நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெற்றிக்கு இன்னும் ஆறே வாக்குகள்.. விரைவில் முக்கிய உரை நிகழ்த்த போகும் பிடன்.. டிரம்பிற்கு செக்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றியை நெருங்கி கொண்டு இருக்கும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன், இன்று இரவு முக்கியமான உரை நிகழ்த்த வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

அமெரிக்க அதிபர் தேர்தல் கிட்டத்தட்ட கிளைமேக்ஸை நெருங்கிவிட்டது. இன்னும் சில லட்சம் வாக்குகளை எண்ண வேண்டிய நிலை உள்ளது. இந்த தேர்தலில் 160 மில்லியன் வாக்குகள் பதிவானது.

அமெரிக்க வரலாற்றில் முதல்முறை இவ்வளவு வாக்குகள் ஒரே தேர்தலில் பதிவாகி உள்ளது. அதிலும் 101 மில்லியன் வாக்குகள் தபால் வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வாக்குகளை எண்ணும் பணி தாமதமாகி வருகிறது.

1% தான் மீதம் உள்ளது.. வெறும் 1000 வாக்குகள்.. பெரிய டிவிஸ்ட் கொடுத்த ஜார்ஜியா.. ஆடிப்போன டிரம்ப்!1% தான் மீதம் உள்ளது.. வெறும் 1000 வாக்குகள்.. பெரிய டிவிஸ்ட் கொடுத்த ஜார்ஜியா.. ஆடிப்போன டிரம்ப்!

என்ன

என்ன

இந்த தேர்தலில் முக்கியமான பெரிய மாகாணங்களில் பிடன் வென்றது அவருக்கு சாதகமாக மாறியுள்ளது. கலிபோர்னியா, வாஷிங்டன், நியூயார்க், நியூஜெர்சி போன்ற மாகாணங்களில் பிடன் வென்றுள்ளார். அதேசமயம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புளோரிடா, டெக்ஸாஸ் மாகாணங்களில் டிரம்ப் வெற்றிபெற்றுள்ளார்.

முன்னிலை

முன்னிலை

தொடக்கத்தில் இதில் டிரம்ப் பல மாகாணங்களில் முன்னிலை வகித்தார். ஆனால் போக போக தபால் வாக்குகளில் டிரம்ப் பின்னடைவை சந்தித்தார். இதனால் மிச்சிகன், விஸ்கான்சின் போன்ற மாகாணங்களில் டிரம்ப் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அதோடு தற்போது ஜார்ஜியா போன்ற மாகாணங்களில் தற்போது பிடன் முன்னிலை பெற தொடங்கி உள்ளார்.

மோசம்

மோசம்

தபால் வாக்குகள் பல பிடனுக்கு ஆதரவாக வந்துள்ளது. இதனால் குடியரசு கட்சியின் பாரம்பரிய மாகாணங்களில் கூட பிடன் வெற்றியை பெற்று வருகிறார். தற்போது நிலவரப்படி 264 வாக்குகளுடன் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் 214 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இன்று இரவிற்குள் பிடன் வென்றுவிடுவார் என்று நம்பப்படுகிறது.

எத்தனை வாக்குகள்

எத்தனை வாக்குகள்

இன்னும் 6 எலக்ட்ரல் வாக்குகளே தேவைபடும் நிலையில்.. பிடன் நெவாடா அல்லது ஜார்ஜியாவில் வென்று, அதிபர் தேர்தலை கைப்பற்றுவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் அதிபர் தேர்தல் வெற்றிக்கு பின் முக்கிய உரை நிகழ்த்த உள்ளார். வெற்றியை ஏற்றுக்கொள்ளும் விதமாக பிடன் முக்கிய உரை நிகழ்த்துகிறார்.

இன்று இரவு

இன்று இரவு

இன்று இரவே பிடன் இந்த உரையை நிகழ்த்த உள்ளார். டெல்லவர் மாகாணத்தில் உள்ள, தனது தேர்தல் பிரச்சார அரங்கில் பிடன் மக்கள் முன் உரையாற்ற உள்ளார்.அதிபர் டிரம்பின் குற்றச்சாட்டுகளுக்கு பிடன் பதில் அளிக்க வாய்ப்பு உள்ளது. முக்கியமாக தேர்தலில் முறைகேடு நடந்ததாக டிரம்ப் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வாய்ப்புள்ளது. இதில் முக்கிய விஷயங்களை அவர் அறிவிக்க வாய்ப்புள்ளது.

English summary
US Presidential Election 2020: Dem. Joe Biden to make an acceptance speech in Delaware after winning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X