இந்தியா - பாக் போரை நிறுத்தியது நான் தான்.. 25வது முறையாக கூறிய டிரம்ப்.. கிண்டல் செய்த காங்கிரஸ்
நியூயார்க்: நம் நாட்டுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான போரில் 5 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது. அணுஆயுத போராக முடிய இருந்ததால் உடனடியாக நிறுத்தினோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 25வது முறையாக கூறியுள்ளார். இதனை ‛வெள்ளி விழா' என காங்கிரஸ் கட்சியினர் கூறியுள்ளனர்.
ஏப்ரல் மாதம் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு பாகிஸ்தான் மீது ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை எடுத்தது. கடந்த மே 7 ம் தேதி முதல் 10ம் தேதி வரை 4 நாட்கள் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் நம் நாடு பாகிஸ்தானை குறிவைத்து தாக்கியது. இதில் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

அதேபோல் ராணுவ தளம், விமான தளங்கள் என்று 12 முக்கிய இடங்கள் சேதமடைந்தன. பலத்த சேதமடைந்தன. இந்த தாக்குதலின்போது பாகிஸ்தானுக்கு துருக்கி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் உதவிகளை வழங்கின. ஆனாலும் ஒற்றை ஆளாக நம் நாட்டின் படை வீரர்கள் பாகிஸ்தானை பந்தாடினர்.
நம் நாடு அடித்த அடியில் நடுங்கிப்போன பாகிஸ்தான் மொத்தமாக சரணடைந்தது. போரை நிறுத்தும்படி நம்மிடம் கெஞ்சியது. இதையடுத்து மோதல் முடிவுக்கு வந்தது. ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்போ, இந்தியா - பாகிஸ்தான் போரை அமெரிக்கா தான் நிறுத்தியது. நாங்கள் தலையீடு செய்யாவிட்டால் அணுஆயுத போராக மாறியிருக்கும் என்று கூறி வருகிறார். பாகிஸ்தான் கேட்டு கொண்டதால் தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. இதில் அமெரிக்காவிற்கு எந்த தொடர்பும் இல்லை என்று பலமுறை கூறிவிட்டது.
ஆனாலும் டிரம்ப் விடவில்லை. இந்நிலையில் தான் தற்போது மீண்டும் டொனால்ட் டிரம்ப் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான் தான் என்று 25வது முறையாக கூறியுள்ளார். இதுதொடர்பாக டொனால்ட் டிரம்ப், ‛‛இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான போரை நிறுத்திவிட்டோம். ஏனென்றால் அது அணுஆயுத போராக முடிகிறது. 5 விமானங்களை சுட்டு வீழ்த்தினர். நான், அவர்களை அழைத்து பேசினேன். போரை தொடர்ந்தால் இனி அமெரிக்காவின் வர்த்தகம் செய்ய முடியாது என்று கூறினேன். இதற்கு காரணம் இருநாடுகளும் சக்திவாய்ந்த அணுஆயுதங்களை வைத்துள்ளன.
இந்த போர் தொடர்ந்தால் எங்கு போய் முடிந்திருக்கும் என்பது எனக்கு தெரியும். அணுஆயுதத்தில் தான் போர் முடிந்து இருக்கிறேன். இதனால் தான் போரை நிறுத்தினேன்'' என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் உடனான போரை நிறுத்தியதில் அமெரிக்காவின் பங்கு எதுவும் இல்லை என்று ஏற்கனவே நம் நாடு கூறிவிட்டது.
ஆனாலும் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான் தான் என்று தம்பட்டம் அடித்து வருகிறது. இப்போது அவர் கூறியிருப்பது 25வது முறையாகும். இதனால் காங்கிரஸ் கட்சியினர் ‛வெள்ளி விழா' என்று கூறி மத்திய அரசை சீண்டி வருகின்றனர். ஏற்கனவே போரில் இழந்தது பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். அதேபோல் நாடாளுமன்றத்தில் ‛ஆபரேஷன் சிந்தூர்' பற்றி விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தின. இதனை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications