தேவதைகளை களமிறக்கி விட்டேன்.. சாத்தான்கள் கதை காலி.. டிரம்ப்பிற்காக பெண் நடத்திய பரபர வழிபாடு!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வெற்றிக்காக அவரின் ஆன்மீக ஆலோசகர் பாவ்லா வைட் நடத்திய வழிபாட்டு கூட்டம் பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. அதிபர் டிரம்ப் தோல்வியின் விளிம்பில் இருக்கிறார். தற்போது நிலவரப்படி 264 வாக்குகளுடன் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.
குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் 214 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இந்த நிலையில் டிரம்ப்பின் வெற்றிக்காக அவரின் ஆன்மீக ஆலோசகர் பாவ்லா வைட் நடத்திய வழிபாட்டு கூட்டம் பெரிய வைரலாகி உள்ளது.
|
கூட்டமா
பாவ்லா வைட் நடத்திய கூட்டத்தின் வீடியோ இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பாவ்லா வைட் பேசியுள்ளதாவது, வெற்றி நம்முடைய பக்கம் இருக்கிறது.. வெற்றியின் ஓசை எனக்கு கேட்கிறது. எல்லாமே வெற்றிகரமாக முடிந்துவிட்டது என்று கடவுள் என்னிடம் கூறியுள்ளார்.

வெற்றி
வெற்றி, வெற்றி, வெற்றி.. என்ற ஓசை மட்டுமே என்னுடைய காதில் கேட்கிறது. தேவதைகளை களமிறக்கி உள்ளேன். ஆப்பிரிக்காவில் இருந்து தேவதைகளை கொண்டு வந்து இருக்கிறேன். அவர்கள் இங்கே வந்து கொண்டு இருக்கிறார்கள்.அவர்கள் இப்போது அமெரிக்காவிற்கு வந்துவிட்டனர்.

சாத்தான்களின் கதை
சாத்தான்களின் கதை முடிய போகிறது. எனக்கு வெற்றியின் குரல் கேட்கிறது.தேவதைகள் நமக்கு உதவ போகிறார்கள். ஜனநாயக கட்சியினர் சாத்தான்கள். அவர்களின் அழிவு நெருங்கிவிட்டது, என்று அந்த பெண் வழிபாடு நடத்தி உள்ளார். பாவ்லா வைட் நடத்திய இந்த வழிபாடு இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

விவாதம்
வழிபாட்டிற்கு இடையே பாவ்லா வைட் லத்தீன் மொழியில் பேசியதும், வினோதமாக இவர் நடந்து கொண்டதும் விவாத பொருளாக மாறியுள்ளது. இவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்புடன் பல மேடைகளில் காணப்பட்டார். டிரம்ப் பிரச்சாரம் செய்த பல மேடைகளில் பாவ்லா வைட் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
-
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications