கெத்தாக திரிந்த இஸ்ரேல்.. இப்போது அமெரிக்காவிடம் கெஞ்சி நிற்பது ஏன்? காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க
டெஹ்ரான்: இஸ்ரேல் - ஈரான் போரில் கிட்டத்தட்ட இத்தனை காலம் கெத்தாக திரிந்த இஸ்ரேல் இப்போது அமெரிக்காவிடம் உதவி கேட்டு மன்றாடி வருகிறது. அதிலும் பாலஸ்தீனத்தை தாக்கும் போதெல்லாம்.. நெஞ்சை நிமிர்த்தி, ஐநாவின் அழுத்தத்தை கூட மதிக்காமல் திமிராக நடந்து கொண்டு இருந்த இஸ்ரேல் இப்போது கொஞ்சம் ஆட்டம் கண்டு உள்ளது. இதற்கு பின் காரணங்கள் உள்ளன.
கெஞ்சி நிற்கும் இஸ்ரேல்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்கா இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று இஸ்ரேல் தொடர்ந்து மன்றாடி வருகிறது. ஈரான் அமெரிக்காவிற்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது.. என்று அவர் எச்சரித்துள்ளார்.
நெதன்யாகு அளித்த ஒரு பேட்டியில், ஈரானின் அணு ஆயுத திட்டத்தை ஒழிப்பது இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு மட்டுமல்ல, உலகளாவிய பாதுகாப்பிற்கும் முக்கியமானது. இன்று டெல் அவிவ் என்றால், நாளை நியூயார்க். 'அமெரிக்கா முதலில்' என்று அமெரிக்கர்கள் கருதுகிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் இப்படியே விட்டால் அடுத்து அமெரிக்காவும் இருக்காது. இஸ்ரேலை தாக்கும் ஈரான் அடுத்து அமெரிக்காவையும் தாக்கும்.

அவர்கள் 'அமெரிக்காவுக்கு மரணம்' என்று கோஷமிடுகிறார்கள். கண்டிப்பாக அமெரிக்காவையும் தாக்குவார்கள். இதை அமெரிக்கா தடுக்க வேண்டும் . அதற்கு ஈரானை அமெரிக்கா தாக்க வேண்டும். மனித குலத்திற்கு நன்மை செய்யக்கூடிய ஒன்றை நாங்கள் செய்கிறோம். இது நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போர். டொனால்ட் ட்ரம்ப் நல்லதின் பக்கம் நிற்க வேண்டும், என்று பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
தோல்வி அடைந்த அயர்ன் டோம்
இஸ்ரேல் விமானப்படை நடத்திய குண்டுவீச்சுக்கு பதிலடியாக, நேற்று இரவு இஸ்ரேல் மீது ஈரான் 5-வது கட்டமாக பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. இதில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசியுள்ளது. இஸ்ரேல் தலை நகர் டெல் அவிவ் மீது ஈரான் நடத்திய தாக்குதலின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. இதில் அயர்ன் டோம் சரியாக பயனளிக்காததும் இஸ்ரேல் இப்படி கெஞ்சுவதற்கு முக்கிய காரணமாக மாறி உள்ளது.
ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் கடுமையாக சேதம் அடைந்து உள்ளது. முக்கியமாக இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. இங்கே ஏற்பட்ட சேதங்கள் பகல் நேர வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. ஆரம்ப கட்ட தகவல்களின்படி, ஹைஃபாவில் உள்ள ஒரு ஜெப ஆலயம் சேதமடைந்துள்ளது. டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமில் உள்ள பென் குரியன் விமான நிலையமும் கடுமையாக சேதம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் மீதான தாக்குதலை ஈரான் சாதாரணமாக செய்யவில்லை. முறையாக திட்டமிட்டே இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இது வெறுமனே கோபத்தில் கொடுக்கப்பட்ட பதிலடி அல்ல.
