ட்ரம்ப்பின் பரம வைரி! அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக ரான் டிசாண்டிஸ் அறிவிப்பு.. யார் இவர்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக ப்ளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிஸ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.குடியரசு கட்சி சார்பாக போட்டியிட போவதாக ரான் டிசாண்டிஸ் அறிவித்து உள்ளார்.
அதிபர் தேர்தலில் போட்டியிட ரான் டிசாண்டிஸ் டிரம்பை எதிர்த்து உட்கட்சி பிரைமரி தேர்தலில் வெல்ல வேண்டும்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கும் முன் உட்கட்சி ரீதியாக ஜனநாயக கட்சி, குடியரசு கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும். ஒரு கட்சியில் ஒருவருக்கு மேல் போட்டியிட விரும்பும் பட்சத்தில் அவர்களுக்கு இடையே பிரைமரி தேர்தல் நடக்கும்.
கட்சி ரீதியாக நடக்கும் பிரைமரி தேர்தலில் அதிக நிதி ஈட்டும் நபர், அதிக மக்கள் ஆதரவு கொண்டவர், முக்கியமான வாக்குறுதி, கொள்கைகளை கொண்டவர் கட்சி ரீதியிலான பிரைமரி தேர்தலில் வெற்றிபெறுவார்.
அதன்பின் அவர் அதிகாரப்பூர்வமாக அந்த கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளர் ஆவார். அந்த வகையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக ப்ளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிஸ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.குடியரசு கட்சி சார்பாக போட்டியிட போவதாக ரான் டிசாண்டிஸ் அறிவித்து உள்ளார்.
டிரம்ப் ஏற்கனவே குடியரசு கட்சி சார்பாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக கூறிய நிலையில் அதிபர் தேர்தலில் போட்டியிட ரான் டிசாண்டிஸ் டிரம்பை எதிர்த்து உட்கட்சி பிரைமரி தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.
இரண்டு பேருமே தீவிர வலதுசாரிகள் என்றாலும் கூட இரண்டு பேருக்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. டிரம்பின் பரம எதிரிதான் ரான் என்பது குறிப்பிடத்தக்கது.
கொள்கை ரீதியாக, விமர்சனம் ரீதியாக இவர்கள் இருவருக்கும் இடையில் மோதல் அதிகம் உள்ளதால் குடியரசு கட்சி பிரைமரி தேர்தல் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யார் இவர்?
முன்னாள் ராணுவ வீரரான ரான் டிசாண்டிஸ் யேல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற வலதுசாரி குடியரசு கட்சி உறுப்பினர்,. இவர் ஹார்வர்ட் சட்டப் பல்கலையில் பட்டம் பெற்றுள்ளார். 2004 இல் அமெரிக்க கடற்படையில் சேர்ந்து பணியாற்றி வந்தார்.
அந்த நாட்டு SEAL குழுவின் சட்ட ஆலோசகராக சில காலம் பணியாற்றினார். ராணுவத்தில் மிக நீண்ட அனுபவம் கொண்டவர் இவர். அமெரிக்க ராணுவத்தில், நீதித்துறையின் சிறப்பு உதவி அமெரிக்க வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு சில காலம் பணியாற்றினார். அதற்கு முன்பு 2007 இல் ஈராக்கில் சிறிது காலம் ராணுவத்தில் பணியாற்றினார்.
ராணுவத்தில் இருந்து வெளியே வந்து குடியரசு கட்சியில் இணைந்து ப்ளோரிடாவில் அரசியல் செய்து வந்தார். 2012 இல் அவர் முதன்முதலில் பிரதிநிதிகள் சபைக்கு ப்ளோரிடாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு கட்டத்தில், அவர் தீவிர டிரம்ப் ஆதரவாளராக இருந்தவர் என்பதுதான் இதில் சுவாரசிய விஷயம். ஆனால் அதன்பின் பல்வேறு விவரங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இவர்கள் எதிரிகளாக மாறினர்.
தற்போது ப்ளோரிடா கவர்னராக உள்ளார்.
இதுவரை நடத்தப்பட்ட ராய்ட்டர்ஸ்/இப்சோஸ் கருத்துக் கணிப்பு, டொனால்ட் டிரம்ப் 49 சதவீத குடியரசுக் கட்சியினரால் ஆதரிக்கப்படுவதாகவும், டிசாண்டிஸ் 19 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதாகவும் காட்டுகிறது.
இதனால் பிரைமரி தேர்தலில் டிரம்ப் கையே ஓங்கி உள்ளது.
2024 தேர்தலில் டொனால்ட் டிரம்பிறகு வயதாகிவிடும். அவருக்கு 78 வயதாகும் என்பதால் ரான் டிசாண்டிஸுக்கு வயது ரீதியாக கூடுதல் வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications