மண்டையில் உள்ள கொண்டையை மறந்துட்டாங்களே.. தேர்தல் நாளில் கமலா ஹாரிஸ் செய்த தவறு! கட்டிக்கொடுத்த போன்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து வரும் நிலையில்.. எக்சிட் போல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இப்படிப்பட்ட நிலையில்தான் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் துணை அதிபர் கமலா ஹாரிஸ் செய்த செயல் ஒன்று கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல்.. கடந்த 24 மணி நேரமாக நடந்து வருகிறது. இது ஒரே நாளில் நடக்கும் வாக்குப்பதிவு என்றாலும்.. இதற்கு முன்பே கடந்த சில நாட்களாக early voting எனப்படும் முன்கூட்டியே நடக்கும் வாக்குப்பதிவு நடந்ததும். இதிலேயே பல கோடி பேர் வாக்களித்துவிட்டனர்.

இதனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் தேர்தல் நாளில் .. வேட்பாளர்கள்.. அரசியல் தலைவர்கள் மக்களிடம் பிரச்சாரம் செய்ய கூடாது என்றெல்லாம் விதி இல்லை. இந்தியாவில் தேர்தல் நடக்கும் நாளுக்கு முதல் நாளுக்கும் முந்தைய நாள் மேல் பிரச்சாரம் செய்ய கூடாது. தேர்தல் கூட்டங்களை நடத்த கூடாது. ஆனால் அமெரிக்காவில் தேர்தல் நாளில் கூட அதிபர் வேட்பாளர்கள் வாக்கு கேட்பார்கள்.
ஏன் தேர்தலில் நாளில் அதிபர் வேட்பாளர்கள் ஸ்விங் மாகாணங்களில் இருப்பவர்களுக்கு போன் செய்து கூட பேசுவார்கள். அப்படித்தான் கமலா ஹாரிஸ் ஒரு போன் செய்து மாட்டி உள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது பொதுவாக ஒரு தேர்தல் என்பதை தாண்டி முறையாக.. ஒரு நிறுவனத்தை நடத்துவது போல திட்டமிடலுடன் நடக்கும். தேர்தல் பிரச்சாரம்.. தேர்தலில் நடத்துக்கொள்வது கூட திட்டமிடலுடன் நடக்கும். அந்த வகையில்தான் கமலா ஹாரிஸின் பிரச்சாரங்களும் திட்டமிடப்பட்டது.
இன்று வாக்களித்த.. வாக்களிக்க போகும் பல மாகாண மக்களுக்கு அந்த வகையில் கமலா போன் செய்து பேசினார். ஒரு வாக்காளரிடம் போன் செய்து.. என்ன வாக்களித்துவிட்டீர்களா.. ஆஹா வாக்களித்துவிட்டீர்கள்.. ரொம்ப நன்றி என்று கமலா ஹாரிஸ் பேசினார். ஆனால் இங்குதான் அவர் மாட்டிக்கொண்டார். அவர் பேசி முடிக்கும் முன் போனை எடுத்து கேமரா முன் காட்டினார்.
HOLY CR*P
— Libs of TikTok (@libsoftiktok) November 5, 2024
Kamala just pretended to talk to a voter on the phone but mistakenly showed that her phone was open to the camera app. LMAO
Everything about Kamala is FAKE and STAGEDpic.twitter.com/khKTj4KEJC
அதில் அவர் யாரிடமும் போன் பேசவில்லை. அதோடு அவரின் போன் கேமரா ஆன் ஆகி இருந்தது. மற்றபடி மேலே ஐபோனில் காட்டும் போன் பேசுவதற்கான பச்சை ஐகான் கூட காட்டவில்லை. போன் பேசாமலே பேசுவது போல அவர் நடிக்கிறார் என்று தெளிவாகி உள்ளது. அவரின் இந்த செயலை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றன . ஏன் இப்படி எல்லாம் நடிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல்: அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து வருகிறது. அங்கே அதிக அளவில் எலக்ட்ரல் வாக்குகளை பெறும் வேட்பாளரே அடுத்த அதிபராக தேர்வு செய்யப்படுவார். அமெரிக்காவில் மக்கள் வாக்குகளை வைத்து நேரடியாக வெற்றியாளரை தேர்வு செய்ய மாட்டார்கள். மாறாக எலக்ட்ரல் வாக்குகள் பயன்படுத்தப்படும்.
அமெரிக்காவில் மொத்தம் 538 எலக்ட்ரல் வாக்குகள் உள்ளன. இதில் 270 வாக்குகளை அதிபர் வேட்பாளர் பெற வேண்டும். அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் எலக்டர்ஸ் இருப்பார்கள். அந்த மாகாணத்தில் இருக்கும் செனட் மற்றும் பிரதிநிதிகள் எண்ணிக்கையை பொறுத்தே எலக்டர்ஸ் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.












Click it and Unblock the Notifications