Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தட்டு வடிவில்" வானத்தில் பறந்த யுஎப்ஓ.. உற்று பார்த்தால் என்ன அது? அமெரிக்க விமானப்படை சொன்ன தகவல்!

அடுத்தடுத்து 3 நாட்களில் 3 முறை மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் ஒரே வாரத்தில் 3வது முறையாக வானத்தில் பறந்த யுஎப்ஓ சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் நடந்த இந்த சம்பவம் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி உலக மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    China-வில் தோன்றிய UFO | America போட்ட தப்புக்கணக்கு | Unidentified Objects in US, Canada, China

    இந்த யுஎப்ஓக்கள் ஏலியன்களின் வாகனங்களாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்று முதல்நாள் அதிகாலை அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணம் மேலே பறந்து கொண்டு இருந்த மர்ம பொருள் ஒன்றை அமெரிக்க விமானப்படை சுட்டு வீழ்த்தியது. அமெரிக்காவின் எப் 22 விமானம் மூலம் இந்த யுஎப்ஓ சுட்டு வீழ்த்தப்பட்டது.

    அலாஸ்கா மீது பறந்து கொண்டு இருந்த போது அதை அமெரிக்கா விமானப்படை சுட்டு வீழ்த்தி உள்ளனர். கிட்டத்தட்ட கார் அளவிற்கு இந்த யுஎப்ஓ இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று கனடா வானில் பறந்த மர்ம பொருள் அதிகாலை சுட்டு வீழ்த்தப்பட்டது. அமெரிக்க விமானப்படை மூலம் மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது.

    குழப்பம்

    குழப்பம்

    சுட்டு வீழ்த்தப்பட்ட மர்ம பொருள் குறித்த விவரம் வெளியாகவில்லை. அடுத்தடுத்து 3 நாட்களில் 3 முறை மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று அதிகாலை மூன்றாவது முறையாக அமெரிக்கா - கனடா எல்லையில் லேக் ஹுரோன் என்று பகுதியில் இன்னொரு யுஎப்ஓ சுட்டு வீழ்த்தப்பட்டது. கனடா - அமெரிக்கா எல்லைக்கு அருகே பறந்து கொண்டு இருந்த போது இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதையடுத்து திடீரென கடந்த இரண்டு நாட்களாக யுஎப்ஓ குறித்த அச்சம் அதிகரித்து உள்ளது.

    யுஎப்ஓ

    யுஎப்ஓ

    எந்த ஒரு விமானம் அல்லது பறக்கும் பொருள் அடையாளம் காண முடியாத நிலையில் இருந்தாலும் அதை யுஎப்ஓ என்றுதான் அழைப்பார்கள். அதாவது வானில் பறக்கும் ஒரு பொருள் என்னெவென்றே தெரியவில்லை என்றால் அது யுஎப்ஓ ஆகும். பொதுவாக ஏலியன்களின் வாகனங்கள் யுஎப்ஓ என்று அழைக்கப்படும். இந்த நிலையில் தற்போது பறக்கும் யுஎப்ஓக்கள் கூட இதே போன்று ஏலியன்களின் விமானங்களாக இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த யுஎப்ஓ என்ன வடிவத்தில் இருக்கிறது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.

    பறக்கும் தட்டு

    பறக்கும் தட்டு

    இது octagonal வடிவம் கொண்டதாக இருந்துள்ளது. அதாவது 8 பக்கங்கள் கொண்டு காணப்பட்டு இருந்தது. இதன் அர்த்தம் கிட்டத்தட்ட இது பறக்கும் தட்டு போல இருந்துள்ளது என்பதாகும். இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால் அந்த தட்டு போன்ற தோற்றம் கொண்ட பொருளில் வெளியே கம்பிகள் போல தொங்கி உள்ளது. கம்பிகள் போல ஏதோ ஒன்று எல்லா பக்கங்களிலும் தொங்கி உள்ளது. 20 ஆயிரம் அடி உயரத்தில் இந்த தட்டு பறந்து உள்ளது. இது ராணுவ பாதுகாப்பிற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றாலும் பயணிகள் விமானங்கள் மீது இது மோதும் வாய்ப்பு உள்ளது.

    வடிவம்

    வடிவம்

    அந்த யுஎப்ஓ பார்க்க அப்படியே கார் அளவில் இருந்துள்ளது.இதன் வண்ணம் எப்படி இருந்தது என்று தெரியவில்லை. அதோடு இதில் குறியீடுகள் ஏதாவது இருந்ததா? ஏதாவது அடையாளங்கள் இருந்ததா என்பது குறித்த விவரங்கள் எல்லாம் வெளியாகவில்லை. இதில் எஞ்சின் எதுவும் இல்லை. அப்படி இருக்க இந்த யுஎப்ஓ எப்படி பறக்கிறது? என்று கேள்வி எழுந்துள்ளது. யுஎப்ஓவில் பைலட் இல்லை. அப்படி என்றால் இதை யார் இயக்குவது? என்று கேள்வி எழுந்துள்ளது. எந்த தொழில்நுட்பத்தில் இது இயங்குகிறது? என்று கேள்வி எழுந்துள்ளது. எந்த நாட்டிற்கு சொந்தமானது இது? ஏலியன்களின் யுஎப்ஓ ஆ இது? யுஎப்ஓ வேறு நாட்டிற்கு சொந்தமானது என்றால் எதற்காக இது பறக்க வைக்கப்படுகிறது? என்று கேள்விகள் எழுந்துள்ளன.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    இதையடுத்து தற்போது அலாஸ்கா, லேக் மிச்சிகன் பகுதிகளில் வான் பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. வானத்தில் திடீரென அடுத்தடுத்து யுஎப்ஓ கண்டுபிடிக்கப்படுவது மக்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று அமெரிக்காவில் சுட்டு வீழ்த்தப்பட்ட யுஎப்ஓவில் திசை மாற்றுவதற்கான பொருட்கள் எதுவும் அதில் இல்லை. அது வெறுமனே வானில் பறந்து இருக்கிறது. பயணிகள் விமானம் பறக்கும் 30 ஆயிரம் அடி உயரத்திற்கும் மேலாக 40 ஆயிரம் அடி உயரத்தில் அந்த விமானம் பறந்து உள்ளது. இடை இடையே கொஞ்சம் உயரம் குறைவாகவும் பறந்து உள்ளது. இதனால் பயணிகள் விமானத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அதை சுட்டு வீழ்த்தி உள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+