இஸ்ரேலிடம் ஏவுகணைகளை மறித்து தாக்கும் அயர்ன் டோம் உள்ளது. அதாவது ஒரு ஏவுகணை உள்ளேவந்தால் .. அதை உடனடியாக இந்த அயர்ன் டோமில் இருக்கும் இடைமறித்து ஏவுகணை மறித்து வெடிக்க வைக்கும். ஆனால் இதை மீறி ஈரானின் ராக்கெட்டுகள் இஸ்ரேலை பதம் பார்த்து உள்ளது. இது சாத்தியமாக காரணம்.. ஈரான் உடனுக்குடன் அதிக அளவில் ஏவுகணைகளை அனுப்பியது. அயர்ன் டோம் தடுக்கும் என்றாலும் 10 நொடிக்கு 20க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் ஒரே நேரத்தில் வந்தால் அதனால் எதிர்கொள்ள முடியாது.
முக்கியமாக அயர்ன் டோம் முழுமையாக ஏவுகணைகளை பயன்படுத்திய பின் அடுத்த லோடிங் நடக்க 10 நிமிடங்கள் வரை கூட ஆகும். இடைப்பட்ட நேரத்தில் ஏவுகணைகள் வந்தால்.. அதை இஸ்ரேல் தடுக்க முடியாது. இது போன்ற நேரங்களில் இஸ்ரேலின் மற்ற ஏவுகணை தடுப்புகள், அமெரிக்கா அளித்துள்ள ஏவுகணை தடுப்புகள் உதவும். ஆனால் இதை எல்லாம் மீறி இஸ்ரேல் உள்ளே புகுந்து ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.
ஈரான் அதிரடி அட்டாக்
இதற்கு காரணம்.. ஈரான் ஒரே நேரத்தில் அதிக அளவில் ஏவுகணைகளை அனுப்பி உள்ளது. மொத்தமாக 2500க்கும் அதிகமான ஏவுகணைகளை நேற்று இஸ்ரேல் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இஸ்ரேலின் அரணையே ஈரான் உடைத்து போட்டுள்ளது. ஈரான் கூற்றுப்படி.. 80% ராக்கெட்டுகள் இஸ்ரேலில் தாக்கி உள்ளன. இஸ்ரேல் 99% ராக்கெட்டுகளை தடுத்துவிட்டதாக கூறுகின்றன. ஆனால் வீடியோ ஆதாரங்களின்படி பார்த்தால் இஸ்ரேல் கடுமையாக அடி வாங்கி உள்ளது. ஏவுகணைகளை தடுக்கவில்லை என்பது புலனாகிறது.
ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் கடுமையாக சேதம் அடைந்து உள்ளது. முக்கியமாக இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் கடுமையாக சேதம் அடைந்துள்ளது.
ஈரான் புரட்சிகரப் படையினர் கூறுகையில், இதில் புதிய முறையை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி உள்ளோம். பொதுவாக நாங்கள் அனுப்பும் ஏவுகணைகளை இஸ்ரேலின் அயர்ன் டோம் மரிக்கும். அல்லது மற்ற ஏவுகணை தடுப்பு அமைப்புகள் தடுத்து தாக்கும்.
ஆனால் இந்த முறை நாங்கள் வித்தியாசமான முறையில் தாக்குதல் நடத்தி உள்ளோம். சில ரேடார் நுட்பங்கள், புதிய முறைகளை பயன்படுத்தி உள்ளோம். அதேபோல் ஹீட் சென்சார்கள், ரேடார் தகவல்களை வைத்து இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு அமைப்புகளை குழப்பி உள்ளோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது . இதனால் இஸ்ரேல் அதன் சொந்த நாட்டு ஏவுகணையையே தாக்கி அழிக்க தொடங்கி உள்ளது. இப்படி போரில் ஏற்பட்ட கடும் பின்னடைவு இஸ்ரேலை கெஞ்சி நிற்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளது.












Click it and Unblock the Notifications