டிரம்பையே அலறவிட்ட இந்திய பெண்.. ட்விட்டரை வாங்கியதும்.. "விஜயாவை" விரட்டிய எலான் மஸ்க்! யார் இவர்?
நியூயார்க்: ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய நிலையில் அதன் உயர் அதிகாரிகளை வேலையில் இருந்து நீக்கி உள்ளார்.
ட்விட்டர் சிஇஓ பராக் அக்ரவால் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ராய்டர்ஸ் ஊடகம் உள்ளிட்ட பிரபல சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டு உள்ளன.
நேற்று ட்விட்டர் நிறுவனத்தை அதிகாரபூர்வமாக வாங்கினார் எலான் மஸ்க். 44 பில்லியன் டாலர் ஒப்பந்தம் நேற்று முறையாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் நிறுவனத்தின் தலைவராகிறார் மஸ்க். இதையடுத்து பராக் அக்ரவால் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

நீக்கம்
சிஎப்ஓ உள்ளிட்ட மற்ற உயர் அதிகாரிகளும் நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ட்விட்டர் தலைமையகத்தில் இருந்து இவர்கள் வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின் தலைமையகத்திற்கு எலான் மஸ்க் நேற்றுதான் சென்றார். ட்விட்டர் உயர் அதிகாரிகளுடன் மஸ்க் கடுமையான மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தார். முக்கியமாக பராக் உடன் மஸ்க் கடுமையாக மோதி வந்தார். இந்த நிலையில்தான் பராக் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜயா
இப்படி நீக்கப்பட்ட அதிகாரிகளில் விஜயா கட்டே முக்கியமான அதிகாரி ஆவார். அமெரிக்காவை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ட்விட்டர் நிறுவனத்தின் பொதுக்குழு உறுப்பினர் மற்றும் சட்டக்குழு தலைவராக இவர் இருந்து வந்தார். இவர்தான் ட்விட்டர் நிறுவனத்தின் சட்ட ரீதியான கொள்கைகளை வகுத்து வந்தது. முக்கியமாக ட்விட்டர் நிறுவனம் வெறுப்பு பேச்சுக்கள், மதவாத பேச்சுக்கள், சர்ச்சைக்குரிய பேச்சுக்களை எப்படி கையாள வேண்டும் என்று இவர்தான் கொள்கைகளை வகுத்தார்.

யார் இவர்
அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பரப்பிய போது அதை நீக்குவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் விஜயாதான். அதோடு டிரம்ப் கணக்கை முடக்க செய்யவும் இவர் முக்கிய காரணமாக இருந்தார். ட்விட்டர் நிறுவனத்தில் டிரம்பிற்கு சிம்ம சொப்பனமாக விஜயா இருந்தார். விஜயா பல முக்கிய முடிவுகளை எடுத்து வந்தார்.

மோதல்
ட்விட்டர் நிறுவனத்தில் இருக்கும் வலிமையான பெண் அதிகாரியாக இவர் பார்க்கப்பட்டார். அதே சமயம் ஜோ பிடனின் ஜனநாயக கட்சிக்கு இவர் ஆதரவாக இருந்தார் என்றும் புகார் வைக்கப்பட்டது. இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் இவர். தெலுங்கானாவை சேர்ந்தவர் விஜயா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் எலான் இவரை வேலையில் இருந்து நீக்கி உள்ளார். இவரை இந்த பொறுப்பில் இருந்து நீக்கி உள்ளார்.

நெருக்கம்
இன்று அலுவலகம் திறந்தவுடன் அவருக்கான வேலை நீக்க கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதோடு அவர் சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்தில் இருந்து வெளியே அனுப்பப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. இவரின் அரசியல் சார்பு காரணமாக மஸ்க் அவர் மீது கோபத்தில் இருந்ததாக கூறப்பட்டது. இவருக்கு எதிராக ஏற்கனவே குடியரசு கட்சியினர் பல புகார்களை வைத்தும் வந்தனர். இந்த நிலையில்தான் விஜயாவை மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications