"ரட்சகன்".. பூரா ஆபாசம்.. யாரிந்த "காம பிண்டம்".. சுற்றிலும் 50 பெண்கள்.. ஆன்மீகத்தில் கலந்த வக்கிரம்
20 மனைவிகளை திருமணம், பாலியல் வக்கிரங்களை அரங்கேற்றியுள்ளார் சாமுவேல் என்பவர்
நியூயார்க்: ஒரு வித்தியாசமான "தீர்க்கதரிசி" தோன்றி உள்ளார்.. அவரைதான் மாமியார் வீட்டில் வைத்து ஸ்பெஷலாக போலீசார் கவனித்து கொண்டிருக்கிறார்கள்.. யார் அவர்?
அடிப்படைவாதத்தின் பெயரால், அயோக்கியத்தனங்களை அரங்கேற்றும் பேர்வழிகள் எல்லா மதங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.
கடவுளின் மீது பிரியமாக இருப்பவர்களை, கடவுளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்திருப்பவர்களை குறி வைத்தே, இத்தகைய மதப்பேர்வழிகள் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தீர்க்கதரிசி
அதில் ஒருவர்தான் சாமுவேல் ரேப்பிலி பேட்மேன்.. 46 வயதாகிறது.. இவர் ஒரு பாதிரியார்.. தன்னை ஒரு இறைதூதர் அதாவது உலக மக்களை ரட்சிக்க வந்த தீர்க்கதரிசி என்று பிரபலப்படுத்தி கொண்டார். வாழ்க்கை கடலில் கண்ணீரில் தத்தளிப்பவர்களுக்கும், அடுத்ததாக என்ன செய்வது என்று விழிபிதுங்கி நிற்போருக்கும், இந்த டுபாக்கூர் தீர்க்கதரிசியின் பேச்சுக்கள், நம்பகத்தனத்தை தந்தன.. இதனால் சாமுவேலுக்கு பக்தர்கள் அதிகமாக சேர்ந்தனர்..

சைலண்ட் மூவ்
ஆனால், சாமுவேல், ஏகப்பட்ட கிரிமினல் நடவடிக்கையில் இறங்கிவிட்டார்.. கடந்த செப்டம்பரில், அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ பிடியில் ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக சாமுவேல் பிடிபட்டார்... இதற்கு பிறகு சாமுவேல் குறித்து எந்த செய்திகளும் வெளிவரவில்லை.. அவர் என்ன ஆனார்? என்பது தெரியாமல், புலனாய்வு அதிகாரிகள் அடுத்தக்கட்ட விசாரணையை சைலண்ட்டாக கையில் எடுத்தனர்.. சாமுவேலுக்கு தெரியாமல், தடயங்களை திரட்ட தொடங்கினர்.. அந்த வகையில் அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான தகவல்கள் அதிகாரிகளுக்கு கிடைத்தன.

பிஞ்சுகள்
சாமுவேல் ஒரு வித்தியாசமான கிறிஸ்துவராம்.. தன்னுடைய அனைத்து விதமான மதநம்பிக்கைக்கும் சாமுவேல், காமத்தை மட்டுமே பிரதானமாக நம்பி வந்தார்.. இவருக்கு மொத்தம் 20 மனைவிகளாம்.. இந்த 20 பேரில், பெரும்பாலும் சிறுமிகள் ஆவர்.. அவர்களில் 9 வயது சிறுமியும் அடக்கம் என்பதுதான் குரூரத்தின் உச்சம்.. இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், கொரோனா நேரத்தில், தன்னுடைய சொந்த மகளையே சாமுவேல் கல்யாணம் செய்ய முயற்சித்துள்ளார். இது சம்பந்தமான புகாரும் கிளம்பி உள்ளது. இதைதவிர, ஏகப்பட்ட பெண்களிடம் சேட்டை செய்துள்ளார்..

பிரெயின்வாஷ்
சிறுமிகள் ஆட்கடத்தலுக்கு ஆளானதும், குரூப் செக்ஸ்களில் அவர்களை ஈடுபடுத்தியதும் தெரியவந்துள்ளது.. இவை அனைத்துக்கும் அதிகாரிகள் ஆதாரங்களை சேகரித்துள்ளனர். ஆபாசத்திலேயே எந்நேரமும் மூழ்கி திளைத்த, இந்த சாமுவேலுக்கு 20 மனைவிகள் தவிர, 50க்கும் மேற்பட்ட சிஷ்யைகள் இருக்கிறார்களாம்.. அவர்களையும் எஃப்பிஐ சுற்றி வளைத்து பிடித்துள்ளது. இவர்கள் அனைவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.. எல்லாருமே சாமுவேலால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்களாம்.. இதை வாக்குமூலமாகவே அளித்து வருகின்றனர்... சிறார் பாலியல், போதைக்கடத்தல், தீவிரவாத குழுக்கள் ஆகியவற்றுக்குடனும் சாமுவேலுக்கு தொடர்பு இருக்கும் என்பதால் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

புல்லுருவிகள்
இதில் இன்னொரு பயங்கரமும் நடந்துள்ளது.. தம்முடைய அமைப்பில் இணைந்திருக்கும் 3 இளைஞர்களுக்கு, தன்னுடைய சொந்த மகள்களையே விருந்தாக்கியதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது... இன்னும் சாமுவேலிடம் விசாரணை நடந்து கொண்டுதான் இருக்கிறது... எனினும், அன்பையும், ஒழுக்கத்தையும் போதிக்கவே, 'மதங்கள்' தோன்றின என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் நிலையில், அப்படிப்பட்ட மதங்களிலேயே இதுபோன்ற காமப்புல்லுருவிகள் தொடர்ந்து ஊடுருவி வருவது, மனித குலத்துக்கே ஆபத்தாகி கொண்டிருக்கின்றன...!!
-
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications