குலுங்கும் மத்திய கிழக்கு.. களமிறக்கப்பட்ட அமெரிக்க போர் கப்பல்கள்.. இஸ்ரேல் அருகே குவிக்கப்பட்ட படை
நியூயார்க்: இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் காரணமாக, அமெரிக்கா தனது கடற்படை பலத்தை மத்திய தரைக்கடல் பகுதியில் அதிகரித்துள்ளது. ஈரான் ராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் கடுமையான பதிலடியை கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அமெரிக்கா தனது போர் கப்பல்களை மத்திய கிழக்கில் உள்ள கடற்பகுதிகளுக்கு நகர்த்தி வருகிறது.
பாதுகாப்பு நடவடிக்கையில் அமெரிக்கா
பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஏவுகணை தாக்குதல்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட இரண்டு போர் கப்பல்கள் கிழக்கு மத்திய தரைக்கடல் நோக்கி நகர்த்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அப்பகுதியில் வேறு இடத்தில் இருந்த இந்த கப்பல்கள், தற்போது இஸ்ரேல் அருகே திருப்பி விடப்பட்டுள்ளன. பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரிகள், இது பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதி என்று தெரிவித்தனர்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க சொத்துக்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும். மேலும், ஈரான் ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்க இஸ்ரேலுக்கு உதவக்கூடும். கடந்த ஆண்டு அக்டோபரில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலை முறியடிக்க அமெரிக்க கப்பல்கள் இதேபோன்ற பங்கை வகித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஈரானும் இஸ்ரேலும் போர் முனைப்பை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அடுத்த சில தினங்களில் இப்போர் விரிவடையும் என்று ஈரான் எச்சரிக்கை அளித்துள்ளது. அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
போரை விரிவுபடுத்த ஈரான் முடிவு:
இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் தகுந்த பதிலடி கொடுக்கும் என உயர் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரான் அரசு தரப்பு வெளியிட்ட செய்தியில், "வரவிருக்கும் நாட்களில் போர் மேலும் தீவிரமடையும். இப்பகுதியில் உள்ள அமெரிக்க தளங்களும் இதில் அடங்கும். தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல் 'ரைசிங் லயன்' நடவடிக்கையைத் தொடங்கியவுடன், ஈரான் நேற்று இஸ்ரேலுக்கு எதிராக ஏவுகணைகளை செலுத்தியது. இதில் குடியிருப்புகள் தாக்கப்பட்டதில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா மீதான குற்றச்சாட்டுக்கள் மற்றும் தாக்குதல்
முன்னதாக, அமெரிக்காவுடனான அணுசக்தி திட்ட பேச்சுவார்த்தை பயனற்றது"என ஈரான் தெரிவித்தது. அமெரிக்கா இஸ்ரேலுக்கு தீவிர ஆதரவாக செயல்படுகிறது. அப்படிப்பட்ட அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு பலன் இல்லை. அதனால் அந்த ஒப்பந்தத்தை செய்யும் எண்ணம் இல்லை.
வரவிருக்கும் நாட்களில் போர் மேலும் தீவிரமடையும். இப்பகுதியில் உள்ள அமெரிக்க தளங்களும் இதில் அடங்கும். தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அமெரிக்கா ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்துவது போல் பாவனை செய்து கொண்டு, மறுபுறம் இஸ்ரேலை ஈரான் மீது தாக்குதல் நடத்த அனுமதித்துள்ளது. இது பேச்சுவார்த்தையை அர்த்தமற்றதாக்குகிறது. அமெரிக்காவின் அனுமதியின்றி இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியிருக்க முடியாது
பேச்சுவார்த்தை பயனளிக்கவில்லை என்றால், அமெரிக்காவுடன் மோதல் ஏற்படும். அப்படியானால், அனைத்து அமெரிக்க தளங்களும் எங்கள் எல்லைக்குள் உள்ளன. அவற்றை நாங்கள் குறிவைத்து தாக்குவோம், என்று ஈரான் எச்சரித்து உள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications