ரெட் லைனை தாண்டிய அமெரிக்கா? ரெடியாக நிற்கும் ரஷ்யா! இது 3ம் உலகப்போருக்கு வித்திடும்! என்ன நடந்தது?
நியூயார்க்: உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வருவதும், நேட்டோ படைகளை வைத்து ஆயுதங்களை வழங்க சொல்வதும் சர்வதேச அளவில் போர் வெடிக்கும் அபாயத்தை ஏற்படுத்தலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...யார் இப்படி எச்சரிக்கை விடுத்தது? இனி என்ன நடக்கும்? என்று பார்க்கலாம்!
உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நடப்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. இதில் இரண்டு பின்னணி உள்ளது. உக்ரைன் வாதம் என்று பார்த்தால் - ரஷ்யா பழைய சோவியத் யூனியனை நிறுவ பார்க்கிறது. இதனால் உக்ரைனை ஆக்கிரமித்து, தங்கள் நாட்டில் சேர்க்க பார்க்கிறது என்பது.
ரஷ்யா வாதம் என்று பார்த்தால் -உக்ரைன் ஐரோப்பா உடனும், நேட்டோ உடனும் நெருக்கம் காட்டுகிறது. உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் அது எங்களுக்கு பாதுகாப்பு குறைபாட்டை ஏற்படுத்தும். அதனால் தற்காப்பிற்காக போர் தொடுத்துள்ளோம். இதுதான் போருக்கான காரணம்!

உக்ரைன் நேட்டோ
உக்ரைன் நேட்டோவில் இணைய தொடக்கத்தில் முயன்றது என்னவோ உண்மைதான். ஆனால் ரஷ்ய எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இது நடக்கவில்லை. இந்த போரை பயன்படுத்தி மேற்கு உலக நாடுகள் தற்போது ரஷ்யாவை நிர்மூலமாக்க முயன்று கொண்டு இருக்கின்றன. உலகில் எந்த நாட்டு போரிலும் நடக்காத வகையில் உக்ரைனுக்கு மட்டும் 40+ நாடுகள் ஆயுதங்கள், ஏவுகணைகள், துப்பாக்கிகள், பீரங்கிகளை அனுப்பி உதவி செய்து வருகிறது. அமெரிக்காவும் கணக்கு இல்லாமல் ஆயுதங்களை அனுப்பி வருகிறது.

நேட்டோ அனுப்பவில்லை
நேட்டோ படைகள் நேரடியாக ஆயுதம் அனுப்பவில்லை என்றாலும், நேட்டோவில் இருக்கும் உறுப்பு நாடுகள் தனி தனியாக ஆயுதங்களை அனுப்பி வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆயுதங்களை வழங்குவது மூன்றாம் உலகப்போருக்கு வித்திடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 1980ல் ரஷ்ய படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்த போது அங்கு தாலிபான் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளுக்கு அமெரிக்கா ஏகப்பட்ட ஆயுதங்களை வழங்கியது.

40 வருட போர்
இதனால் கிட்டத்தட்ட அங்கு மாறி மாறி 40 வருடம் போர் நடந்தது. ரஷ்யா - அமெரிக்கா அங்கே proxy war மேற்கொண்டது. அதே நிலை உக்ரைனில் வரலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இப்போது மேற்கு உலக நாடுகளின் அழுத்தம், அமெரிக்க செனட்டர்கள் அழுத்தம், ரஷ்ய எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதங்களை அனுப்பி வருகிறது. அமெரிக்க வரலாற்றில் அனுப்பப்பட்ட ஆயுதங்களில் இது மிக அதிகம். ஏற்கனவே இதற்கு உக்ரைனுக்கு அமெரிக்கா 350 மில்லியன் டாலர் உதவி அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

உதவி எவ்வளவு
உதாரணமாக அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் இதுவரை பீரங்கிகளை அழிக்கும் 17000 ஆண்டி டேங்க் ஜாவிலின் ஏவுகணைகளை உக்ரைனுக்கு கொடுத்துள்ளது.இதில் 90 சதவிகிதம் அமெரிக்காவின் சொந்த மண்ணில் தயாரிக்கப்பட்டது. அதோடு உக்ரைனுக்கு போர் விமானங்களை அனுப்பி அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. இதனால் நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு போர் விமானங்களை எந்த நொடி வேண்டுமானாலும் அனுப்பும் வாய்ப்புகள் உள்ளன.

போலந்து
அதேபோல் போலந்து, ரோமானிய ஆகிய நாடுகள் உக்ரைனுக்கு போரில் உதவ வேண்டும் என்றும் அமெரிக்கா தூண்டி வருகிறது. அமெரிக்க உள்துறை அமைச்சர் பிளிங்கன் சமீபத்தில்தான் இந்த கோரிக்கையை வைத்தார். இதையடுத்தே ரஷ்ய அதிபர் புடின் உக்ரைனுக்கு போர் உபகரணங்களை வழங்கும் நாடுகளை பட்டியலிட்டு இவை எல்லாம் எனக்கு எதிரி நாடுகள் என்று அறிவித்தார். அது மட்டுமின்றி உக்ரைன் விமானங்களை எடுக்க விமான தளங்களை வழங்கும் நாடுகளும் இந்த போரில் ஈடுபடுவதாக கணக்கில் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

350 மில்லியன் டாலர்
உக்ரைனுக்கு அமெரிக்கா அறிவித்து இருந்த போர் உதவி பொருட்களில் 350 மில்லியன் டாலரில் 70 சதவிகிதம் ஏற்கனவே உக்ரைனுக்கு வழங்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி உக்ரைனுக்கு அமெரிக்கா நேரடியாக உதவி செய்வது மூன்றாம் உலகப்போரில் கொண்டு போய் முடியும் என்று அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு செனட்டர்கள், வெளியுறவுத்துறை அதிகாரிகள், குடியரசு கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்கா உக்ரைனில் விமானம் பறக்க தடை விதிக்க கூடாது. அப்படி விதித்தால் அங்கு பறக்கும் ரஷ்ய போர் விமானங்களை அமெரிக்கா அல்லது நேட்டோ படைகள் சுட்டு வீழ்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
Recommended Video

மூன்றாம் உலகப்போர்
இதனால் அது ரஷ்ய - அமெரிக்கா போராக மாறும். அதோடு இந்த அளவிற்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதும் ரஷ்யாவை சீண்டும் வாய்ப்புகள் உள்ளன. அவர்களின் ரெட் லைனை நாம் கிராஸ் செய்கிறோம். இதுவும் கூடாது மூன்றாம் உலக்போருக்கான தொடக்கமாக இருக்கும் என்று குடியரசு கட்சியின் செனட்டர் மார்க்கோ ரூபியோ எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது அமெரிக்கா இந்த அளவு ஆயுதங்களை அனுப்புவது உக்ரைனுக்கு நல்லது என்றாலும் ரஷ்யாவை இது உலகப்போரை தூண்ட வைக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications