பீஸ்ட் பாணியில்.. மாலுக்குள் துப்பாக்கியோடு நுழைந்த நபர்.. அமெரிக்காவில் சரமாரி சூடு! 10 பேர் காயம்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதே மாலில் மர்ம நபர் நடத்திய கத்தி குத்து தாக்குதலில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளன. ப்ரூக்லின் ரயில் நிலையத்தில் கடந்த வாரம்தான் ரயிலுக்கு உள்ளே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இதில் 25 பேர் படுகாயம் அடைந்தனர். 5 பேர் மிக மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பிரான்க் ஜேம்ஸ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இந்த நிலையில் தற்போது தெற்கு கரோலினாவில் இதேபோல் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கு இருக்கும் மால் ஒன்றில் திடீரென மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் தகவல்

போலீஸ் தகவல்

இந்த மால் கொலம்பியாவில் இருந்து 10 மைல் தூரத்தில் உள்ளது. மாலில் இருந்த 15 வயது சிறுவன் முதல் 73 வயது முதியவர் வரை பலர் இந்த துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கியால் சுட்டது மட்டுமின்றி கையில் இருந்த கத்தி மூலம் அந்த மர்ம இரண்டு பேரை கொடூரமாக குத்தி இருக்கிறார்.

இரண்டு பேர்

இரண்டு பேர்

இந்த தாக்குதல் சம்பவத்தில் காயம் அடைந்தஹ் இரண்டு பேர் மிக மோசமான உடல்நிலையில் இருக்கிறார்கள். மொத்தம் 3 பேர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரிடமும் துப்பாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மூவரும் சேர்ந்து துப்பாக்கி சூடு நடத்தி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

திட்டம் போட்டு தாக்குதல்

திட்டம் போட்டு தாக்குதல்

இவர்கள் மூன்று பேரும் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன ரீதியான தாக்குதலாக இது இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+