மனைவியை உதறிய கணவன்.. டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க போன தம்பதி..அந்த ரிசல்ட்டை பார்த்து ஆடிப்போச்சு அமெரிக்கா
நியூயார்க்: அடுத்த நொடி என்ன நடக்க போகிறது என்பது தெரியாதவரை, வாழ்க்கை சுவாரஸ்யமாகத்தான் இருக்கும்.. ஆனால், இதுதான் நடக்க போகிறது என்று முன்கூட்டியே தெரிந்துவிட்டால், வாழ்வே இருண்டுவிடும். அந்தவகையில், அமெரிக்காவில் பல்வேறு வித்தியாசமான சம்பவங்கள் அவ்வப்போது நடந்து கொண்டிருகின்றன.
கடந்த ஜூன் மாதம், ரெடிட் தளத்தில் அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்திருந்தார்.. அதாவது 20 வருடங்களுக்கு முன்பு, இவர் ஒரு பெண்ணை காதலித்துள்ளார்.. இருவரும் நெருங்கி பழகி, ஒருவரையொருவர் நன்றாக புரிந்து கொண்டுள்ளனர்..

திருமணம்: நல்ல புரிதல் ஏற்பட்டதுமே, இருவரும் கல்யாணமும் செய்து கொண்டார்கள்... பிறகு, அவர்களுக்குள் ஏதோ ஒரு காரணத்தால் சில நாட்களுக்குள் 2 பேருமே பிரிந்துவிட்டார்கள். பிறகு மீண்டும் சமாதானம் செய்துகொண்டு, இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கினர். 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு இரட்டை குழந்தைகளும் உள்ளன.
18 வருடம் கழித்து, ஏதோ ஒரு மருத்துவ காரணத்திற்காக மொத்த குடும்பத்தினரும் டிஎன்ஏ மரபணு டெஸ்ட் செய்திருக்கிறார்கள்.. அப்போதுதான், அந்த இரட்டை குழந்தைகளுக்கு உயிரியல் ரீதியாக தந்தை அவர் கிடையாது என்பது தெரியவந்தது... அதாவது, அந்த குழந்தைகள் வேறு யாருக்கோ பிறந்திருக்கின்றன.. இது தெரியாமல் 18 வருடங்களாக, யாரோ ஒருவரின் குழந்தைகளை, அந்த கணவர் பராமரித்து வந்துள்ளார்.
சோகம்: இப்படி ஒரு டெஸ்ட் ரிப்போர்ட்டை பார்த்ததுமே, கணவருக்கு தூக்கிவாரிப்போட்டது.. இந்த துரோகத்தை தாங்க முடியாமல், மனைவியை விட்டு பிரிந்து வந்துவிட்டாராம்.. அன்று திருமணமான புதிதில், ஏதோ ஒரு காரணத்துக்காக மனைவியை பிரிந்திருந்தபோது, இன்னொரு ஆணுடன் ஏற்பட்ட தொடர்பால் மனைவி கர்ப்பமாகியிருப்பதும் தெரியவந்துள்ளது. இப்படி ஒரு சோகத்தை அந்த கணவர், பொதுவெளியில் பதிவிடவும், ஒட்டுமொத்த நெட்டிசன்களும் திரண்டு சென்று, அவருக்கு ஆறுதல் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இதுபோலவே இன்னொரு சம்பவம், இதே அமெரிக்காவில் நடந்துள்ளது.. அமெரிக்காவின் கொலராடோவை சேர்ந்தவர்கள் இந்த தம்பதியினர்.. இருவருமே உயிருக்குயிராக காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்கள்.. 10 வருட திருமண வாழ்க்கையில், இவர்களுக்கு 3 குழந்தைகளும் இருக்கிறார்கள்.
விபரீதம்: ஒருநாள் இந்த தம்பதிக்கு, விபரீத ஆசை துளிர்த்துள்ளது.. இருவருக்குமே தங்கள் மூதாதையர்கள் யார்? எப்படி இருந்திருப்பார்கள்? என்பதில் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்திருக்கிறது.. இதனை தெரிந்து கொள்ள வேண்டுமானால், டி.என்.ஏ. டெஸ்ட் அவசியமாகும்.. வெளிநாடுகளில் டிஎன்ஏ டெஸ்ட்களை சர்வ சாதாரணமாக செய்து கொள்வார்கள். அதன்படியே, தம்பதி இருவரும் டி.என்.ஏ. டெஸ்ட்களை செய்து கொண்டனர்..
அந்த டெஸ்ட் ரிப்போர்ட்டும் வந்தது.. அதை பார்த்ததுமே இருவருமே அதிர்ச்சி அடைந்துவிட்டனர். தம்பதி இருவருமே இருவருமே நெருங்கிய சொந்தக்காரர்கள், அதிலும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
பொதுவாக, சொந்தத்தில் திருமணம் செய்தால், அது தங்களின் குழந்தைகளின் வளர்ச்சியில் அறிவியல் பூர்வமாக பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதை ஆய்வுகள் மூலம் நிரூபணமாகி உள்ளது.. இப்போது, ஒரே சொந்தத்தை சேர்ந்தவர்கள் என்று டிஎன்ஏ ரிசல்ட் வந்துவிட்டதால், தம்பதி இருவருமே கவலையில் உட்கார்ந்திருக்கிறார்களாம்..
பெரும் குழப்பம்: யார் யார் என்ன உறவு என்றே தெரியாமல், 10 வருடம் அன்னியோன்யமாக வாழ்ந்து 3 குழந்தைகளையும் பெற்றிருக்கிறோமே? குழந்தைகளுக்கு அறிவியல் ரீதியான ஏதாவது பாதிப்பு வருமா? இந்த டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் பற்றி தங்கள் குழந்தைகளிடம் தெரிவிக்கலாமா வேண்டாமா? என்றெல்லாம் தம்பதியினர் குழம்பிப்போய் இருக்கிறார்களாம்.. விளையாட்டாக டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க போய், இப்போது தம்பதி இருவருமே கலக்கத்தில் உள்ளார்களாம்.












Click it and Unblock the Notifications