அமெரிக்க அதிபர் தேர்தல்.. கமலா ஹாரிஸ்தான் அரியணை ஏறப்போகிறார்.. வெளியான முக்கிய எக்சிட் போல்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பை விட.. ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசுக்கே அதிக வெற்றி வாய்ப்பு உள்ளதாக நாடு முழுக்க நடத்தப்பட்ட Edison Research' நிறுவனத்தின் தேசிய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எடிசன் ரிசர்ச்சின் நாடு முழுவதும் உள்ள 44% வாக்காளர்கள் டிரம்ப் அதிபர் ஆக வேண்டும் என்று கூறியுள்ளனர். அதேபோல் நாடு முழுவதும் உள்ள 48% பேர் கமலா ஹாரிஸ் அதிபர் ஆக வேண்டும் என்று கூறியுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள 31% வாக்காளர்கள், ஜனாதிபதித் தேர்தலில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் பொருளாதாரம் மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளனர். பொருளாதாரம் தான் தாங்கள் வாக்களிக்கும் விதத்தை மாற்றுவதாக தெரிவித்துள்ளனர். 11% பேர் குடியேற்றம், 14% கருக்கலைப்பு, 34% ஜனநாயகத்தின் நிலை, 4% வெளியுறவுக் கொள்கை ஆகியவை மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளனர்.
நாடு முழுவதும் 45% வாக்காளர்கள் தங்கள் குடும்பத்தின் நிதி நிலைமை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட மோசமாக உள்ளது என்று கூறியுள்ளனர்.. நாடு முழுவதும் உள்ள 51% வாக்காளர்கள் பொருளாதாரத்தை கையாள டிரம்பை அதிகம் நம்புவதாகக் கூறியுள்ளனர். 47% பேர் ஹாரிஸை அதிகம் நம்புவதாகக் கூறியுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான ஆக்கபூர்வமற்ற புலம்பெயர்ந்தோர் அவர்கள் வந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள 39% வாக்காளர்கள் கூறியுள்ளனர். 57% பேர் அவர்கள் அகதிகளாக விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள 51% வாக்காளர்கள் கருக்கலைப்பு பிரச்சினையை கையாள ஹாரிஸ் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். 44% பேர் டிரம்பை அதிகம் நம்புவதாகக் கூறியுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள 31% வாக்காளர்கள் இஸ்ரேலுக்கான அமெரிக்க ஆதரவு மிகவும் வலுவாக இருப்பதாகக் கூறியுள்ளனர். 30% பேர் போதுமான ஆதரவு இஸ்ரேலுக்கு வழங்கப்படவில்லை என்றும் கூறிஉள்ளார். . நாடு முழுவதும் உள்ள 73% வாக்காளர்கள் அமெரிக்காவில் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகக் கூறியுள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல்: அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து வருகிறது. அங்கே அதிக அளவில் எலக்ட்ரல் வாக்குகளை பெறும் வேட்பாளரே அடுத்த அதிபராக தேர்வு செய்யப்படுவார். அமெரிக்காவில் மக்கள் வாக்குகளை வைத்து நேரடியாக வெற்றியாளரை தேர்வு செய்ய மாட்டார்கள். மாறாக எலக்ட்ரல் வாக்குகள் பயன்படுத்தப்படும்.
அமெரிக்காவில் மொத்தம் 538 எலக்ட்ரல் வாக்குகள் உள்ளன. இதில் 270 வாக்குகளை அதிபர் வேட்பாளர் பெற வேண்டும். அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் எலக்டர்ஸ் இருப்பார்கள். அந்த மாகாணத்தில் இருக்கும் செனட் மற்றும் பிரதிநிதிகள் எண்ணிக்கையை பொறுத்தே எலக்டர்ஸ் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.
ஒரு மாகாணத்தில் இருக்கும் செனட் மற்றும் பிரதிநிதிகள் எண்ணிக்கையை பொறுத்தே எலக்டர்ஸ் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். ஒவ்வொரு மாகாணத்திற்கு சம பிரதிநித்துவம் இருக்க வேண்டும்.. கறுப்பின மக்கள்.. அமெரிக்காவின் அனைத்து மாகாணத்திலும் இருக்கும் பிற சமூக மக்களுக்கும் பிரதிநித்துவம் இருக்க வேண்டும்.. மக்கள் தொகை அதிகம் உள்ள மாகாணங்கள் மட்டும் தேர்தல் முடிவை தீர்மானிக்க கூடாது என்பதற்காக இந்த எலக்ட்ரல் வாக்கு முறை அமெரிக்காவில் கடைபிடிக்கப்படுகிறது.
மக்கள் அளிக்கும் வாக்குகளுக்கும் எலக்ட்ரல் வாக்குகளுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கலாம். பொதுவாக ஒரு மாகாணத்தில் மக்கள் அளிக்கும் வாக்குகளை பொறுத்தே எலக்ட்ரல் வாக்குகளும் பெரும்பாலும் அளிக்கப்படும். உதாரணமாக ஒரு மாகாணத்தில் 51% வாக்குகளை மக்கள் யாருக்கு அளிக்கிறார்களோ..அவர்களுக்கே.. மொத்தமாக அந்த மாகாணத்தின் எல்லா எலக்ட்ரல் வாக்குகளும் வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications