எப்படி பறக்குதுன்னே தெரியல! யுஎப்ஓவை அருகில் பார்த்து.. அதிர்ச்சியான அமெரிக்க பைலட்கள்.. ஷாக் தகவல்!
நியூயார்க்: அமெரிக்கா மற்றும் கனடா வானில் சுட்டு வீழ்த்தப்பட்ட யுஎப்ஓ விமானங்கள் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்த யுஎப்ஓக்களை அருகில் பார்த்த அமெரிக்க விமானிகள் குழப்பமான தகவல்களை வெளியிட்டு உள்ளனர்.
எந்த ஒரு விமானம் அல்லது பறக்கும் பொருள் அடையாளம் காண முடியாத நிலையில் இருந்தாலும் அதை யுஎப்ஓ என்றுதான் அழைப்பார்கள். அதாவது வானில் பறக்கும் ஒரு பொருள் என்னெவென்றே தெரியவில்லை என்றால் அது யுஎப்ஓ ஆகும்.
நேற்று அதிகாலை அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணம் மேலே பறந்து கொண்டு இருந்த மர்ம பொருள் ஒன்றை அமெரிக்க விமானப்படை சுட்டு வீழ்த்தியது. அமெரிக்காவின் எப் 22 விமானம் மூலம் இந்த யுஎப்ஓ சுட்டு வீழ்த்தப்பட்டது.

தாக்குதல்
அலாஸ்கா மீது பறந்து கொண்டு இருந்த போது அதை அமெரிக்கா விமானப்படை சுட்டு வீழ்த்தி உள்ளனர். கிட்டத்தட்ட கார் அளவிற்கு இந்த யுஎப்ஓ இருந்துள்ளது. இந்த பறக்கும் பொருள் யாருக்கும் சொந்தமானது என்று தெரியவில்லை. மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இந்த பொருள் இருந்தது. இந்த நிலையில் கனடா வானில் பறந்த மர்ம பொருள் இன்று அதிகாலை சுட்டு வீழ்த்தப்பட்டது. அமெரிக்க விமானப்படை மூலம் மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது. நேற்று அமெரிக்க வானில் பறந்த மர்ம பொருள் சுடப்பட்ட நிலையில் இன்று கனடாவிலும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. கனடா மற்றும் அமெரிக்க ராணுவம் கூட்டாக இணைந்து இந்த ஆபரேஷனை மேற்கொண்டு உள்ளது.

என்ன நடந்தது?
சுட்டு வீழ்த்தப்பட்ட மர்ம பொருள் குறித்த விவரம் வெளியாகவில்லை. அடுத்தடுத்து இரண்டு நாட்களில் 2 முறை மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கனடா மற்றும் அமெரிக்க ராணுவம் கூட்டாக இணைந்து இந்த ஆபரேஷனை மேற்கொண்டு உள்ளது. கனடா - அமெரிக்கா ராணுவம் இணைந்து இந்த ஆபரேஷனை மேற்கொண்டு உள்ளன. இந்த மர்ம பொருள் குறித்த விவரம் வெளியாகவில்லை. கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவின் பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் எப் 22 விமானம் மூலம் அந்த பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த தாக்குதல் காரணமாக திடீரென ஏலியன் குறித்த விவாதங்கள், சர்ச்சைகள் எழுந்துள்ளன. சீனாவின் பலூன் அமெரிக்காவில் சுட்டு வீழ்த்தப்பட்ட 2 நாட்களில் இந்த சம்பவம் நடந்து உள்ளது.

என்னென்ன தெரியும்
இந்த யுஎப்ஓ குறித்து நமக்கு தெரிந்த விவரங்கள் என்னென்ன என்று பார்க்கலாம். இந்த யுஎப்ஓ 40000 அடி உயரத்தில் பறந்து உள்ளது. அதாவது பொதுவாக பயணிகள் விமானம் பறக்கும் அதே உயரத்தில் பறந்து உள்ளது. இந்த யுஎப்ஓ பெரிய கார் ஒன்றின் அளவில் இருந்து உள்ளது. கார் அளவில் இருந்தாலும் நீள் வட்டமாக இருந்து உள்ளது. இதில் வானிலை சோதனை அல்லது உளவு ஆய்வுகளை செய்யும் கருவிகள் எதுவும் இல்லை. அதாவது எந்த விதமான சென்சார்கள், குண்டுகள், உளவு கருவிகள் இருந்ததற்கான அடையாளமும் இல்லை.

பைலட் இல்லை
இது சாதாரண வேகத்தில்தான் பயணம் செய்துள்ளது. இதனால் எளிதாக இதை துரத்தி பிடித்து சுட்டு வீழ்த்த முடிந்து உள்ளது. இதில் பைலட் இல்லை. பைலட் இல்லாமல் பறந்து உள்ளது. முழுக்க ஆட்டோ பைலட் முறையில் பறந்து உள்ளது. அதேபோல் இதில் கட்டுப்பாட்டு சாதனங்கள் இல்லை. அதாவது எந்த ஒரு பறக்கும் பொருளிலும் பிளாப், ரட்டர் போன்ற பொருட்கள் இருக்கும். அதாவது விமானம் மேலே கீழே செல்வதை பிளாப் மூலம் கட்டுப்படுத்துவார்கள். ரட்டர் மூலம் அது இடது வலது பக்கம் திரும்புவதை உறுதி செய்வார்கள். அது போன்ற பாகங்கள் இந்த பறக்கும் பொருளில் இல்லை.

குழப்பம்
இப்போது இந்த யுஎப்ஓ தொடர்பாக அமெரிக்கா விமானப்படை விமானிகள் கலவையான தகவல்களை கொடுத்துள்ளனர். இந்த யுஎப்ஓவை வானில் கண்டுபிடித்ததும் அதை எப்22 விமானம் மூலம் சுட்டு வீழ்த்துவதற்கு முன்பாக எப் 35 விமானம் மூலம் அது என்ன என்று பார்க்க அமெரிக்க விமானப்படை சென்றுள்ளது. அந்த பறக்கும் பொருளை பார்க்க சென்ற எப் 35 விமான விமானிகள் கலவையான செய்திகளை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக சிஎன்என் நிறுவனம் வெளியிட்ட செய்தியில், பைலட் இல்லாமல் பறந்தது எப்படி என்ற குழப்பம் விமானிகளுக்கு உள்ளது. பைலட் இல்லாமல், எந்த விதமான புகை அல்லது எஞ்சின் எதுவும் இல்லாமல் அமைதியாக இது வானில் பறந்தது. சத்தமே இல்லாமல் எப்படி ஒரு விமானம் பறக்க முடியும்.

சிக்னல்
மேலும் சில விமானிகள் இதில் இருந்து ஒரு சிக்னல் வந்தது. அந்த சிக்னல்களால் எங்கள் விமானத்தின் சிக்னல்களுக்கு இடையூறு ஏற்பட்டது என்று கூறி உள்ளனர். ஆனால் சில அமெரிக்க விமானிகள் எங்களுக்கு அப்படி நடக்கவில்லை என்று தெரிவித்து உள்ளனர். அந்த பறக்கும் பொருளை உற்று பார்த்த போது அது என்ன என்று உறுதியாக சொல்ல முடியவில்லை. அந்த பறக்கும் பொருளை மிக அருகில் பார்த்த விமானிகளால் கூட அதை கண்டுபிடிக்க முடியவில்லை. முக்கியமாக அது எப்படி வானில் பறக்கிறது என்றே தெரியவில்லை என்று விமானிகள் குறிப்பிட்டதாக சிஎன்என் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications