தேர்தலை விடுங்க.. அமெரிக்காவில் சோதிக்கப்படும் அணு ஆயுத திறன் கொண்ட ஏவுகணை?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் ஒருபக்கம் வரும் நிலையில்.. இன்னொரு பக்கம் அமெரிக்க ராணுவம் சார்பாக அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்க கூடிய ஏவுகணை ஒன்றை சோதனை செய்ய உள்ளதாக அந்நாட்டு அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றுள்ளார். முன்னாள் அதிபரும் குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் 47வது அதிபராக பதவி ஏற்க உள்ளார்.

us presidential election 2024 kamala harris donald trump 2024

அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்க முன்னாள் அதிபரும் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் வெற்றிபெற்றுள்ளார். துணை அதிபர் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் கடுமையான தோல்வியை சந்தித்துள்ளார். டொனால்ட் டிரம்ப் மெஜாரிட்டிக்கு தேவையான 270க்கும் அதிகமான எலக்ட்ரல் வாக்குகளை பெற்று வெற்றி பெறும் நிலையில் உள்ளார். தற்போது வரை 277 எலக்ட்ரல் வாக்குகளை வென்றுள்ளார். இதன் மூலம் டிரம்ப் வெற்றி உறுதியாகி உள்ளது. கமலா ஹாரிஸ் 224 வாக்குகளை வென்றுள்ளார். மொத்தமாக 538 எலக்ட்ரல் வாக்குகளில் 270 யாருக்கு கிடைக்கிறதோ அவர்தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார். அந்த வகையில் டிரம்ப் வென்று மீண்டும் அதிபராகிறார்.

இப்படிப்பட்ட நிலையில்தான் அமெரிக்க ராணுவம் சார்பாக ஹைப்பர் சோனிக் வேகத்தில் செல்ல கூடிய.. நியூக்கிளியர் ஏவுகணை ஒன்றை சோதனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்க கூடிய ஏவுகணையை சோதனை செய்ய உள்ளனர். அங்கே தேர்தல் வாக்குகள் முடிந்த சில மணி நேரங்களில் ஏவுகணை சோதனை நடத்தப்பட உள்ளது.

அமெரிக்கா ஒரு ஆட்டோ பைலட் நாடு. அதாவது அங்கே அதிபர் இருந்தாலும் இல்லாவிட்டாலும்.. தேர்தல் நடந்தாலும் நடத்தாவிட்டாலும் கூட எல்லா பணிகளும்.. முக்கியமாக ராணுவ பணிகள் திட்டமிட்டபடி நடக்கும். இதன் காரணமாகவே அமெரிக்கா ஒரு ஆட்டோ பைலட் நாடு என்று அழைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் இன்று அதிபர் தேர்தல் நடந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் அந்நாட்டு ராணுவம் ஏவுகணை சோதனையை நடத்துகிறது.

கலிபோர்னியாவில் உள்ள Vandenburg Space Force Baseல் இருந்து அமெரிக்காவின் Minuteman III intercontinental ballistic missile (ICBM) எனப்படும் ஹைப்பர் சோனிக் வேகத்தில் செல்ல கூடிய ஏவுகணையை சோதனை செய்ய உள்ளனர்.

அமெரிக்காவின் அணு ஆயுத ஏவுகணைகளில் ஒன்றுதான் ஐசிபிஎம் ஆகும். ஐசிபிஎம் ஏவுகணை ஏவுகணை தளத்தில் இருந்து 4,200 மைல் தொலைவிற்கு பயணம் செய்து வடக்கு பசிபிக் தீவான குவாஜலின் அட்டோலில் உள்ள பகுதி ஒன்றில் சோதனை தாக்குதல் நடத்தும். இதற்கு 22 நிமிடங்கள் எடுக்கும். ICBM ஆனது ஒரு மணி நேரத்திற்கு 15,000 மைல்களுக்கு மேல் பயணிக்க முடியும், உலகம் முழுவதும் உள்ள எந்த இலக்கையும் தாக்கும் திறன் கொண்டதுதான் அமெரிக்காவின் Minuteman III intercontinental ballistic missile (ICBM) எனப்படும் ஹைப்பர் சோனிக் ஏவுகணை.

அமெரிக்க அணு ஆயுத போருக்கு.. அதிகம் முன்னிறுத்த கூடிய.. முதல் தேர்வாக வைத்திருக்க கூடிய ஏவுகணைதான் Minuteman III intercontinental ballistic missile (ICBM) ஹைப்பர் சோனிக் ஏவுகணை. தற்போது இஸ்ரேல் - ஈரான் மோதல் உச்சம் அடைந்துள்ளது. இஸ்ரேலை நாங்கள் இரும்புக்கரம் கொண்டு பாதுகாப்போம்.. ஈரான் இஸ்ரேலுக்கு பதிலடி தர நினைத்தால் கடுமையான விளைவுகளை சந்திக்கும் என்று அமெரிக்கா எச்சரித்து உள்ளது.

இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதில் தர ஈரான் நினைக்க கூடாது. இரண்டு தரப்பும் மாறி மாறி தாக்கிவிட்டன. இந்த மோதல் முடிந்துவிட்டது. இனி ஈரான் தவறு செய்யக்கூடாது. இனி ஈரான் தாக்குதல் நடத்தினால் அது நிலைமையை மோசமாக்கும்.

அமெரிக்கப் படைகள் இஸ்ரேலை பாதுகாக்கும். இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலளிப்பதில் ஈரான் தவறு செய்யக்கூடாது என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்டிடம் பேசிய பிறகு கூறினார். இஸ்ரேலுக்காக பாதுகாப்பாக உறுதுணையாக இருப்போம்.

ஈரான் இதில் இனி எந்த விதமான தாக்குதலையும் நடத்த கூடாது. இஸ்ரேலை நாங்கள் இரும்புக்கரம் கொண்டு பாதுகாப்போம்.. ஈரான் இஸ்ரேலுக்கு பதிலடி தர நினைத்தால் கடுமையான விளைவுகளை சந்திக்கும் என்று அமெரிக்கா எச்சரித்து உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் அமெரிக்க ராணுவம் சார்பாக அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்க கூடிய ஏவுகணை சோதனை செய்யப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+