அமெரிக்க அதிபர் தேர்தல்களிலேயே.. தரமான சம்பவம்.. 7 ஸ்விங் மாகாணங்களை அப்படியே அள்ளிய டிரம்ப்?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதில் முக்கியமான சில ஸ்விங் மாகாணங்களில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் முன்னிலை வகித்த நிலையில்.. டிரம்ப் அதிரடியாக இதுவரை வந்த முடிவுகளின்படி டொனால்ட் டிரம்ப் 277 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 224 வாக்குகளை வென்றுள்ளார். முக்கியமாக ஸ்விங் மாகாணங்கள் டிரம்பிற்கு ஆதரவாக வந்துள்ளது.

us presidential election 2024 kamala harris donald trump 2024

ஸ்விங் மாகாணங்கள்:

அரிசோனாவில் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார்

மிச்சிகன் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார்

விஸ்கான்சின் மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 10 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

நவேடா டிரம்ப் முன்னிலை வகிக்கிறார்

பென்சில்வேனியா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 19 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

வடக்கு கரோலினா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 16 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

ஜார்ஜியா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 16 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்.

ஸ்விங் ஸ்டேட்ஸ்: அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவேடா, வட கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகியவை ஸ்விங் மாகாணங்கள் ஆகும். 7ல் மொத்தமாக 4 மாகாணங்களில் வென்றுள்ளார். 3ல் முன்னிலை வகிக்கிறார். மொத்தமாக இதன் மூலம் ஸ்விங் மாகாணங்களை டிரம்ப் கைப்பற்றி உள்ளார்.

நீல - சிவப்பு ஸ்டேட்ஸ் என்றால் என்ன?: அமெரிக்க அதிபர் தேர்தலில்.. மக்கள் வாக்களிக்கும் விதத்தை பொறுத்து மாகாணங்கள் வண்ணங்களாக பிரிக்கப்படும். அங்கே உள்ள மாகாணங்கள் "சிவப்பு மாநிலம்" மற்றும் "நீல மாநிலம்" என்ற பிரிக்கப்பட்டு உள்ளன.

அதாவது அதன் வாக்காளர்கள் எந்த கட்சிக்கு முக்கியமாக வாக்களிக்கிறார்கள் என்பதை பொறுத்து தேர்தல் டிரெண்ட் அங்கே நிர்ணயம் செய்யப்படும். சிவப்பு மாநிலங்களில் குடியரசுக் கட்சி மற்றும் நீல மாநிலங்களில் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு தருவார்கள் என்பது அர்த்தம். இதற்கு நேர்மாறாக, ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு இடையே வாக்குகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் மாநிலங்கள் "ஸ்விங் ஸ்டேட்ஸ்" அல்லது "ஊதா மாநிலங்கள்" என்று அழைக்கப்படுகின்றன.

மாகாணங்கள் எப்படி பிரிக்கப்படுகிறது?: 1980 முதல் குடியரசுக் கட்சியினர் தொடர்ந்து வெற்றி பெற்ற மாநிலங்கள் சிவப்பு மாநிலங்கள், அதே சமயம் 1992 முதல் ஜனநாயகக் கட்சியினர் ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்கள் நீல மாநிலங்கள். இந்த மாநிலங்கள் பொதுவாக அவர்களின் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கணிக்கக்கூடியதாகக் கருதப்படுகிறது.

சிவப்பு மாநிலங்கள் (குடியரசு கட்சிக்கு வாக்களிக்கும் மாகாணம்): அதன்படி டெக்சாஸ், அலபாமா, டென்னசி, கன்சாஸ், சவுத் கரோலினா மற்றும் இந்தியானா ஆகியவை குடியரசுக் கட்சிக்கு ஆதரவான பாரம்பரியமான மாநிலம் ஆகும். சமீபத்தில் நடத்த செனட் உள்ளிட்ட தேர்தல்களிலும் இதே டிரெண்ட்தான் அங்கே உள்ளது.

