அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை
நியூயார்க்: ஈரான் போர் மற்றும் அமெரிக்காவின் தலையீடு காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது. நேற்று சரிவைச் சந்தித்த ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை, இன்று மீண்டும் ஒரு பேரல் 100 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடப்பதாக வெளியான முரண்பட்ட தகவல்களே இதற்கு முக்கிய காரணம் ஆகும். டிரம்ப் தாக்குதலை ஐந்து நாட்கள் நிறுத்துவதாக கூறியதால் 10 டாலர் வரை சரிந்த கச்சா எண்ணெய் விலை சட்டென தற்போது ஒரு பேரல் 100 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.. என்ன நடக்கிறது... ஏன் இவ்வளவு மாற்றம்.. இதில் அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம் என்ன.. ஈரான் கண்டுபிடித்தது என்ன என்பதை பார்ப்போம்.

கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் தாக்குதல் நடத்தியது. அதன்பிறகு தான் போர் மூண்டது. இதற்குப் பதிலடியாக, ஈரான் உலகிலேயே மிக முக்கியமான கடல் வழிப் பாதையான 'ஹார்முஸ் ஜலசந்தியை' மொத்தமாக முடக்கியது. உலகின் 20% கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இந்தப் பாதை வழியாகத்தான் செல்கிறது. இது அடைக்கப்பட்டதால் உலகெங்கும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை விண்ணைத் தொட ஆரம்பித்தது..
விஜயகாந்த் நடித்த ரமணா படத்தில் போலீஸ்காரர் கதபாத்திரம் போல் யோசித்து தான் ஈரான் இதனை செய்தது. அதாவது இங்க அடிச்சா அங்க வலிக்கும் என்பதை உணர்ந்து செய்தது. இதனை சற்றும் எதிர்பார்க்காத உலக நாடுகள் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் முற்றாக கைவிட்டன. ஒழுங்காக போரை நிறுத்தி பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு அழுத்தம் கொடுத்தன.
இதனால் கடந்த சனிக்கிழமை அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்தார்: "48 மணி நேரத்திற்குள் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை தரைமட்டமாக்குவேன் " என்றார். இதற்குப் போட்டியாக, ஈரானும் பதிலடி கொடுப்போம் என்று கூறியது. அரபு நாடுகளில் குடிநீரான கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை காலி செய்வோம் என்றும், அமெரிக்கா நிலைகளையும் இஸ்ரேலையும் கடுமையாக தாக்குவோம் என மிரட்டியது.
இந்த நேரடி மிரட்டல்களால் பயந்துபோன உலகச் சந்தையில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 113 டாலர் வரை எகிறியது. இதனிடையே நேற்று நிலைமை தலைகீழாக மாறியது. ஈரானுடன் ஒரு "முழுமையான மற்றும் ஒட்டுமொத்தத் தீர்வு" குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாகக் கூறி, தாக்குதல்களை நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். இதனால் போர் பதற்றம் தணிந்து, எண்ணெய் விலை ஒரே நாளில் 10% க்கும் மேல் சரிந்தது.
ஆனால், இன்று நிலைமை மீண்டும் சிக்கலானது. ட்ரம்ப் சொன்ன "பேச்சுவார்த்தை" தகவலை ஈரான் முற்றிலுமாக மறுத்தது. "அமெரிக்காவுடன் நாங்கள் பேசவே இல்லை; அவர்கள் சந்தையை ஏமாற்றுகிறார்கள்" என்று ஈரான் கூறியது. அதாவது கச்சா எண்ணெய் விலையை குறைக்கவே இதனை ராஜதந்திரமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்கிறார் என்று ஈரான் கண்டுபிடித்தது.. இந்த இந்தக் குழப்பமான தகவல்களால் சந்தை மீண்டும் சூடானது:
எண்ணெய் விலை 4% உயர்ந்து 104 டாலரை எட்டியது. பின்னர் வர்த்தகத்தின் இறுதியில் 102 டாலர் அளவில் நிலைபெற்றது.
பங்குச் சந்தைகளின் நிலை என்ன
எண்ணெய் இறக்குமதியை அதிகம் நம்பியிருக்கும் ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியா போன்ற ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகள் திங்களன்று சரிந்தாலும், செவ்வாயன்று ஓரளவிற்கு மீண்டெழுந்து 0.8% முதல் 2.2% வரை உயர்வைக் கண்டன. ஆனால் ஐரோப்பிய சந்தைகள் (யுகே, ஜெர்மனி) இப்போதும் சிறிய சரிவிலேயே உள்ளன.
ஈரான் பேச்சுவார்த்தை மிக முக்கியம்?
உலகப் பொருளாதாரம் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டுமென்றால், அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடப்பது மிக மிக அவசியம். ஏனெனில், கச்சா எண்ணெய் விலை குறைந்தால் தால் இந்தியா, ஜப்பான், சீனா, ஹாங்காங் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் விலைவாசி உயர்வில் இருந்து தப்பிக்க முடியும். பேச்சுவார்த்தை சுமூகமானால் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும். அப்போதுதான் பெட்ரோல், டீசல் விலை குறையும்.
சுமை குறையும்
ஏற்கனவே சீனா போன்ற நாடுகள் மக்கள் மீதான சுமையைக் குறைக்க எரிபொருள் விலை உயர்வைத் தள்ளிவைத்துள்ளன. அமெரிக்கா தன் தடைகளைத் தற்காலிகமாக நீக்கியுள்ளது. பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தப்பட்டால் மட்டுமே சர்வதேசச் சந்தையில் நிலவும் இந்த 'நிச்சயமற்ற தன்மை முடிவுக்கு வரும்.
-
"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது -
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
அடங்காத போர் வெறி.. அமெரிக்க தாக்குதலில் பறிபோன 3 இந்தியர்களின் உயிர்! ஓமனில் அதிர்ச்சி! -
குவைத் நாட்டில் ஈரானின் வெறியாட்டம்! விமான சேவை மொத்தமாக முடக்கம்.. ஜோர்டானில் மட்டும் 12 ஏவுகணைகள் -
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல்












Click it and Unblock the Notifications