பரஸ்பர வரி விதிப்பை தற்காலிகமாக நிறுத்திவைக்க டிரம்ப் பரிசீலனையா? வெள்ளை மாளிகை ரியாக்ஷன்
நியூ யார்க்: அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பின் காரணமாக உலக அளவில் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. அமெரிக்காவிலும் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்ததால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்க டிரம்ப் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் பரவிய நிலையில் இதற்கு வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
உலக நாடுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள பரஸ்பர வரியை 90 நாட்கள் சிறுத்திவைக்க டிரம்ப் பரிசீலித்து வருவதாக வெளியான தகவலில் உண்மையில்லை எனவும் அது முற்றிலும் அது தவறான செய்தி என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

பரஸ்பர வரி விதித்த டிரம்ப்
அமெரிக்க அதிபராக 2-வது முறையாக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், தங்கள் நாட்டு பொருட்களுக்கு உலக நாடுகள் அதிக வரி விதிப்பதாக குற்றம் சாட்டினார். எனவே அந்த நாடுகள் மீது பரஸ்பர வரி விதிக்கப்படும் என அறிவித்தார். முன்னதாக தனது தேர்தல் பிரசாரத்தின்போது இதை வாக்குறுதியாகவே அவர் வழங்கி இருந்தார்.
அதன்படி ஆட்சிக்கு வந்தவுடனே இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட டிரம்ப், ஏப்ரல் 2 ஆம் தேதி புதிய வரி பட்டியலை வெளியிடுவேன் எனக்கூறி இருந்தார். இது உலக நாடுகளை கலக்கமடையச்செய்தன. தான் அறிவித்தபடி கடந்த வாரம் டொனால்டு டிரம்ப் பரஸ்பர வரி விதிப்புகளை அறிவித்தார். இதன்படி, அனைத்து நாடுகளுக்கும் 10 சதவீத அடிப்படை வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார்.
அதுமட்டும் இன்றி ஏராளமான நாடுகளுக்கு அதிக அளவிலான பரஸ்பர வரி விகிதங்களை வெளியிட்டார். இந்திய பொருட்களுக்கு 26 சதவீத வரியும், சீனாவுக்கு 34 சதவீதம், ஐரோப்பிய யூனியனுக்கு 20 சதவீதம் வரியும், தென்கொரியாவுக்கு 25 சதவீதம், ஜப்பானுக்கு 24 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது. டிரம்பின் வரி விதிப்பிற்கு பதிலாடியாக சீனாவும் 34 சதவீதம் வரி விதித்தது.
90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கிறார்
அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு காரணமாக ஆசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள நாடுகளின் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்தன. இது ஒருபுறம் இருக்க அமெரிக்காவின் வரிவிதிப்பு காரணமாக சொந்த நாட்டு மக்களே அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. டிரம்பின் வரி விதிப்பபால் அமெரிக்காவிலும் விலை உயர்ந்து இருப்பதால் மக்கள் பல இடங்களிலும் போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர்.
திங்கள் கிழமையான இன்று பலவேறு சர்வதேச அளவில் பங்குச்சந்தைகள் முடங்கிய நிலையில், அமெரிக்க பங்கு சந்தைகளும் இதற்கு தப்பவில்லை. இப்படி பங்குச்சந்தைகளும் ரத்த களறியான நிலையில், டிரம்ப அறிவித்து இருக்க கூடிய வரி விதிப்பு நடவடிக்கையை 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்க திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் பரவின. சமூக வலைத்தளங்களில் இந்த காட்டுத்தீ போல உலக அளவில் பரவியது.
வெள்ளை மாளிகை விளக்கம்
இத்தகைய சூழலில்தான், வரிவிதிப்பை 90 நாட்கள் நிறுத்த டிரம்ப் பரிசீலித்து வருவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்றும், அது முற்றிலும் போலியான செய்தி என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்தன. அப்போது எக்ஸ் தளத்தில், வால்டர் புளூபெர்க் என்பவர் சீனாவை தவிர்த்து பிற நாடுகள் மீது விதிக்கப்பட்ட வரி உயர்வை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது தொடர்பாக டிரம்ப் சிந்திப்பதாக தேசிய பொருளாதார கவுன்சில் இயக்குநர் கெவின் ஹஸ்சேட் சூசமாக குறிபிட்டதாக பதிவிட்ட்டார்.
இதையடுத்து, பங்குச்சந்தைகளில் ஏற்ற இறக்கங்கள் அதிகரித்தது. இதையடுத்து, வரி விதிப்பு விவாகாரம் தொடர்பான விவாதம் எக்ஸ் தளத்தில் அதிகரித்த சூழலில் தான் வெள்ளை மாளிகை, டிரம்ப் அப்படியான ஒரு ஆலோசனையில் இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications