இனி டிரம்ப்பை நம்ப முடியாது! முக்கிய நேரத்தில் முதுகில் குத்தும் அமெரிக்கா! டெல்லிக்கு வந்த சந்தேகம்
சென்னை: சர்வதேச அளவில் மேற்கு உலகில் இந்தியாவின் உற்ற நண்பன் என்று கருதப்பட்ட நாடு அமெரிக்கா. இந்தியா பாகிஸ்தான் போர் வந்தால் சீனா பாகிஸ்தான் பக்கம் நிற்கும். அமெரிக்கா இந்தியா பக்கம் நிற்கும் என்றே கருதப்பட்டது. ஆனால் அப்படிப்பட்ட அமெரிக்கா முக்கியமான நேரத்தில் இந்தியாவின் முதுகில் குத்திவிட்டது.
இதனால் அமெரிக்காவை உண்மையான நண்பனாக கருதலாமா? டிரம்ப்பை நம்பலாமா என்ற சந்தேகம் டெல்லியில் உள்ள டாப் லெவல் வெளியுறவு அதிகாரிகளுக்கு வந்துள்ளதாம். அதோடு வெள்ளை மாளிகையில் இந்தியாவிற்கு சாதகமான பரப்பை அதிகரிக்க வேண்டும் என்ற திட்டமும் டெல்லி அதிகாரிகளுக்கு வந்துள்ளதாம். அதாவது டிரம்ப்பை தேவையான நேரங்களில் இந்தியாவிற்கு சாதகமாக மாற்றும் வகையில் அங்கே அதிகாரிகளை களமிறக்க டெல்லியில் உள்ள டாப் லெவல் வெளியுறவு அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளார்களாம்.
டிரம்ப் நம்பிக்கையற்றவர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் அரசியலில், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தொடர்ந்து அத்துமீறி வருகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் கூக்கிற்கு எச்சரிக்கை விடுத்தார். இந்தியாவில் தொழிற்சாலைகளை தொடங்க வேண்டாம் என்று கூறி உள்ளார்.

இது தொடர்பாக டிரம்ப் விடுத்த எச்சரிக்கையில், நேற்று டிம் கூக் உடன் எனக்கு ஒரு சின்ன பிரச்சனை ஏற்பட்டது. நான் அவரிடம் சொன்னேன், நீங்கள் என் ஃப்ரெண்ட், நான் உங்களை ரொம்ப நன்றாக நடத்துகிறேன். ஆனால் நீங்கள் பல பில்லியனை இந்தியாவில் முதலீடு செய்கிறீர்கள். இப்போ இந்தியா முழுக்க கட்டிடம் கட்டுவதாக கேள்விப்பட்டேன். நீங்கள் இந்தியாவில் கட்டிடம் கட்டுவதை நான் விரும்பவில்லை.
இந்தியாவை கவனித்துக் கொள்ள விரும்பினால், நீங்க இந்தியாவில் கட்டிடம் கட்டலாம். ஆனால் நீங்கள் அமெரிக்க நிறுவனம். இந்தியாவில் கட்டிடம் கட்ட கூடாது. ஏனென்றால் இந்தியா உலகத்துலயே அதிக வரி விதிக்கிற நாடுகளில் ஒன்று. அதனால இந்தியாவில் உங்கள் பொருட்களை விற்பது ரொம்ப கஷ்டம். நீங்க பல வருஷமாக சீனாவில் கட்டிய எல்லா பிளாண்ட்களையும் நாங்க பொறுத்துக்கிறோம். ஆனால் இப்போது நீங்க இந்தியாவில் கட்டுவதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியா தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளட்டும்.. நீங்கள் அமெரிக்காவை பாருங்கள் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இந்தியா தனது இறக்குமதி வரியை குறைக்கவில்லை என்றால்.. 100% குறைக்கவில்லை என்றால் இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் கூறி உள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையில், நாங்கள் விரைவில் பரஸ்பர கட்டணங்களை அறிவிப்போம். ஏனென்றால் அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள், நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறோம்.
அவ்வளவுதான்.. விஷயம் மிகவும் எளிமையானது. இந்தியா அல்லது சீனா அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும் சரி.. நாடு எதுவாக இருந்தாலும், அவர்கள் என்ன கட்டணம் வசூலித்தாலும், நாங்கள் நியாயமாக இருக்க விரும்புகிறோம்.. நாங்களும் அதே கட்டணம் வசூலிப்போம்.. அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள், நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறோம் அவ்வளவுதான்
என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.
இந்திய அமெரிக்கா போர் பற்றி சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில், இந்தியா - பாக். போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வர்த்தகத்தை பெருமளவில் பயன்படுத்தினேன். என் தலையீட்டால்தான் தாக்குதல் நிறுத்தப்பட்டது. ஒப்பந்தம் செய்வோம், வர்த்தகம் செய்வோம் என அழைத்தேன் உடனே தாக்குதலை நிறுத்திவிட்டார்கள், இரண்டு நாடுகளுமே நிறைய அணு ஆயுதங்களை கொண்டுள்ளன. ஆனால் அணு ஆயுதப் போரை நிறுத்தியது நான் தான் என்பதை உங்களுக்குச் சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். அவர்கள் நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொள்ளும் வலிமை, ஞானம், உறுதி தங்களுக்கு இருக்கிறது என்ற நிலைபாட்டில் இருந்தார்கள். ஆனால் நாங்கள் நிறைய உதவினோம், என்று கூறினார்.
சண்டையை நிறுத்தினால் உங்களுடன் நிறைய வர்த்தகம் செய்யப் போகிறோம் என்று இந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் சொன்னேன். போரை நிறுத்தாவிட்டால் நாங்கள் எந்த வர்த்தகத்தையும் செய்யப் போவதில்லை என்று சொன்னேன். உடனடியாக நாங்கள் போரை நிறுத்துவோம் என்று சொன்னார்கள்., என்று கூறி உள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சு இந்தியா - பாக். தாக்குதல் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையில் வர்த்தகம் பற்றி பேசப்படவில்லை என இந்திய வெளியுறவுத் துறை விளக்கமளித்த பிறகும், வர்த்தகத்தை முன்னிறுத்தி போரை நிறுத்தியதாக சவுதி முதலீட்டாளர் மாநாட்டில் மீண்டும் அதிபர் ட்ரம்ப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications