அடுத்த 24 மணி நேரம் முக்கியம்.. அமெரிக்கா எடுக்கும் முடிவில்தான் உலக அரசியலே இருக்கு.. ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் அடுத்த 24 மணி நேரத்தில் எடுக்க போகும் முடிவில்தான் உலக அரசியலே அடங்கி உள்ளது. இதற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று இங்கே பார்க்கலாம்.

1. இஸ்ரேல் ஈரான் போருக்கு இடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜி7 மாநாட்டை முடிப்பதற்கு முன்னதாகவே புறப்பட்டுச் சென்றார். மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலையே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது. அவர் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலை வெள்ளை மாளிகையின் situation அறையில் தயாராக இருக்கும்படி கூறி உள்ளாராம். இதனால் ஈரான் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்துகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

Israel Iran

2. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து மக்கள் எல்லோரும் வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார். இதனால் ஈரான் மீது அமெரிக்கா குண்டு போட போகிறதோ.. முக்கியமாக அணு குண்டு போட போகிறதோ என்ற கேள்விகள் எழுந்துள்ளன. டிரம்ப் உடனடியாக டெஹ்ரானை காலி செய்யுமாறு ஈரான் நாட்டு மக்களை வலியுறுத்தினார். ஈரான் அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்க வேண்டும். ஈரான் தவறு செய்துவிட்டது. ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாமல் ஈரான் அலைக்கழித்தது தவறானது.

3. ஈரான் கைக்கு அணு குண்டு செல்ல கூடாது. அவர்கள் அணு ஆயுதத்தை வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மீண்டும் சொல்கிறேன்.. ஈரான் தலைநகரை காலி செய்யுங்கள். உடனே ஈரான் தலைநகரை விட்டு வெளியேறுங்கள் என்றும் அவர் மீண்டும் தெரிவித்தார்.

4. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்கா இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று இஸ்ரேல் தொடர்ந்து மன்றாடி வருகிறது. ஈரான் அமெரிக்காவிற்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது.. என்று அவர் எச்சரித்துள்ளார். நெதன்யாகு அளித்த ஒரு பேட்டியில், ஈரானின் அணு ஆயுத திட்டத்தை ஒழிப்பது இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு மட்டுமல்ல, உலகளாவிய பாதுகாப்பிற்கும் முக்கியமானது.

5. இன்று டெல் அவிவ் என்றால், நாளை நியூயார்க். 'அமெரிக்கா முதலில்' என்று அமெரிக்கர்கள் கருதுகிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் இப்படியே விட்டால் அடுத்து அமெரிக்காவும் இருக்காது. இஸ்ரேலை தாக்கும் ஈரான் அடுத்து அமெரிக்காவையும் தாக்கும். அவர்கள் 'அமெரிக்காவுக்கு மரணம்' என்று கோஷமிடுகிறார்கள். கண்டிப்பாக அமெரிக்காவையும் தாக்குவார்கள். இதை அமெரிக்கா தடுக்க வேண்டும் என்று கெஞ்சி உள்ளார்.

அடுத்த 24 மணி நேரம் முக்கியம்

6. இதை எல்லாம் ஏற்றுக்கொண்டு டிரம்ப் ஈரானை தாக்க முடிவு செய்தால் அது உலகப்போராக மாறும். ஈரான் - இஸ்ரேல் போர் உச்சம் அடைந்து உள்ளது. இஸ்ரேலும் ஈரானும் செவ்வாய்க்கிழமை ஐந்தாவது நாளாகத் தொடர்ந்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டன. இந்த போரில் அமெரிக்கா தலையிட்டு வருவதால் இது உலகப்போராக வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

7. இதற்கு பதிலடி ரஷ்யா கண்டிப்பாக போரில் குதிக்கும். ஈரான், ரஷ்யாவிற்கு துணையாக பல இஸ்லாமிய நாடுகள் களமிறங்கும். ஏன் சீனாவும் கூட களமிறங்கி தாக்குதல்களை நடத்தும் வாய்ப்புகள் உள்ளன. டிரம்ப் செய்து வரும் இந்த தவறு.. 3ம் உலகப்போருக்கு வித்திடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இஸ்ரேலை பொதுவாக ஆதரிக்கும் நாடுகள், ஈரானை ஆதரிக்கும் நாடுகள் மற்றும் நடுநிலையான நாடுகள் பற்றி இங்கு காணலாம். இந்த நாடுகள் போரில் குதிக்கும் பட்சத்தில் அது 3ம் உலகப்போராக கண்டிப்பாக மாறும்.

8. அதுவே அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவு தராத பட்சத்தில் இஸ்ரேல் தனித்து விடப்படும். அது ஈரானின் வெற்றிக்கும் காரணம் ஆகலாம்.

9. முக்கியமாக ஈரான் இப்போது வலிமையாக திருப்பி அடிக்க தொடங்கி உள்ளதால் இஸ்ரேலின் படுதோல்விக்கு அது காரணமாக அமைந்துவிடும். மத்திய கிழக்கின் அரசியல் மாறும்.

10 . அமெரிக்கா இந்த போரில் அடுத்த 24 மணி நேரத்தில் என்ன முடிவு எடுக்க போகிறதோ அதை வைத்தே இனி நடக்க போகும் நிகழ்வுகள் தீர்மானம் ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+