இந்த போட்டோவை பாருங்க! கார்ல்சனை கொண்டாடிய மீடியா! ஓரமாக நின்ற பிரக்ஞானந்தா! அடுத்து நடந்த ட்விஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: கிரிப்டோ கோப்பை செஸ் தொடரில் இன்று உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை தமிழ்நாட்டு வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா வீழ்த்தி வெற்றிபெற்றார். இந்த தொடருக்கு முன்பாக நடந்த சம்பவம் ஒன்றுதான் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

Recommended Video

    Magnus Carlsen-ஐ மீண்டும் வீழ்த்திய Praggnanandhaa #Sports

    எதுவுமே இரண்டு முறை நடந்தால் அது சாதனை கிடையாது. அது வெறும் லக். ஒரு விஷயம் பழக்கமாக வேண்டும் என்றால் அது மூன்று முறை நடக்க வேண்டும் என்று கூறியவர் மேக்னஸ் கார்ல்சன். தற்போது அதே மேக்னஸ் கார்ல்சனை 3வது முறையாக வீழ்த்தி அவரை வெற்றிபெறுவதை "பழக்கமாக" மாற்றி இருக்கிறார் தமிழ்நாட்டு வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா.

    ஆம் என்னதான் கார்ல்சன் உலக சாம்பியனாக இருந்தாலும் இந்த வருடத்தில் மட்டும் மூன்றாவது முறையாக தமிழ்நாடு வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தாவிடம் அவர் தோல்வி அடைந்துள்ளார்.

    சமீபத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட் தொடரில் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா கொஞ்சம் சொதப்பிய நிலையில் இன்று நடந்த கிரிப்டோ கோப்பை தொடரில் சிறப்பாக ஆடி கார்ல்சனை வீழ்த்தினார்.

     என்ன நடந்தது?

    என்ன நடந்தது?

    கிரிப்டோ கோப்பை தொடர் செஸ் போட்டிகளில் முக்கியமான ஒரு தொடர் ஆகும். சர்வதேச அளவில் ரேங்கை உயர்த்திக்கொள்ள இது முக்கியமான ஒரு தொடராக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் புளோரிடாவில் கடந்த ஒரு வாரமாக இந்த தொடர் நடந்து வருகிறது. இதில்தான் கார்ல்சன் வென்று சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். ஆனால் அதே சமயம் இவர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தாவை எதிர்கொண்ட போட்டியில் அவரிடம் தோல்வி அடைந்துள்ளார்.

    என்ன நடந்தது?

    என்ன நடந்தது?

    கிரிப்டோ கோப்பை தொடர் செஸ் போட்டிகளில் முக்கியமான ஒரு தொடர் ஆகும். சர்வதேச அளவில் ரேங்கை உயர்த்திக்கொள்ள இது முக்கியமான ஒரு தொடராக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் புளோரிடாவில் கடந்த ஒரு வாரமாக இந்த தொடர் நடந்து வருகிறது. இதில்தான் கார்ல்சன் வென்று சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். ஆனால் அதே சமயம் இவர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தாவை எதிர்கொண்ட போட்டியில் அவரிடம் தோல்வி அடைந்துள்ளார்.

    தோல்வி

    தோல்வி

    ஆம் என்னதான் சாம்பியன் பட்டமே வென்றாலும்.. ரமேஷ்பாபு பிரக்ஞானந்தாவிடம் கார்ல்சன் வீழ்ந்துள்ளார். புள்ளிகள் அடிப்படையில் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா இதில் ரன்னர் இடம் பிடித்துள்ளார். இந்த தொடரின் 7வது சுற்றில்தான் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தாவிடம் கார்ல்சன் வீழ்ந்தார். பிரதான ஆட்டம் டிரா ஆக.. டை பிரேக்கரில் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா வென்று கார்ல்சனை வீழ்த்தினார். ஆனால் டை பிரேக்கரில் வென்றதால் புள்ளிகள் குறைவாக கிடைக்க.. 1 புள்ளி அடிப்படையில் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார்.

    என்ன நடந்தது?

    என்ன நடந்தது?

    இந்த தொடருக்கு முன்பாக நடந்த சம்பவம் ஒன்றுதான் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. இந்த தொடரில் கார்ல்சன் ஆடுகிறார் என்பதே அந்த போட்டி நடக்கும் இடம் முழுக்க பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. இன்று போட்டிக்கு முன் அவரை பார்க்க ஏகப்பட்ட செய்தியாளர்கள் காத்து இருந்தனர். அவரின் ரசிகர்கள் பலர் காத்து இருந்தனர். ஏன் சக செஸ் வீரர்கள் கூட அவருடன் போட்டோ எடுக்க வேண்டும் என்று காத்து இருந்தனர். இதனால் அவர் ஹீரோ போல அங்கே கவனிக்கப்பட்டார்.

    காரிடார்

    காரிடார்

    அவர் நின்று கொண்டு இருந்த அதே காரிடாரில் இன்று பிரக்ஞானந்தாவும் நின்று கொண்டு இருந்தார். தன்னுடைய பயிற்சியாளருடன் பிரக்ஞானந்தா பேசிக்கொண்டு இருந்தார். கதவு ஓரம் இருந்த அவரை அங்கு இருந்த செய்தியாளர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. சக வீரர்கள் கூட சென்று விசாரிக்கவில்லை. செஸ் உலகில் பிரக்ஞானந்தா பிரபலம் என்றாலும்.. அவரை அடையாளம் காணாமல்.. இவர்கள் கார்ல்சனை மட்டும் பேட்டி எடுத்துக்கொண்டு இருந்தனர்.

    பிரஷர்

    பிரஷர்

    பொதுவாக இளம் வீரரக்ளுக்கு இது போன்ற விஷயங்கள் பிரஷரை கொடுக்கும். இவ்வளவு பிரபலமான வீரரை நாம் எதிர்கொள்ள போகிறோமா என்ற பிரஷர் இவர்களுக்கு ஏற்படும். ஆனால் இன்று அந்த பிரஷர் எதுவும் இன்றி இயல்பாக ஆடினார் பிரக்ஞானந்தா. அதோடு எல்லோரும் வெற்றிபெறுவார் என்று நினைத்த கார்ல்சனை வீழ்த்தி அங்கு இருந்த மீடியாக்களை திரும்பி பார்க்க வைத்தார். எந்த மீடியா தன்னை கவனிக்கவில்லையா அதே மீடியா முன் சிறப்பாக ஆடி வெற்றிபெற்றார். தன்னை யாரும் கண்டுகொள்ளாத போதும் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் பிரக்ஞானந்தா ஆடி வென்ற விதம் பலரையும் கவர்ந்தது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+