யாரிடமும் பேசவில்லை.. வெறிச்சோடிய வெள்ளை மாளிகை.. கலங்கிப் போன டிரம்ப்.. இப்படி ஆகிடுச்சே!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்த நிலையில்.. அவர் அன்றாட பணிகள் எதையும் செய்வது இல்லை என்று கூறப்படுகிறது.
2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் டிரம்ப் படுதோல்வி அடைந்துள்ளார். 214 வாக்குகளை மட்டுமே வென்று டிரம்ப் மோசமாக தோல்வி அடைந்துள்ளார் . ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார்.
290 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றுள்ள பிடன் மிகப்பெரிய அளவில் வென்றுள்ளார். வரும் ஜனவரி மாதம் பிடன் அடுத்த அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ளார்.

டிரம்ப் தோல்வி
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்த நிலையில்.. அவர் அன்றாட பணிகள் எதையும் செய்வது இல்லை என்று கூறப்படுகிறது. தேர்தலில் தோல்வி அடைந்து கிட்டத்தட்ட 5 நாட்கள் ஆகிறது..இதில் இரண்டு நாட்கள் கோல்ப் விளையாடி நேரத்தை செலவிட்டு இருக்கிறார் டிரம்ப். மீதம் இருக்கும் நேரங்களில் டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு உள்ளேயே இருந்துள்ளார்.

தினமும் பேட்டி
தினமும் வெள்ளை மாளிகையில் அவர் கொடுக்க வேண்டிய பேட்டியை கொடுக்கவில்லை. அவர் சார்பாக பேசும் செக்ரட்டரி ஆப் ஸ்டேட்ஸ் மைக் பாம்பியோ போன்றவர்கள் கூட பெரிய அளவில் செய்தியாளர் சந்திப்பை நடத்தவில்லை. பெரும்பாலான கோப்புகளில் டிரம்ப் கையெழுத்து போட வேண்டும். ஆனால் அதையும் கூட டிரம்ப் செய்யவில்லை என்கிறார்கள்.

பேச மறுப்பு
தன்னுடன் இருக்கும் அதிகாரிகளிடம் கூட டிரம்ப் பெரிய அளவில் பேசவில்லை என்று கூறப்படுகிறது. தினமும் கொரோனா பாதிப்பு தொடர்பாக டிரம்பிற்கு விளக்கம் அளிக்கப்படும். இந்த விளக்கமும் நான்கு நாட்களாக வழங்கப்படவில்லை. இதெல்லாம் போக.. வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு துறை அதிகாரிகள்.. உளவு தகவல்களை தினமும் பகிர்வார்கள். ஆனால் அதையும் கூட டிரம்ப் இரண்டு நாட்களாக கவனிக்கவில்லை.

வெளியேற்றம்
ஏற்கனவே டிரம்ப்பிற்கு நெருக்கமான நபர்கள் பலர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிவிட்டனர். உயர் பதவியில் இருந்த சிலர்.. வேறு வேலைகளை தேடும் முனைப்பில் உள்ளனர்.இதனால் வெள்ளை மாளிகையும் இப்போது வெறிச்சோடி காணப்படுகிறது. டிரம்ப் வருத்தத்தில் இருக்கிறார்.. அதனால்தான் யாரிடமும் அவர் பேசவில்லை. அதனால்தான் அவர் மிகவும் அமைதியாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

வழக்கு
அதேபோல் தேர்தல் முடிவிற்கு எதிராக வழக்கு தொடுப்பேன் என்று கூறிய டிரம்ப்.. அதிலும் பெரிய அளவில் முனைப்பு காட்டவில்லை . கோபமாக டிவிட் செய்கிறார். அவ்வளவுதான். வேறு எதுவும் அவர் செய்வது போல தெரியவில்லை. இன்னும் 2 மாதங்களுக்கு டிரம்ப்தான் அதிபர். ஆனால்.. டிரம்ப் ஒரு அதிபர் போல செயல்படவில்லை. அதற்கான அறிகுறியே டிரம்பிடம் இல்லை, என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications