் அதிபர் டிரம்ப் - ஜெலன்ஸ்கி இடையே சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்புதான் கடுமையான மோதலில் முடிந்து உள்ளது.
என்ன நடந்தது?
இந்த மோதலில் என்ன நடந்தது என்பதை இங்கே விவாதம் போல கொடுத்து உள்ளோம்.
அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் - அமெரிக்க ராஜாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போரை நிறுத்துவதற்காக ரஷ்யா உடன் ராஜதந்திர முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.
ஜெலன்ஸ்கி - ரஷ்யாவை நீங்கள் தடுக்கவே இல்லையே.. ரஷ்யா 2019ல் இருந்தே போரை மேற்கொண்டு வருகிறது. அவரை நீங்கள் தடுக்கவே இல்லை. நீங்கள் எதை ராஜாங்க செயல்பாடு.. ராஜதந்திர செயல்பாடு என்று சொல்கிறீர்கள்?
அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் - உங்களின் செயல்பாடு.. உங்களின் நாட்டிற்கே அழிவை ஏற்படுத்தி விடும்.. உங்களின் நிலைப்பாடு உங்களின் நாட்டை அழித்துவிடும்.
ஜெலன்ஸ்கி - போர் என்றால் சிக்கல்தான்.. உங்களுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே கடல் இருக்கிறது என்பதால் உங்களுக்கு ஆபத்து இல்லை என்று நினைக்க வேண்டாம். எதிர்காலத்தில் ரஷ்யாவால் உங்களுக்கும் ஆபத்து வரும்.
அதிபர் டிரம்ப் - உக்ரைன் நல்ல நிலைமையில் இல்லை.. நீங்கள் மிக மோசமான சூழலில் உள்ளீர்கள். உங்களுக்கு சாதகமாக எதுவும் இல்லை. இதற்கு எல்லாம் காரணம் நீங்கள்தான். உக்ரைன் மோசமான சூழலுக்கு மாற அனுமதித்து நீங்கள்தான்.. இந்த மோசமான சூழலில் உங்களுக்கு சாதகமான அம்சங்கள் இல்லை.
ஜெலன்ஸ்கி - சாதகமான அம்சங்களை வைத்துக்கொண்டு விளையாடுவதற்காக நான் வரவில்லை.
டிரம்ப் - நீங்கள் பல கோடி மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள்
ஜெலன்ஸ்கி - நாங்கள் விளையாடவில்லை.. இந்த போரை நாங்கள் தனியாக எதிர்கொண்டு வருகிறோம்.. நாங்கள் தனித்துவிடப்பட்டு உள்ளோம்.. அதற்கு நன்றி.
டிரம்ப் - அப்படி எல்லாம் பேசாதீர்கள்.. நீங்கள் தனியாக இல்லை.. நீங்கள் தனியாக இருந்தால் கதையே வேறு. அமெரிக்கா உதவி இருக்கிறது உங்களுக்கு. முன்னாள் பதவியில் இருந்த முட்டாள் பிரதமர் உங்களுக்கு 350 பில்லியன் டாலர் தந்திருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம்.
ஜெலன்ஸ்கி - ஜேடி வான்ஸை நோக்கி, நீங்கள் இரண்டு நாட்டு போரை பற்றி சத்தமாக இப்படி மீடியா முன் பேசுவது சரியா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
டிரம்ப் - வான்ஸ் சத்தமாக பேசவில்லை. நாங்கள் இருப்பதால் எதோ உங்கள் நாடு இருக்கிறது. இல்லையென்றால் இந்த போரில் நீங்கள் இன்னும் மோசமாக சிக்கி இருப்பீர்கள். உங்களுக்கு இந்த போரில் வெல்லும் வாய்ப்பே இல்லை.. நீங்கள் 3ம் உலகப்போரை வைத்து விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள்.. டீல் செய்ய விருப்பம் இருந்தால் அடுத்த முறை இங்கே வாருங்கள்.. என்று கூறினார்.
இரண்டு நாட்டு தலைவர்கள் இடையே காரசாரமாக நடந்த இந்த மோதல் சர்வதேச அரசியலை கடும் பதற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
-
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications