ஈரானை நிலைகுலைய வைத்த அமெரிக்கா.. அடுத்த 24 மணி நேரம் ரொம்ப முக்கியம்.. 3ம் உலகப்போர் வருது?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஈரான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அடுத்த 24 மணி நேரத்தில் எடுக்க போகும் முடிவில்தான் உலக அரசியலே அடங்கி உள்ளது. இதற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று இங்கே பார்க்கலாம்.

இஸ்ரேல் கோரிக்கையை ஏற்று ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. ஈரான் நாட்டில் உள்ள 3 அணு மையங்கள் மீது தாக்குதல் நடத்தியதை அதிபர் டிரம்ப் உறுதி செய்தார். இதனால் உலகப்போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று அணு அமைப்புகள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி முடிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

Israel Iran

டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், "ஈரானில் உள்ள மூன்று அணு sites மீது நாங்கள் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி முடித்துவிட்டோம். ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. அனைத்து விமானங்களும் தற்போது ஈரான் வான்வெளியை விட்டு வெளியேறிவிட்டன.

ஃபோர்டோவில் உள்ள முக்கியமான தளத்தில் முழு அளவிலான வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அனைத்து விமானங்களும் பத்திரமாக திரும்புகின்றன. இந்த சாதனையை நிகழ்த்திய அமெரிக்க வீரர்களுக்கு எனது வாழ்த்துகள். உலகில் இதை செய்யக்கூடிய ராணுவம் வேறு எந்த நாட்டிலும் இல்லை. அமைதிக்கு இதுவே சரியான நேரம்! இந்த விஷயத்தில் நீங்கள் காட்டிய கவனத்திற்கு நன்றி" என்று கூறியுள்ளார்.

அடுத்த 24 மணி நேரம் முக்கியம்

1. டிரம்ப் ஈரான் தாக்குதல் உலகப்போராக மாறும். ஈரான் - இஸ்ரேல் போர் உச்சம் அடைந்து உள்ளது. இஸ்ரேலும் ஈரானும் இன்று 8வது நாளாகத் தொடர்ந்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டன. இந்த போரில் அமெரிக்கா தலையிட்டு வருவதால் இது உலகப்போராக வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

2. டிரம்ப் செய்த இந்த செயல் இந்த போரை பெரிதாக்கும் சூழலை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா ஈரான் மீது குண்டு போட்டு உள்ளதால்.. ஈரான் பதிலடி தரும் வாய்ப்புகள் உள்ளன. இது நேட்டோவின் போராக மாறும். ஏனென்றால் அமெரிக்கா குண்டு போட்டால் அதற்கு ஈரான் பதிலடி தரும். இதனால் நிலைமை மோசமாகி நேட்டோ போரில் தலையிடும். இதற்கு பதிலடி ரஷ்யா கண்டிப்பாக போரில் குதிக்கும். ஈரான், ரஷ்யாவிற்கு துணையாக பல இஸ்லாமிய நாடுகள் களமிறங்கும். ஏன் சீனாவும் கூட களமிறங்கி தாக்குதல்களை நடத்தும் வாய்ப்புகள் உள்ளன. டிரம்ப் செய்த இந்த தவறு.. 3ம் உலகப்போருக்கு வித்திடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

3. அமெரிக்காவிற்கு பதிலடி ரஷ்யா கண்டிப்பாக போரில் குதிக்கும். ஈரான், ரஷ்யாவிற்கு துணையாக பல இஸ்லாமிய நாடுகள் களமிறங்கும். ஏன் சீனாவும் கூட களமிறங்கி தாக்குதல்களை நடத்தும் வாய்ப்புகள் உள்ளன. டிரம்ப் செய்து வரும் இந்த தவறு.. 3ம் உலகப்போருக்கு வித்திடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இஸ்ரேலை பொதுவாக ஆதரிக்கும் நாடுகள், ஈரானை ஆதரிக்கும் நாடுகள் மற்றும் நடுநிலையான நாடுகள் பற்றி இங்கு காணலாம். இந்த நாடுகள் போரில் குதிக்கும் பட்சத்தில் அது 3ம் உலகப்போராக கண்டிப்பாக மாறும்.

4. அதுவே அமெரிக்கா இஸ்ரேலுக்கு தொடர்ந்து வரும் நாட்களில் ஆதரவு தராத பட்சத்தில் இஸ்ரேல் தனித்து விடப்படும். அது ஈரானின் வெற்றிக்கும் காரணம் ஆகலாம். முக்கியமாக ஈரான் இப்போது வலிமையாக திருப்பி அடிக்க தொடங்கி உள்ளதால் இஸ்ரேலின் படுதோல்விக்கு அது காரணமாக அமைந்துவிடும். மத்திய கிழக்கின் அரசியல் மாறும்.

5 . ஈரான் இந்த போரில் அடுத்த 24 மணி நேரத்தில் என்ன முடிவு எடுக்க போகிறதோ.. எப்படி பதிலடி தரப்போகிறதோ அதை வைத்தே இனி நடக்க போகும் நிகழ்வுகள் தீர்மானம் ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+