Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிரம்ப்.. பக்கத்திலேயே மனைவி.. பின்னாடி யார் அது? 7 அடிக்கு பிரம்மாண்டமாக நின்ற உருவம்.. அவரா?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: நேற்று அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்ற நிலையில்.. அவர் ப்ளோரிடாவில் உள்ள Palm Beach County Convention Centre அரங்கில் நேற்று அதிபர் தேர்தல் முடிவுகளை கண்காணித்தார். இந்த நிகழ்வில் அவரின் மனைவியும் உடன் இருந்தார்.

மெலினியா டிரம்ப் நேற்று இந்த நிகழ்வு முழுக்க டொனால்ட் டிரம்ப் உடன் இருந்தார். அதோடு இந்த நிகழ்வில் டிரம்ப் உடன் எலான் மஸ்க் நீண்ட நேரம் செலவிட்டார். நாள் முழுக்கவே எலான் மஸ்க் டொனால்ட் டிரம்ப் உடன் இருந்தார். அதேபோல் பல முதலீட்டாளர்கள் இந்த நிகழ்விற்கு வந்தனர். அவருக்கு நிதி உதவி கொடுத்த பலர் நிகழ்விற்கு வந்திருந்தனர். இந்த நிகழ்வில்.. மெலினியா , எலான் மஸ்க் தவிர இன்னொரு நபரும் அதிக அளவில் கவனிக்கப்பட்டார்.

us presidential election 2024 kamala harris donald trump

டிரம்பிற்கு பின் இளைஞர் ஒருவர் பெரிய அளவில் கவனம் ஈர்த்தார். உயரமாக ஒருவர் இங்கும் அங்கும் டிரம்புடன் நடந்தபடி இருந்தார். 18 வயதே ஆன அந்த இளைஞர் டிரம்பின் இளம் மகன் பேர்ரன் டிரம்ப். நேற்று விழாவிற்கு வந்த விருந்தினர்களை விட.. பேர்ரன் டிரம்ப்தான் அதிகம் கவனிக்கப்பட்டார்.

காரணம் இவரின் உயரம்.. இவர் அந்த நிகழ்வில் இருந்ததிலேயே மிக உயரமாக இருந்தார். அங்கே இருந்த பாதுகாவலர்களை விட மிக அதிக உயரத்தில் பேர்ரன் டிரம்ப் இங்கும் அங்கும் நடந்தது பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. இவரின் உயரம் 6'9". அல்லது 7 அடி என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக நேற்று நிக்வில் இவர் அதிகம் கவனிக்கப்பட்டார்.

டிரம்ப் மாபெரும் வெற்றி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டு அரசியலில் மிக முக்கியமான வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறார். அரிசோனா , நவேடா ஆகிய இரண்டு மாகாணங்களில் மட்டும் இன்னும் தேர்தல் முடிவுகள் வெளியாகவில்லை.

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் அதிபராகி உள்ளார். டொனால்ட் டிரம்ப் மெஜாரிட்டிக்கு தேவையான 270க்கும் அதிகமான எலக்ட்ரல் வாக்குகளை பெற்று வெற்றி பெறும் நிலையில் உள்ளார். தற்போது வரை 295 எலக்ட்ரல் வாக்குகளை வென்றுள்ளார். இதன் மூலம் டிரம்ப் வெற்றி உறுதியாகி உள்ளது. கமலா ஹாரிஸ் 224 வாக்குகளை வென்றுள்ளார்.

மொத்தமாக 538 எலக்ட்ரல் வாக்குகளில் 270 யாருக்கு கிடைக்கிறதோ அவர்தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார். அவரின் வருகை உலக அரசியலில் மிகப்பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரிசோனா , நவேடா ஆகிய இரண்டு மாகாணங்களில் முடிவுகள் வெளியாகும் பட்சத்தில் டிரம்ப் 300 எலக்ட்ரல் வாக்குகள் தாண்டும் வாய்ப்புகள் உள்ளன. தற்போது இந்த இரண்டு மாகாணங்களிலும் டிரம்ப்தான் முன்னிலை வகிக்கிறார்.

ஸ்விங் ஸ்டேட்ஸ்: அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவேடா, வட கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகியவை ஸ்விங் மாகாணங்கள் ஆகும். 7ல் மொத்தமாக 5 மாகாணங்களில் வென்றுள்ளார். 2ல் முன்னிலை வகிக்கிறார். மொத்தமாக இதன் மூலம் ஸ்விங் மாகாணங்களை டிரம்ப் கைப்பற்றி உள்ளார்.

தற்போது அரிசோனாவில் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார், நவேடா டிரம்ப் முன்னிலை வகிக்கிறார். இங்கே மட்டும் இன்னும் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+