நீல மாநிலங்கள் (ஜனநாயக கட்சிக்கு வாக்களிக்கும் மாகாணம்): மேற்குக் கடற்கரை, வடகிழக்கு மற்றும் மத்திய மேற்குப் பகுதிகளில் உள்ள பல மாநிலங்கள் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களிக்கும் மாகாணங்கள். கலிபோர்னியா, நியூயார்க், இல்லினாய்ஸ், ஓரிகான் மற்றும் வாஷிங்டன் ஆகியவை இதில் அடங்கும்.

ஸ்விங் மாகாணம் என்றால் என்ன?: ஸ்விங் மாநிலங்களில், குடியரசுக் கட்சியினருக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையிலான கடுமையான போட்டி நிலவும் மாநிலங்கள். இங்கே மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள். ஆனால் இதில் அனைத்திலும் இந்த முறை டிரம்ப் முன்னிலை பெற்று சாதனை படைத்துள்ளார். இதனால் இந்த தேர்தல் வெற்றி டிரம்பிற்கு மிகப்பெரியதாக மாறும் வாய்ப்புகள் ஏற்பட்டு உள்ளன.

டிரம்ப் வெற்றி பெற்ற மாகாணங்கள்:

1. மொண்டோனா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 4 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

2. வடக்கு டகோடா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 3 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

3. இண்டியானா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 11 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

4. டெக்சாஸ் மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 40 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

5. கெண்டகி மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார் : 8 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

6. ஒக்லஹோமா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 7 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

7. மிஸிஸிப்பி மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 6 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

8. அலபாமா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 9 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

9. ஃப்ளோரிடா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 30 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

10. தெற்கு கரோலினா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 9 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

11. டென்னிஸி மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 11 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

12. வெஸ்ட் விர்ஜினியாவில் டொனால்ட் டிரம்ப் வெற்றி: 4 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

13. அர்கான்சாஸ் மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 6 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

14. இடாஹோ மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 4 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

15. வியோமிங் மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 3 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

16. தெற்கு டகோடா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 3 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

17. யுடா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 6 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

18. நெப்ராஸ்கா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 5 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

19. கான்சாஸ் மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 6 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

20. ஐயோவா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 6 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

21. ஜார்ஜியா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 16 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்.

22. மிசோரி மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 10 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

23. ஆர்கன்சாஸ் மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 6 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

24. லூயிசியானா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 8 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

25. ஒஹையோ மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 17 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

26. பென்சில்வேனியா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 19 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

27. வடக்கு கரோலினா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 16 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

28. தெற்கு கரோலினா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 9 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்.

29. அலாஸ்காவில் டிரம்ப் முன்னிலை

30. நவேடாவில் டிரம்ப் முன்னிலை

31. விஸ்கான்சின் மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 10 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

32. மிச்சிகனின் டிரம்ப் முன்னிலை

33. அரிஸோனாவில் டிரம்ப் முன்னிலை

கமலா ஹாரிஸ் வெற்றிபெற்ற இடங்கள்:

1. கலிபோர்னியா மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார் : 54 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

2. வெர்மோன்ட் மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார் : 3 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

3. கனெடிக்ட் மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார் : 7 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

4. மாசசூசெட்ஸ் மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார் : 11 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

5. மேரிலேண்ட் மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார் : 10 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

6. நியூ ஜெர்ஸி மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார் : 14 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

7. நியூயார்க் மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார் : 28 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

8. டெல்வேர் மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார் : 3 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

9. இல்லினாய்ஸ் மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார் : 19 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

10. வாஷிங்க்டன் மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார் : 12 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

11. ஒரேகான் மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார் : 8 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

12. நியூ மெக்சிகோ மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார் : 5 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

13. கொலராடோ மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார் : 10 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

14. ஹவாய் மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார் : 4 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

15. விர்ஜினியா மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார் : 13 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

16. மெயின் மாகாணத்தில் கமலா ஹாரிஸ் முன்னிலை

17. மின்னசோட்டா மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார் : 10 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+