பட்டாம்பூச்சி போல் சிறகை விரித்த டிராகன்! வெளியே வந்ததும் சுனிதா செய்த செயல்! ஸ்ட்ரெச்சரில் வீரர்கள்
நியூயார்க்: நாசா விஞ்ஞானிகளான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் உள்ளிட்ட 4 பேரும் ஃப்ளோரிடாவில் இறங்கியதும் டிராகன் கேப்சூலில் இருந்து ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்பட்டது ஏன் தெரியுமா? மேலும் கேப்சூலில் இருந்து வெளியே வந்ததும் சுனிதா செய்த செயல் என்ன தெரியுமா?
விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை நாசா அமைத்துள்ளது. இங்கு பல்வேறு ஆராய்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. இங்கு சில விஞ்ஞானிகள் இருந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் ஒரு ஆய்வுக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் ஸ்டார்லைனர் போயிங் விண்கலத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் ஆராய்ச்சிகளை முடித்துக் கொண்டு 8 நாட்கள் கழித்து 9ஆவது நாள் பூமிக்கு திரும்பும் படியாக திட்டமிடப்பட்டது.
இதையடுத்து பூமிக்கு திரும்ப இருவரும் தயாரான போது அந்த போயிங் விண்கலம் தொழில்நுட்ப கோளாறில் சிக்கியது. அதில் இருந்து ஹீலியம் வாயுக்கள் கசிந்தன. மேலும் அதில் மனிதர்கள் அமர்ந்து செல்ல முடியாத நிலை இருந்தது. இதனால் சுனிதாவும் வில்மோரும் விண்வெளியிலேயே தங்கிவிட்டனர்.

போயிங் மட்டும் தரையிறங்கியது. இந்த நிலையில் சுனிதாவையும் வில்மோரையும் இந்த ஆண்டு மார்ச் மாதம் மீட்பதாக நாசா தெரிவித்தது. இதனால் அவர்கள் 9 மாதங்கள் அங்கேயே தங்கியிருந்தனர். இந்த 9 மாதங்களும் அங்கு டாய்லெட் எப்படி இருக்கிறது, தூங்குவது எப்படி, சாப்பிடுவது எப்படி போன்றவை எல்லாம் வீடியோவாக எடுத்து சுனிதா வெளியிட்டிருந்தார்.
தூங்கும் அறை ஒரு சிறிய அறைதான். அதில் கை, கால்களை நீட்டி கூட படுக்க முடியாது. அது போல் இவர்களது சிறுநீரே குடிநீராகும் வகையில் தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் 9 விண்கலம் சுனியையும் புட்சையும் மீட்க சென்றது.

கடந்த சனிக்கிழமை புறப்பட்ட அது ஞாயிற்றுக்கிழமை விண்வெளிக்கு சென்றது. இதையடுத்து இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு டிராகன் அங்கிருந்து புறப்பட தயாரானது. அதில் சுனி, வில்மோர், நிக் ஹேக், அலெக்சாண்டர் ஆகிய 4 பேரும் அமர்ந்தனர்.
சுமார் 17 மணி நேரம் கடந்த 3 நிலைகளை வென்று 4ஆவது நிலையான தரையிறங்குதல் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.15 மணிக்கு நடந்தது. ஃப்ளோரிடா கடற்கரையில் பாராசூட் விரித்தபடியே கேப்சூல் டிராகன் இறங்கியது.
அப்போது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இதையடுத்து வீரர்களை மீட்க கடற்படையினரும் நாசா விஞ்ஞானிகளும் தயார் நிலையில் இருந்தனர். அவர்கள் அந்த கேப்சூலை மீட்பு கப்பலில் ஏற்றினர். அதிலிருந்து முதலில் சுனிதா வில்லியம்ஸை மீட்டனர். பிறகு ஒவ்வொருவராக வெளியே கொண்டு வரப்பட்டனர்.

அப்போது சுனிதா வில்லியம்ஸ் சிரித்தபடியே வெளியே வந்து கையை அசைத்தார். அவர் வெற்றியின் அறிகுறியாக தம்ஸ் அப்பையும் காட்டினார். இதையடுத்து அவர்களை ஸ்ட்ரெச்சரில் வைத்து டெக்சாஸில் உள்ள நாசா ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்திற்கு அழைத்து சென்றனர்.
அவர்கள் விண்வெளியில் புவி ஈர்ப்பு விசையில்லாத இடத்தில் இருந்ததால் அவர்களால் நடக்க இயலாது. உடலளவில் பலவீனமடைந்திருப்பர். அவர்களுக்கு தலைசுற்றல், குமட்டல் எல்லாம் இருக்கும். இதனால் அவர்கள் ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்பட்டு தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார்கள். அவர்கள் 4 பேரும் நலமாக இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications