கச்சா எண்ணெயிலும் கை வைத்த டிரம்ப்.. வெனிசூலாவிடம் வாங்கினால் வரி என தடாலடி.. இந்தியாவுக்கு பாதிப்பா
நியூ யார்க்: வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடுகள் மீது 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். டிரம்பின் இந்த அறிவிப்பால், வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருந்தவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று அறிவித்த டிரம்ப், அதிபராக பொறுப்பேற்றதும் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார். அதேபோல, அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு அந்த நாடுகள் விதிக்கும் அதே அளவுக்கு வரியை விதிப்பேன் என்று கூறியுள்ளார்.

ஆசிய நாடுகளை பாதிக்கும்
டொனால்டு டிரம்ப் எடுத்து எடுத்து வரும் இந்த நடவடிக்கைகளால் சர்வதேச அளவில் வர்த்தக போர் மூளும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், வெனிசுலாவில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வெனிசூலாவை தண்டிக்கும் விதமாக டிரம்ப் எடுத்து இருக்க போகும் இந்த நடவடிக்கை சீனா, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளை பாதிக்கும் என்றும் சர்வதேச அளவில் புதிய நிச்சயமற்ற சூழலை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் இந்த வரி விதிப்பை டிரம்ப் அறிவித்து இருக்கிறார். இதன் மூலம் வெனிசுலாவிடம் இருந்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ எண்னெய் வாங்கும் நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிகிறது. ஓராண்டுக்கு இந்த 25 சதவிகித வரி வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு விதிக்கப்படும் என்று டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் இந்த நடவடிக்கை
அமெரிக்காவுக்குள் கொலைகாரர்களையும் வன்முறையாளர்களையும் வெனிசுலா அனுப்புவதாகவும் மொத்த அமெரிக்காவுக்கும் வெனிசூலா இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்து இருக்கிறார். அதேவேளையில் வெனிசுலாவில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி அதன் வளங்களை சுரண்டுவதற்காக பல ஆண்டுகளாக முயன்று வருவதாக ஒரு விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.
டிரம்பின் தற்போதைய இந்த வரி விதிப்பு நடவடிக்கை சீனா மற்றும் இந்தியாவுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் இந்த இருநாடுகளுக்குமே வெனிசூலா கச்சா எண்னெய் ஏற்றுமதி செய்கிறது. அமெரிக்கா மற்றும் ஸ்பெயினுக்கும் கூட எண்ணெய் ஏற்றுமதி செய்கிறது. கடந்த டிசம்பர் 2023 மற்றும் ஜனவரி 2024ல் வெனிசுலாவில் இருந்து அதிக எண்ணெய் வாங்கிய நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இந்தியா இருந்தது.
இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா?
வெனிசுலாவின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியில் பாதியளவுக்கு அதாவது ஒருமாதத்திற்கு 5,57,000- பிபிடி வாங்கியிருந்தது. கடந்ந ஆண்டில் 22 மில்லியன் பேரல்களை வெனிசுலாவிடம் இருந்து இந்தியா வாங்கியது. நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் கொள்முதலில் இது 1.5 சதவிகிதம் ஆகும்.
டிரம்பின் இந்த அறிவிப்பால் எண்னெய் விலை 1 சதவிதம் உயர்ந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் 73 டாலரில் இருந்து 84 டாலராக உயர்ந்தது. வெனிசுலாவில் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என்ற டிரம்பின் புதிய வரி அச்சுறுத்தல் எரிசக்தி சந்தையை ஆட்டம் காண வைக்கும் என்று சொல்லப்படுகிறது. அதேவேளையில் அமெரிக்காவில் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வதை தடுக்கும் வகையிலான நடவடிக்கையில் வெள்ளை மாளிகை ஈடுபடுவதாக தெரிகிறது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications