ஜாய் ஸ்டிக்கை நம்பி.. கடலுக்கு போனா இதான்! டைட்டானிக்கை பார்க்க போன நீர்மூழ்கி மூழ்கியது எப்படி?
நியூயார்க்: டைட்டானிக்கை பார்க்க ஆழ் கடலுக்குள் சென்ற நீர்மூழ்கி கப்பல் மூழ்கிய நிலையில் அதை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது இந்த கப்பல் காணாமல் போனதற்கான முக்கிய காரணம் வெளியாகி உள்ளது.
Recommended Video
டைட்டானிக் கப்பலை பார்க்க சுற்றுலா பயணங்களை நடத்தும் நிறுவனம்தான் the OceanGate . இவர்களிடம் பல்வேறு சிறிய அளவிலான சுற்றுலா நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் தி டைட்டன்.

டைட்டன் நீர்மூழ்கி மூலம் இதற்கு முன் பயணிகள் பலர் டைட்டானிக் கப்பலை சென்று பார்த்து உள்ளனர். 10 முறைக்கும் மேல் இந்த டைட்டன் டைட்டானிக்கை சென்று வெற்றிகரமாக பார்த்துவிட்டு திரும்பி உள்ளது. ஆனால் இந்த முறை டைட்டானிக்கை பார்க்க சென்று டைட்டன் நீர் மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் காணாமல் போய் உள்ளது.
எப்படி காணாமல் போனது?: இந்த டைட்டன் கப்பல் காணாமல் போனது எப்படி என்ற விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி இந்த நீர் மூழ்கி மிகவும் குறுகியது, வெறும் 670 செ.மீ x 280 செ.மீ x 250 செ.மீ (22 அடி x 9.2 அடி x 8.3 அடி)ன் அளவு மட்டுமே கொண்டது. ஒரு விமானி மற்றும் நான்கு பயணிகள் - ஐந்து பேர் கொண்ட குழுவை ஏற்றிச் செல்ல முடியும்.
ராணுவ நீர்மூழ்கிக் கப்பலைப் போலல்லாமல், இந்த நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு குறைந்த சக்தி மட்டுமே உள்ளது மற்றும் அவற்றை ஏவுவதற்கும் திரும்பி மேலே வருவதற்கும் பெரிய எஞ்சின் எல்லாம் இல்லை. கீழே கொண்டு சென்று பாதி தூரத்தில் அப்படியே விடவும் அதன்பின் மேலே கொண்டு வருவோம் தனியாக ஆதரவுக் கப்பல் தேவை.
ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இதை அப்படியே கீழே போட்டுவிடுவார்கள். அது கடலுக்கு அடியில் மூழ்கி செல்லும். அதில் ஒரு கண்ட்ரோலர் மட்டும் இருக்கும். ஜாய் ஸ்டிக் போன்ற இந்த கண்ட்ரோலரை இயக்க வேண்டும்.
அதற்கு கூட ஜிபிஎஸ் பார்த்து இயக்க முடியாது. மேலே இருக்கும் கப்பலில் இருந்து சிக்னல் மூலம் மெசேஜ் அனுப்புவார்கள். அதை பார்த்து கீழே கப்பலனை ஜாய் ஸ்டிக் மூலம் இயக்க வேண்டும். தானாக இதை இயக்கி மேலே கொண்டு வரவே முடியாது. அதனால்தான் இப்போது அந்த நீர் மூழ்கி கப்பலை கண்டுபிடிக்க முடியவில்லை.
மேலே இருந்து கொடுக்கும் மெஸேஜை வைத்துதான் கீழே ஜாய் ஸ்டிக்கை இயக்க முடியும். ஆனால் அதை வைத்தும் கூட கப்பலை மேலே கொண்டு வர எல்லாம் முடியாது. நீர்மூழ்கி கொடுக்கும் சிக்னலை மேலே துணை கப்பல் கண்டுபிடித்து உள்ளே கேபிளை அனுப்பி அதை தூக்கி வரும். ஆனால் தற்போது நீர் மூழ்கியின் சிக்னல் காணாமல் போய் விட்டதால் அதை கண்டுபிடிப்பது சிக்கல் ஆகி உள்ளது.
கனடா கடல் பகுதியில் டைட்டானிக்கை பார்க்க சென்ற போது பாதி வழியில் இது மயமாகி உள்ளது. சிக்னல் கட் ஆன காரணத்தால் இது காணாமல் போய் உள்ளது. இதையடுத்து அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள பாஸ்டனில் இருந்து இந்த நீர் மூழ்கியை மீட்க மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
எவ்வளவு நேரம் இருக்கு?: டைட்டன் கப்பலில் இருந்த ஐந்து பேரில், இதுவரை நான்கு பேர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர் - ஹமிஷ் ஹார்டிங், 58 வயதான பிரிட்டிஷ் தொழிலதிபர் மற்றும் ஆய்வாளர். பிரிட்டிஷ் தொழிலதிபர் ஷாஜதா தாவூத், 48, மற்றும் அவரது மகன், சுலேமான் தாவூத், 19, மற்றும் 77- ஒரு வயது பிரெஞ்சு ஆய்வாளர் பால்-ஹென்றி நர்கோலெட் ஆகியோர் உள்ளனர்.
இந்த கப்பலை மீட்க இன்னும் 10 மணி நேரம் மட்டுமே அவகாசம் உள்ளது. அதற்கு பின் கப்பலுக்கு உள்ளே ஆக்சிஜன் தீர்ந்துவிடும் என்பதால் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதனால் உள்ளே சிக்கி இருக்கும் உயிர்களை மீட்க போராட்டம் நடந்து கொண்டு இருக்கிறது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications