"B61-13".. அமெரிக்கா கையிலெடுக்கும் அணுஆயுதம்.. ஹிரோஷிமாவில் வீசிய குண்டைவிட 24 மடங்கு ‛பவர்புல்’
நியூயார்க்: ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை தடுத்து நிறுத்துவதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் தான் அமெரிக்கா புதிதாக அணுஆயுதம் ஒன்றை தயாரிக்கும் விஷயம் வெளியாகி உள்ளது. இந்த அணுஆயுதம் என்பது கொடூரமான விளைவுகளை ஏற்படுத்தும். புரியும்படி கூற வேண்டும் என்றால் 1945ம் ஆண்டில் ஜப்பானின் ஹிரோஷிமாவில் அமெரிக்கா வீசிய அணுகுண்டு ஏற்படுத்திய தாக்கத்தை விட 24 மடங்கு அதிக விளைவை ஏற்படுத்தும் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது உலக நாடுகள் இடையே கடும் மோதல் போக்கு என்பது ஏற்பட்டு வருகிறது. இந்த மோதல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லுகிறது. உதாரணமாக கூற வேண்டும் என்றால் இப்போது உக்ரைன் மீது சீனா போர் தொடங்கி உள்ளது. அதேபோல் பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கி உள்ளது.

இந்த போர் என்பது இஸ்ரேல் - லெபனானின் ஹெஸ்புல்லா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதலாக மாறி உள்ளது. மேலும் வடகொரியா - தென்கொரியா, சீனா - தைவான், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. அதுமட்டுமின்றி தற்போது அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இருக்கிறார். இவர் எந்த நேரத்தில் எந்த மாதிரியான உத்தரவை பிறப்பிப்பார் என்பதே தெரியாமல் உள்ளது. முதற்கட்டமாக அவர் உலக நாடுகளுக்கு கூடுதல் வரியை விதித்தார்.
இந்த வரி விதிப்பில் அமெரிக்கா - சீனா இடையே கடும் வர்த்தக போர் என்பது ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க அமெரிக்கா - ஈரான் இடையேயும் கடும் மோதல் உள்ளது. டொனால்ட் டிரம்பை எடுத்து கொண்டால் தனது முதல் பதவிக்காலத்தில் ஈரானை கடுமையாக தண்டித்தார். மோதல் காரணமாக ஈரான் மீது கடும் பொருளாதார தடைகளை விதித்தார். இப்போது 2 வது முறையாக அவர் அமெரிக்க அதிபரானாலும் கூட ஈரானை விடவில்லை. தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார்.
அதாவது அமெரிக்காவின் அச்சுறுத்தல் காரணமாக ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் ஈரான் அணுஆயுதம் தயாரிக்க கூடாது என்று டிரம்ப் கூறி வருகிறார். அதோடு அணுசக்தி திட்டம் என்ற பெயரில் அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று ஈரான் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஈரான் மீது குண்டு வீசப்படும். ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். தற்போது முதற்கட்டமாக ஈரான் - அமெரிக்கா இடையே மஸ்கட்டில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. 2 வது கட்ட பேச்சுவார்த்தை இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற உள்ளது.
இப்படியான சூழலில் தான் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஈரானை அணுஆயுதம் தயாரிக்க கூடாது என்று கூறும் அமெரிக்கா சக்திவாய்ந்த அணுஆயுதத்தை தயாரிக்கும் பணியை தொடங்க உள்ளது. அந்த அணுஆயுதத்தின் பெயர் B61-13. நாடுகளுக்கு இடையே மோதல் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அமெரிக்காவின் பாதுகாப்பு கருதி இந்த அணுகுண்டு என்பது தயாரிக்கப்பட உள்ளது. இதற்கான பணி என்பது விரைவில் தொடங்கப்பட உள்ளது.
அதுமட்டுமின்றி அமெரிக்காவின் அணுசக்தி திறனை வலுப்படுத்துவதன் ஒருபகுதியாகவும், பழைய அணுஆயுதங்களுக்கு பதில் புதிய அணுஆயுதங்களை கையில் வைத்திருக்கும் நோக்கத்திலும் இந்த நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கி உள்ளது. இந்த பி61-13 ரக அணுஆயுதம் என்பது B-21 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்களுடன் பயன்படுத்த முடியும்.
மேலும் தற்போது அமெரிக்கா தயாரிக்கும் பி61-13 அணுஆயுதம் என்பது மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும். எளிமையாக புரியும்படி கூற வேண்டும் என்றால் கடந்த 1945ம் ஆண்டில் ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ‛லிட்டில் பாய்' என்ற பெயர் கொண்ட அணுகுண்டை அமெரிக்கா வீசியது. அப்போது ஏற்பட்ட அழிவை விட இந்த பி61-13 ரக அணுகுண்டு 24 மடங்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள்.
B61-13 அணுகுண்டு என்பது கிராவிட்டி குண்டு என்று அழைக்கப்படுகிறது. தமிழில் சொல்ல வேண்டும் என்றால் ஈர்ப்பு விசை குண்டு. பொதுவாக ஏவுகணை அல்லது விமானத்தில் இருந்து அணுகுண்டு வீசப்படும்போது அது பயணிப்பதற்கு என்பது வழிகாட்டும் அமைப்பு என்பது இருக்கும். ஆனால் இந்த அணுகுண்டுக்கு அத்தகைய அமைப்பு தேவையில்லை. புவியீர்ப்பு விசையை பயன்படுத்தியே இந்த அணுகுண்டு துல்லியமாக இலக்கை தாக்கி அழிக்கும்.
-
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
கப்பலேறிய மானம்! அமெரிக்க வங்கியில் காப்பீட்டு ஆவணத்தில் ₹950 கோடி? மகேந்தர் மகிஜனி சிக்கியது எப்படி -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications