சீனாவிற்கு "செக்".. புதிய வேக்சின் "கோல்".. அதிபராக பதவியேற்ற பின் முதல் பிரஸ் மீட்.. கலக்கிய பிடன்!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தனது முதல் செய்தியாளர் சந்திப்பில் சீனா தொடங்கி கொரோனா வேக்சின் வரை பல விஷயங்கள் குறித்து பேசினார்.
அமெரிக்க அதிபராக பதிவேற்றபின் முதல்முறையாக நேற்று ஜோ பிடன் செய்தியாளர்களை சந்தித்தார். வெள்ளை மாளிகையில் இருக்கும் கிழக்கு அறையில் செய்தியாளர்களை சந்தித்த பிடன் பல்வேறு விஷயங்கள் குறித்து அமைதியாக எடுத்துரைத்தார்.
வலதுசாரி கொள்கை கொண்ட செய்தி நிறுவனங்கள் பங்கேற்காத இந்த செய்தியாளர் சந்திப்பு பெரிய அளவில் அதிரடி கேள்விகள் இல்லாமல் அமைதியாக சென்றது. அதிபர் பிடன் தனது செய்தியாளர் சந்திப்பில் சீனா, கொரோனா வேக்சின், குடியேறிகள் விவகாரம் குறித்து பேசினார்.

சீனா
பிடன் தனது பேச்சில், சீனாவை அமெரிக்கா கண்காணித்து வருகிறது. குவாட் நாடுகளான இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உடன் சந்திப்பு நடத்தினோம், சீனா இனி விதிகளை மதித்து செயல்பட வேண்டும். முறையாக விதிகளை பின்பற்ற வேண்டும். சீனா அமைதிக்கு பொறுப்பேற்க வேண்டும்.

சீனா திட்டம்
சீனாவின் முன்னேற வேண்டும் என்ற திட்டம் இருக்கிறது. அதில் தவறு இல்லை. ஆனால் சர்வதேச அளவில் நம்பர் 1 சூப்பர் பவர் நாடாக ஆக வேண்டும் என்று சீனா நினைக்கிறது. அது நடக்காது. அமெரிக்கா இருக்கும் வரை, அமெரிக்காவின் அதிபராக நான் இருக்கும் வரை அதை நடக்க விட மாட்டேன். அமெரிக்கா தொடர்ந்து முன்னேறும்.

கொரோனா
கொரோனாவை அமெரிக்கா சிறப்பாக எதிர்கொண்டு வருகிறது. என்னுடைய முதல் 100 நாள் ஆட்சியில் 200 மில்லியன் பேருக்கு கொரோனா வேக்சின் போட முடிவு செய்துள்ளேன். நம்மால் மட்டுமே இதை சாதிக்க முடியும் . மற்ற நாடுகள் எல்லாம் கொரோனா வேக்சின் போடுவதில் பின்தங்கி உள்ளது. இன்னும் வேகமாக செயல்பட்டால் நாம் 200 மில்லியன் வேக்சின்களை போட முடியும்.

குடியேறிகள்
அமெரிக்காவின் எல்லையில் மெக்சிகோ வழியாக குடியேறும் மக்களின் அதிகரித்து உள்ளது. எல்லா வருடமும் தொடக்கத்தில் இப்படி நடப்பது வழக்கம். குடியேறிகளின் வருகை முறையாக கண்காணிக்கப்பட்டு வருகிறிது. குளிர் காலத்தில் இப்படி மக்கள் அமெரிக்காவிற்கும் நுழைய முயல்கிறார்கள். நான் அதிபராக இருப்பதை பயன்படுத்திக்கொண்டு அவர்கள் அமெரிக்காவிற்குள் வரவில்லை.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை அமெரிக்கா வாபஸ் வாங்கும். ஆனால் மே 1ம் தேதிக்குள் வாங்க முடியாது. அது சாத்தியம் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக படைகள் வாபஸ் வாங்கப்படும். அமைதியை கருத்தில் கொண்டு, படிப்படியாக எல்லையில் படைகள் வாபஸ் வாங்கப்படும், என்று பிடன் தனது முதல் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications