ராமர் கோயில் கும்பாபிஷேகம்! அமெரிக்காவில் இந்து அமைப்பு உற்சாகம்! சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு
நியூயார்க்: வரும் 22ம் தேதி அயோத்தியில் ராம் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இந்நிலையில், அமெரிக்கா முழுவதும் 40-க்கும் மேற்பட்ட விளம்பரப் பலகைகளை வைத்து அமர்க்களப்படுத்தியுள்ளது விஷ்வ ஹிந்து பரிஷத்தின் (விஎச்பி) அமெரிக்க பிரிவு.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்ததாக நம்பப்படுகிறது. இந்நிலையில், அவருக்கான கோயிலை கட்ட கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள் என பிரமாண்டமாக ரூ.1,100 கோடியில் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோயிலில் வரும் 22ம் தேதி குழந்தை ராமர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது.

22ஆம் தேதி பிற்பகல் 12.29.08 மணிமுதல் 12.30.32 வரை (84 விநாடிகளில்) பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. பதினாறு பொருத்தங்களில் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைந்துள்ளதால் இக்குறுகிய காலத்தில் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது என ஸ்ரீ ராமஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறியுள்ளார். குழந்தை ராமரின் சிலையின் பீடம் 3 அடி உயரத்தைக் கொண்டது. இச்சிலை மக்ரானா மாா்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது.
கோயிலின் கும்பாபிஷேகம், பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், கோவில் அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் நாடு முழுவதும் இருந்து முக்கிய தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்க வைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்த கோயிலின் கும்பாபிஷேகம் முடிந்த பின்னர், தினந்தோறும் சுமார் 3 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்கா முழுவதும் 40-க்கும் மேற்பட்ட விளம்பரப் பலகைகளை வைத்து அமர்க்களப்படுத்தியுள்ளது விஷ்வ ஹிந்து பரிஷத்தின் (விஎச்பி) அமெரிக்க பிரிவு. டெக்சாஸ், இல்லினாய்ஸ், நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் ஜார்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் இந்த விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.
அமெரிக்காவின் இந்து பரிஷத் பொதுச் செயலாளர் அமிதாப் வி.டபிள்யூ மிட்டல் கூறுகையில், "ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை அமெரிக்க இந்துக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 21ம் தேதி இரவு நியூயார்க், நியூ ஜெர்சி உள்ளிட்ட பகுதிகளில் பிரம்மாண்ட கொண்டாட்டங்கள் நடைபெறும்" என்று கூறியுள்ளார். கார் பேரணி, கருத்தரங்குகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் இவர்கள் ஒருங்கிணைத்து வருகின்றனர்.
மொரிஷியஷ் அரசு ஜன.22ம் தேதியன்று இந்தியாவை சேர்ந்தவர்களுக்கு 2 மணி நேரம் விடுமுறையை அறிவித்திருக்கிறது. அன்று பிற்பகல் 2-4 மணிரை வரை இந்துக்கள் பெர்மிஷன் எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications