வெனிசுலா, ஈரான் மீது கை வைத்த அமெரிக்கா.. வட கொரியாவை தொட மறுப்பது ஏன்.. ஆச்சரிய பின்னணி
நியூயார்க்: கேஸ் தட்டுப்பாடு பிரச்சனைக்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை திட்டாதவர்களே இல்லை.. உலக நாட்டமை போல் எல்லா நாட்டு உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாக மக்களில் பலர் நினைக்கிறார்கள்.. அவர்கள் நினைப்பதில் காரணம் இல்லாமல் இல்லை.. ஏனெனில் முன்பு வியட்நாம், கியூபா, ஈராக், ஆப்கானிஸ்தான் என வரிசையாக கை வைத்துள்ளது. அதேபோல் அண்மையில் தான் வெனிசுலாவில் அதிபரை தூக்கியது.. ஈரான் மீது கை வைத்த அமெரிக்கா, அதன் உச்சபட்ச தலைவரை போட்டு தள்ளியது.. ஏன் வட கொரியா மீது மட்டும் கைவைக்கவில்லை.. அங்குள்ள அதிபரை மாற்ற விரும்பவில்லை.. அதற்கு காரணம் என்ன தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்.
அமெரிக்கா எப்போதுமே தனது நாட்டின் 'தேசிய நலன்' மற்றும் 'ஆபத்து' ஆகிய இரண்டையும் பொறுத்தே உலக நாடுகளை கையாளும்.. அதாவது தங்கள் நாட்டின் தனிப்பட்ட ஆதாயம் இல்லாமல் எதிலும் இருக்காது. நட்பு நாடுளுக்கு உதவி என்றால் ஓடி உதவி செய்யுமா என்றால், அதுவும் அவ்வளவு எளிதாக நடக்காது. தனக்கு லாபம் இல்லாத எதிலும் அமெரிக்கா எளிதாக இறங்காது.. விஷயத்திற்கு வருவோம். வெனிசுலா, ஈரான் ஆகிய நாடுகளை தாக்கியதற்கும், வடகொரியாவிடம் அமெரிக்கா அடக்கி வாசிப்பதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன.

டாலரில் எண்ணெய் விற்க வேண்டும்
அமெரிக்காவை பொறுத்தவரை கருப்பு தங்கம் என்று போற்றப்படும் கச்சா எண்ணெய்யை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதனை வைத்து தான் உலக நாடுகளை தன் வழிக்கு கொண்டு வருகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் வளம் என்பது அந்த நாடுகளுக்கு சொந்தம் என்றாலும், அதன் கட்டுப்பாடு கிட்டத்தட்ட அமெரிக்காவிடம் தான் உள்ளது.
ஏனெனில் அமெரிக்க டாலரில் தான் எண்ணெய்யை விற்க வேண்டும் என்று அமெரிக்கா உலக நாடுகளிடம் கட்டாயம் ஆக்கி உள்ளது. அனை மீறினால் பொருளாதார தடை போடும். ரொம்ப பேசினால், போரே தொடுக்கும்.. இரண்டு நாடுகள் சண்டை போட்டால், சமாதானம் செய்ய போகும். ஆனால் அதில் தனக்கு ஆதாயம் உள்ளதா என்பதை பார்க்கும். ஆதாயம் இல்லாமல் எதிலும் இறங்காது.. அது தான் உண்மை..
அமெரிக்காவின் திட்டம்
எண்ணெய் வளம் உள்ள நாடுகள் எல்லாம் அமெரிக்காவின் பேச்சை கேட்கின்றன. அதனை மறுக்கும் நாடுகளை தான் அமெரிக்கா தாக்கி வருகிறது. அத்துடன் அவர்களுக்கு பொருளாதார தடை விதிக்கிறது. இதில் ரஷ்யா, சீனாவை மட்டும் அமெரிக்கா ஒன்றும் செய்வது இல்லை..பொருளாதார தடைகளை தான் விதிக்கும். அதனை தாண்டாது.
ஏனெனில் அந்த நாடுகள் அணு ஆயத நாடுகள். வெனிசுலா, ஈரான் அமெரிக்கா சொல்படி நடந்திருந்தால் பிரச்சனை வந்திருக்காது. அவர்கள் கேட்கவில்லை. அதுதான் சண்டைக்கு முக்கிய காரணம். ஈரான் இஸ்ரேல் இடையே நீண்ட காலமாக பிரச்சனை உள்ளது. அதனை அமெரிக்கா பயன்படுத்தி ஈரானை தனது வழிக்கு கொண்டுவர விரும்புகிறது. ஆனால் அது அவ்வளவு எளிது கிடையாது.. வடகொரியாவிடம் ஏன் அமெரிக்கா எதுவும் செய்வது இல்லை..சற்று விரிவாக பார்ப்போம்.
அணு ஆயுத பலம்
வெனிசுலா அல்லது ஈரானிடம் (கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணைகள் இல்லை. ஆனால், வடகொரியாவிடம் அமெரிக்காவின் முக்கிய நகரங்களை நேரடியாகத் தாக்கும் வல்லமை கொண்ட ICBM ஏவுகணைகள் உள்ளன. ஒருவேளை வடகொரியா மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுத்தால், அது ஒரு முழு அளவிலான அணு ஆயுதப் போராக மாறி, அமெரிக்காவிற்கு ஈடுகட்ட முடியாத இழப்பை ஏற்படுத்தும் என்பதால் அமெரிக்கா அமைதியாக இருக்கிறது
தென்கொரியா மற்றும் ஜப்பானின் பாதுகாப்பு
அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளான தென்கொரியாவும், ஜப்பானும் வடகொரியாவின் மிக அருகில் உள்ளன. போர் என்று வந்தால், அமெரிக்காவைத் தாக்குவதற்கு முன்பே வடகொரியா இந்த இரு நாடுகளையும் சிதைத்துவிடும். தன் நட்பு நாடுகளைப் பலிகொடுத்து ஒரு போரைத் தொடங்க அமெரிக்கா விரும்புவதில்லை.
இயற்கை வளங்கள்
இயற்கை வளங்கள் தான் மிக முக்கியமான காரணம். அமெரிக்க களம் இறங்கிய வெனிசுலா மற்றும் ஈரான் ஆகியவை உலகில் அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடுகள். அங்கு ஆட்சியை மாற்றினால் அல்லது தங்கள் ஆதரவு அரசை அமைத்தால், உலக எரிசக்தி சந்தையை அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடியும். ஆனால் வடகொரியா நாட்டில் சுரண்டக்கூடிய அளவிற்குப் பெரிய எண்ணெய் வளமோ அல்லது பொருளாதார ரீதியான லாபமோ இல்லை. "எதுவும் இல்லாத ஊரில் எதற்குப் போர்?" என்ற கணக்கு தான் அமெரிக்கா போர் புரியாமல் இருக்க காரணம்.
சீனாவின் ஆதரவு
அதுமட்டுமல்ல வடகொரியாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் உள்ளது. வடகொரியாவை அமெரிக்கா தாக்கினால், அது தனது எல்லைக்கு ஆபத்து என்று சீனா கருதும்.வடகொரியா என்பது சீனாவிற்கும், அமெரிக்க ஆதரவு பெற்ற தென்கொரியாவிற்கும் இடையே ஒரு 'Buffer Zone' போலச் செயல்படுகிறது. சீனா இருக்கும் வரை வடகொரியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது அமெரிக்காவிற்கு எளிதல்ல.
அமெரிக்காவின் உத்தி என்ன
அமெரிக்கா வடகொரியாவை ராணுவ ரீதியாகத் தாக்காமல், பொருளாதாரத் தடைகள் மூலம் அந்நாட்டை முடக்கவே முயல்கிறது. அதாவது, வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன்-ஐ நேரடியாக வீழ்த்துவதை விட, அவரை உலக நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தி வைக்கவே அமெரிக்கா விரும்புகிறது. வடகொரியாவிடம் "அழிக்கும் சக்தி" உள்ளது, ஆனால் "அள்ளும் சக்தி (இயற்கை வளங்கள்)" இல்லை. இதுதான் அந்த நாட்டை அமெரிக்காவின் நேரடித் தாக்குதலில் இருந்து காப்பாற்றுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications