உலகப்போர் வருகிறது? 10 நாடுகள்.. ஒவ்வொன்றும் பவர்புல்.. விரைவில் உருவாகும் புதிய வேர்ல்டு ஆர்டர்?
நியூயார்க்: உலகப் போர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக உலக அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இது உலக அளவில் புதிய அதிகார சமநிலையை (New World Order) உருவாக்கும் சாத்தியக்கூறுகளையும் ஏற்படுத்தலாம் என்றும் கருதுகின்றனர்.
தற்போதைய உலக நிலை என்பது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் ஆதிக்கம், ஆசியாவில் சீனா மற்றும் இந்தியாவின் செல்வாக்கு, சீனா - ரஷ்யா இடையேயான நட்பு ஆகியவற்றின் கலவையாகும். இந்தச் சூழலில், ரஷ்யா மற்றும் சீனா மட்டுமே உலக சட்டத்தை தீர்மானிக்கும் சக்தியாக மாறினால், அது ஒரு புதிய அதிகார சமநிலையாக இருக்கும். அதாவது அமெரிக்காவின் வீழ்ச்சியாக அது இருக்கும். இத்தகைய மாற்றங்கள் உலகப் போரின் மூலம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

உலகப் போர் அபாயங்கள்
இஸ்ரேல் - பாலஸ்தீனம் மோதல், இஸ்ரேல் - ஈரான் - லெபனான் போர், உக்ரைன் - ரஷ்யா போர், வட கொரியா - தென் கொரியா போர் போன்ற நிகழ்வுகள் உலகப் போர் அபாயத்தை அதிகரிக்கச் செய்துள்ளன. அமெரிக்க பில்லியனரும், ஹெட்ஜ் நிதி வழிகாட்டியுமான ரே டாலியோ, முழு அளவிலான உலகப் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 35% ஆக இருந்தது, தற்போது 50% ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்த மோதல்கள் பல நாடுகளில் பல்வேறு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, இது இஸ்ரேல் மற்றும் காசாவில் உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல், உலகளாவிய அளவில் போரை உருவாக்கும் சாத்தியக்கூறுகளையும் கொண்டுள்ளது. இது சிறிய அளவிலான போராக இல்லாமல், வல்லரசு நாடுகள் ஈடுபடும் பெரிய போராகவும் மாறலாம்.
கொரிய தீபகற்பத்தில் பதற்றம்
வட கொரியா, தென் கொரியாவிற்குச் சொந்தமான தீவின் மீது கடந்த சில வாரங்களுக்கு முன் பீரங்கித் தாக்குதல் நடத்தியுள்ளது. சியோலின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, 200-க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகளை வட கொரியா வீசியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும், இது அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தென் கொரியா தெரிவித்துள்ளது.
தென் கொரியாவிற்குச் சொந்தமான பேங்யோங் (Baengnyeong) தீவின் வடக்கு பகுதிகள் மற்றும் யோன்பியோங் (Yeonpyeong) தீவு ஆகிய இரண்டு தீவுகளிலும் வட கொரியா தாக்குதல் நடத்தியுள்ளது.
2010 ஆம் ஆண்டு முதல் இந்த தீவுகளில் பதற்றம் நிலவி வருகிறது. 2010-ல் வட கொரியா இந்த தீவுகளின் மீது குண்டுகளை வீசியதில் இருந்து இரு கொரியாக்களுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. கடந்த 13 ஆண்டுகளாக இப்பகுதியில் இராணுவ பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு போர் எதுவும் நடக்காமல் இருந்தது. இந்நிலையில், வட கொரியா திடீரென பீரங்கி தாக்குதல் நடத்தியுள்ளது.
தென் கொரியா மற்றும் அதன் நட்பு நாடான அமெரிக்காவிற்கு எதிரான போருக்கு தயாராக இருப்பதாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த சில நாட்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்தே தற்போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தென் கொரியாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையிலான பிரச்சனை தீவிரமடைந்துள்ள நிலையில், சில வருடங்களுக்கு முன்பு இரண்டு நாட்டு அதிபர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் எல்லைகளை கடந்து நட்பை வெளிப்படுத்தினர். ஆனால், தற்போது இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இது போராக மாற வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
உக்ரைன் - ரஷ்யா மற்றும் இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்
உக்ரைன் - ரஷ்யா மற்றும் இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் ஆகியவை எல்லை மீறிச் சென்று முழு அளவிலான போராக மாறி உள்ளது. இது குறித்து ரே டாலியோ கூறுகையில், "ஒரு முழுமையான உலகப் போரின் முதன்மையான ஆபத்து அமெரிக்காவும் சீனாவும் அல்லது சீனாவிற்கு பதில் ரஷ்யாவும் நேரடி மோதலில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுதான். இந்த இரண்டு நாடுகளும் போரில் ஈடுபட்டால், அது உலகப் போராக மாறும். ஆனால், இப்போதைக்கு சீனா இதில் நேரடியாக தலையிடவில்லை. இந்த இரண்டு போர்களும் புதிய உலக ஒழுங்கை உருவாக்கும் போராக மாறப்போகிறது. இவை பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்" என்று எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல் - பாலஸ்தீன போர்
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. பதிலுக்கு இஸ்ரேலை ஈரான் தாக்கி வருகிறது. ஈரானின் தாக்குதல் இஸ்ரேலுக்கு சாதாரணமானதாக இல்லை. இது இஸ்ரேலின் அடித்தளத்தையே அசைத்துப் பார்த்து உள்ளது இஸ்ரேல் தனது பாதுகாப்பு அமைப்புகள் மூலம் 99% ஏவுகணைகளை தடுத்துவிட்டதாக கூறினாலும், ஈரானின் 80% ஏவுகணைகள் இலக்கை தாக்கியுள்ளதாக உலக போர் வல்லுநர்கள் கூறுகின்றனர். இதற்கு இஸ்ரேல் மீண்டும் பதிலடி கொடுக்கும், அது போரை உருவாக்கும். ஏற்கனவே பல நாடுகள் போரில் ஈடுபட்டுள்ள நிலையில், இஸ்ரேலின் பதிலடி உலகப்போரையே உருவாக்கும். முக்கியமாக அமெரிக்காவை போருக்குள் இழுக்க இஸ்ரேல் தீவிரமாக முயன்று வருகிறதg.
இஸ்ரேல், பாலஸ்தீனம், லெபனான், ஈராக், எகிப்து, சிரியா, அமெரிக்கா, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் போரில் நேரடியாக ஈடுபட்டுள்ளன. இதில் லெபனான், ஈராக், எகிப்து, சிரியா பாலஸ்தீனம் பக்கம் உள்ளன.
தற்போதைய சூழலில், சுமார் 10 பவர்புல் நாடுகள் போரில் ஈடுபட்டுள்ளன. ரஷ்யா மற்றும் சீனாவும் இதில் தலையிட்டுள்ளன. இது உலகப் போர் உருவாகும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications