ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்.. உக்ரைனுக்கு ஷாக்! கை கோர்த்த அமெரிக்கா+ரஷ்யா! ஆனாலும் இப்படி ஆயிடுச்சே!
நியூயார்க்: ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உக்ரைன் கொண்டு வந்த தீர்மானத்திற்கு, ரஷ்யாவுடன் சேர்ந்து அமெரிக்காவும் எதிராக வாக்களித்திருக்கிறது. இருப்பினும் போதுமான வாக்குகள் கிடைத்ததால் தீர்மானம் வெற்றி பெற்றிருக்கிறது.
இந்தியாவும், சீனாவும் இந்த தீர்மானத்தில் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளன. உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளித்து வந்திருக்கிறது. இப்படி இருக்கையில், இந்த தீர்மானத்தில் உக்ரைனுக்கு எதிராக அந்நாடு வாக்களித்திருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.

நேற்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து உக்ரைனின் தன்னாட்சி மற்றும் பிராந்திய அங்கீகாரத்தை பாதுகாத்தல் தொடர்பாக தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு 93 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இந்தியா, சீனா, சவுதி, ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை என 65 நாடுகள் வாக்களிப்பில் ஆப்சென்ட் ஆகின.
எதிராக ரஷ்யா உள்ளிட்ட 18 நாடுகள் வாக்களித்தன. இதில் அமெரிக்காவும் ஒன்று என்பதுதான் தற்போது விவாதமாகியுள்ளது. இருப்பினும் பெருமான்மையான வாக்குகள் காரணமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
கடந்த 2022ம் ஆண்டு தொடங்கி இன்று வரை உக்ரைனுக்கு சுமார் 300 பில்லியன் டாலர்களை அள்ளி கொடுத்திருந்தது அமெரிக்கா. உக்ரைனுக்கு வழங்கப்பட்ட காசை வைத்து 7 ஆண்டுகளுக்கு தமிழகத்திற்கு பட்ஜெட் போட முடியும். அவ்வளவு கொடுத்தும் இந்த வாக்கெடுப்பில் ஏன் எதிராக வாக்களித்தது? என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது. இதற்கு பதில், டிரம்ப் செலவை குறைக்க திட்டமிட்டிருக்கிறார் என்பதுதான்.
அதாவது, தற்போது சீனா பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி வருகிறது. இதனை வீழ்த்த வேண்டும் எனில் அதை விட வேகமாக அமெரிக்கா முன்னேற வேண்டும். இந்த நேரத்தில் போருக்கு செலவு செய்வது, குறிப்பாக உக்ரைனுக்கு செலவு செய்வது வேண்டாத வேலை என்று டிரம்ப் தரப்பு யோசித்திருக்கிறது. மட்டுமல்லாது, போரை காரணம் கூறி உக்ரைனை சுரண்டவும் திட்டமிட்டிருக்கிறார்.
உக்ரைனில் இல்லாத கனிம வளங்களே கிடையாது. உக்ரைனில், தனித்தன்மை வாய்ந்த இரும்பும், எஃக்கும் இருக்கிறது. இது வேறு எந்த நாட்டில் கிடைப்பதை விடவும் உறுதியானதாகவும், நீடித்து உழைக்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. தவிர, டைட்டேனியம், யுரேனியம், மெக்னீஸ், கிராஃபைட், இயற்கை எரிவாயு உள்ளிட்டவையும் இருக்கின்றன. விண்வெளி ஆய்வுக்கும், மின்சார கார் தயாரிப்புக்கும் இந்த கனிமங்கள் கட்டாயம் தேவை. எனவே, இதையெல்லாம் கணக்கு செய்துதான் போரை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.
உக்ரைன் போருக்காக அமெரிக்கா வழங்கிய நிதியை திருப்பி தர வேண்டும். அல்லது உக்ரைனில் உள்ள கனிம வளங்களின் 50 சதவீதத்தை அமெரிக்காவுக்கு தர வேண்டும் என்றும் டிரம்ப் கூறி வருகிறார்.
பொதுவாக ஐநா பொது சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதை பின்பற்ற வேண்டிய கட்டாயம் கிடையாது. ஆனால் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதை நிச்சயம் பின்பற்ற வேண்டும். அந்த வகையில் தற்போது ரஷ்யாவுக்கு அமெரிக்கா ஆதரவாக நின்றிருந்தாலும் கூட, இந்த தீர்மானம் ரஷ்யாவுக்கு எதிரானது என்பதால் அந்நாடு நெருக்கடியை சந்தித்திருக்கிறது.
போரை நிறுத்துவது, மக்களை காப்பாற்றதுவது எல்லாம் ஓகேதான். ஆனால் இனி வரும் நாட்களில் உக்ரைன் என்ன ஆகுமோ? என்று கேள்வி எழுந்திருக்கிறது.
அமெரிக்காவின் இந்த மாஸ்டர் பிளான் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மக்களே?












Click it and Unblock the Notifications