போருக்கு தீவிரமாக தயாராகும் டிரம்ப்.. மத்திய கிழக்கிற்கு கூடுதல் படைகளை அனுப்பிய அமெரிக்கா.. அச்சம்

ஈரான் மீது தாக்குதல் நடத்த வசதியாக இதுவரை மொத்தமாக 1,23,000 பாதுகாப்பு படையினரை அமெரிக்க ராணுவம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Trump warns Iran | ஈரானுக்கு டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை

    நியூயார்க்: ஈரான் மீது தாக்குதல் நடத்த வசதியாக இதுவரை மொத்தமாக 1,23,000 பாதுகாப்பு படையினரை அமெரிக்க ராணுவம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி உள்ளது.

    ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான சண்டை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஈரானை அமெரிக்கா மொத்தமாக உலக நாடுகளிடம் இருந்து தனித்து விட நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் அமெரிக்கா ஒரு வகையில் வெற்றிபெற்றுவிட்டது என்றும் கூறலாம்.

    முதலில் ஈரானிடம் இருந்து உலக நாடுகள் எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா தடை செய்தது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்த காரணத்தால் அங்கு உள்நாட்டு போர் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது. ஆம் அங்கு மக்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராக கடுமையாக போராடி வருகிறார்கள்.

    என்ன தாக்குதல்

    என்ன தாக்குதல்

    தற்போது ஈரான் மீது அமெரிக்க டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. முதற் கட்டமாக ஈராக்கில் உள்ள ஈரான் படைகள் மீதும், ஈரான் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்றும், இன்றும் நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை மொத்தம் 14 முக்கிய ஈரான் தலைவர்கள் பலியாகி உள்ளனர்.

    போர் எப்படி

    போர் எப்படி

    நேற்று நடந்த தாக்குதலில் ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். அதேபோல் ஈரான் மிலிட்டரி கமாண்டர் அபு மஹ்தி அல் முஹாண்டிஸும் கொலை செய்யப்பட்டார். இதனால் அங்கு போர் உருவாவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.

    என்ன படைகள்

    என்ன படைகள்

    ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராக 1,20,000 போர் படைகளை அமெரிக்க அரசு மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி உள்ளது. கடந்த வருடத்தில் இருந்தே படையினர் அங்குதான் இருக்கிறார்கள். தற்போது கூடுதலாக 3000 மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா தனது படைகளை குவித்து வருகிறது. மற்ற நாடுகளில் இருக்கும் படைகளையும் அமெரிக்கா இங்கு அனுப்ப உள்ளது.

    தயார்

    தயார்

    அதன்பின் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறார்கள். ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராக இன்னும் மற்ற நாடுகளின் உதவியை அமெரிக்கா கோரியுள்ளது. விமானங்கள், போர் கப்பல்களையும் அமெரிக்க ஈரானை நோக்கி அனுப்பி உள்ளது.

    ஈரான் ரெடி

    ஈரான் ரெடி

    இந்த தாக்குதலுக்கு திருப்பி கொடுக்க ஈரானும் தயார் ஆகி வருகிறது. ஈரான் இதற்கு பெரிய பதிலடியை கொடுக்கும் என்று நேற்றே எச்சரித்து இருந்தது. ஈரானும் தங்கள் எல்லையை நோக்கி வேகமாக படைகளை குவித்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் இந்த போர் தொடங்கலாம் என்று கூறுகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+