ஈரான் கதையை முடிக்கும் அமெரிக்கா? டிரம்ப்-பாக். அசீம் முனீர் சந்தித்தது ஏன்? இந்தியாவுக்கு பேராபத்து
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று பாகிஸ்தான் ராணுவ தளபதியான பீல்ட் மார்ஷல் அசீம் முனீரை சந்தித்து பேசினார். அவருக்கு மதிய விருந்து அளித்தார். இந்த சந்திப்பின்போது பாகிஸ்தானின் ராணுவ தளம், கடற்படை தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும், இதை செய்தால் பாகிஸ்தானுக்கு 5ம் தலைமுறை விமானம், ஆயுதங்களை தருவதோடு, இணைந்து வர்த்தகம் செய்யலாம் என்று கூறியுள்ளார். இது ஈரான் மற்றும் நம் நாட்டுக்கு பெரும் ஆபத்தாக பார்க்கப்படுகிறது. டிரம்ப் - அசீம் முனீர் சந்திப்பின் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வருமாறு:
நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த மோதலில் பாகிஸ்தான் மண்ணை கவ்வியது. நம் நாட்டின் ‛ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த மோதலில் நாம் தான் வெற்றி பெற்றோம். நம் நாட்டின் தாக்குதலை தாங்க முடியாமல் பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்த கெஞ்சியது. அதன்பிறகே மோதல் முடிவுக்கு வந்தது.

இருப்பினும் பாகிஸ்தானின் ராணுவ தளபதிக்கு ‛பீல்ட் மார்ஷல்' என்பது வழங்கப்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா இரட்டை வேடம் போடுகிறது. இந்தியா - பாகிஸ்தான் போரை நாங்கள் தான் நிறுத்தினோம் என்று டொனால்ட் டிரம்ப் மீண்டும் மீண்டும் பெருமைப்பட்டு கொள்கிறார். ஆனால் அதில் அமெரிக்காவின் பங்கு துளியும் இல்லை.
அதேபோல் பயங்கரவாதிகளை ஏற்க மாட்டோம். பயங்கரவாத செயல்களை ஒருபோதும் சகிக்க மாட்டோம் என்று கூறி வரும் டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருகிறார். நேற்றைய தினம் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீருக்கு அமெரிக்காவில் வைத்து டிரம்ப் மதிய விருந்து வழங்கினார். அதன்பிறகு இருவரும் பேசினர். இதனை நம் நாடு விரும்பவில்லை. இந்நிலையில் தான் தற்போது இருவருக்கும் நடந்த பேச்சுவார்த்தை குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தானில் உள்ள ராணுவ தளம் மற்றும் கடற்படை தளத்தை அமெரிக்கா பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று அசீம் முனீரிடம் கூறியுள்ளார். இதற்கு பாகிஸ்தான் ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த டீலுக்கு சம்மதம் தெரிவித்தால் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா உதவும். பாகிஸ்தானுக்கு 5ம் தலைமுறை விமானம் வழங்கப்படும். நிதி உதவி செய்யப்படும். பாதுகாப்பு துறை மற்றும் வர்த்தகம் துறை சார்ந்த புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளலாம் என்று டீல் செய்துள்ளார்.
இதற்கு பாகிஸ்தான் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் இது இந்தியா - ஈரானுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும். ஏனென்றால் பாகிஸ்தானும், ஈரானும் நேரடியாக எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் சண்டை உள்ளது. இப்போது இஸ்ரேல் - ஈரான் மோதலில் அமெரிக்கா ஈரான் மீது கடும் கோபத்தில் உள்ளது. ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி இஸ்ரேலிடம் சரணடைய வேண்டும் என்று டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் ஈரான் அதனை கேட்கவில்லை.
அதேபோல் ஈரான் அணுஆயுதம் தயாரிக்க அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருதரப்புக்கும் பேச்சுவார்த்தை நடந்தாலும் ஈரான் தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. இதனால் இஸ்ரேலை போல் அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்று சொல்லப்படுகிறது. இதனால் பாகிஸ்தானின் கடற்படை தளம், ராணுவ தளத்தை அமெரிக்காவுக்கு வழங்கினால் அங்கிருந்து ஈரானை எளிதாக தாக்க முடியும். இருநாடுகளும் அருகருகே இருப்பதால் எளிதாக அமெரிக்காவால் ஈரானை தாக்க முடியும். இதனால் டிரம்ப் இந்த டீலை அசீம் முனீர் முன்பு வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதேபோல் பாகிஸ்தானுக்கும், நமக்கும் ஏற்கனவே நீண்டகால பகை உள்ளது. இப்படியான சூழலில் அமெரிக்கா அந்த நாட்டுக்கு நிதி உதவி, 5ம் தலைமுறை போர் விமானங்கள் உள்ளிட்டவற்றை வழங்குவது நம் நாட்டின் பாதுகாப்புக்கும் பெரிய பிரச்சனையைாக மாறும். பாகிஸ்தானை எடுத்து கொண்டால் அமெரிக்காவுடன் நெருங்கிய நட்பு நாடாக இருந்தது. ஆனால் முந்தைய அதிபர் ஜோபைடன் ஆட்சி காலத்தில் பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு பலவீனமானது. ஜோ பைடன் ஆட்சியில் இருந்த 4 ஆண்டுகளிலும் பாகிஸ்தான் பிரதிநிதிகளை சந்திக்கவில்லை. ஆனால் டொனால்ட் டிரம்ப், ஆசியாவில் தனது இருப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளார். அதற்கு பாகிஸ்தானை பகடை காயமாக மாற்ற நினைக்கிறார். இதற்கான ஒரு முயற்சி தான் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீருடன் டிரம்ப் போட்ட இந்த ‛பேக்கரி டீல்'.
அதாவது நடிகர் அர்ஜூன் நடித்த ‛கிரி' திரைப்படத்தில் ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். நடிகர் வடிவேலுவும், அர்ஜூனும் பேசும் காட்சி இடம்பெற்றிருக்கும். கணபதி என்பவரிடம் அக்காள் காமாட்சி வேலை பார்த்தார். இருவர் பற்றியும் புரளி பேசினர். இதை தட்டிக்கேட்க போனபோது அக்காவை நான் வைத்து கொள்கிறேன். என் பேக்கரியை வேண்டுமானால் நீ வைத்துகொள் என்று கூறினார். டீல் பிடித்ததால் ஒப்புக்கொண்டேன் என்று கூறுவார். அதேபோல் தான் பாகிஸ்தானின் ராணுவ தளம், கடற்படை தளத்தை அமெரிக்கா பயன்படுத்த அனுமதித்தால் 5ம் தலைமுறை விமானம், வர்த்தக பேச்சுவார்த்தை, நிதி உதவி செய்வதாக டீல் பேசியுள்ளார் இந்த சதிகார டிரம்ப்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications