சாகசம் செய்ய முயற்சி.. நொடியில் மாறிய காட்சி.. நூலிழையில் உயிர் தப்பிய பெண்.. இப்ப இதெல்லாம் தேவையா!
உயரமான கட்டடத்தில் இருந்து நீச்சல் குளத்தில் குதிக்க முயன்ற பெண் விபத்தில் சிக்கினார்.
நியூயார்க்: அமெரிக்காவில் பெண் ஒருவர் உயரமான இடத்தில் இருந்து நீச்சல் குளத்தில் குதிக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமான கூரையின் மீது தவறி விழுந்து விபத்துக்குள்ளானார்.
உலகம் முழுவதும் இன்று செல்பி மோகம் தலைவிரித்து ஆடுகிறது. மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக உயிரை பணயம் வைக்கும் அளவுக்கு ரிஸ்க் எடுப்பது பலருக்கு வழக்கமாகிவிட்டது.
எந்தவித பயிற்சியும், பாதுகாப்பும் இல்லாமல் அதிக போக்குவரத்து உள்ள சாலைகளில் பைக் ஸ்டண்ட் செய்வது, உயரமான கட்டடத்தில் இருந்து மற்றொரு கட்டடத்திற்கு தாவி குதிப்பது, மலை உச்சியில் இருந்து நீர் வீழ்ச்சியில் குதிப்பது உள்பட ஏகப்பட்ட அமெச்சூர் வீடியோக்களும் புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் நிரம்பி வழிகின்றன. மற்றவர்கள் தங்களை பாராட்ட வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற செயல்களில் பலர் ஈடுபடுகின்றனர்.

உயிருக்கு ஆபத்து
ஆனால் எல்லா நேரமும் அது சரியாக அமைந்துவிடுவதில்லை. சில சமயங்களில் அது அவர்களது உயருக்கே உலை வைத்துவிடுகிறது. அப்படி தான் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர், பந்தாவுக்காக உயரமான கட்டடத்தில் இருந்து நீச்சல் குளத்தில் குதிக்க முயன்று விபத்தில் சிக்கி இருக்கிறார்.

கேளிக்கை
அமெரிக்காவில் கொரோனா தொற்று ஒருபக்கம் வேட்டையாடி வருகிறது. ஆனால் அது பற்றி எல்லாம் அந்நாட்டு மக்கள் பெரிதாக கவலைபடுவதாக தெரியவில்லை. பெரும்பாலானவர்கள் வழக்கம் போல கேளிக்கைகளில் மூழ்கிக்கிடக்கிறார்கள்.

நீச்சல் குளம்
கடந்த 4ம் தேதி அமெரிக்காவை சேர்ந்த ஒரு இளைஞர் பட்டாளம் தங்களுடைய வீட்டில் கேளிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு பெண்ணும், ஒரு ஆணும் வீட்டின் மேற்கூரையில் இருந்து தரைதளத்தில் இருக்கும் நீச்சல் குளத்தில் குதிக்க முயன்றனர்.

இடறி விழுந்து விபத்து
இருவரும் ஒரே சமயத்தில் மேலே இருந்து ஓடி வந்து நீச்சல் குளத்தில் குதிக்க முயன்றனர். அப்போது அந்த ஆண் மட்டும் சரியாக நீச்சல் குளத்தில் குதித்துவிட்டார். ஆனால் அந்த பெண்ணோ, மொட்டை மாடிக்கும் நீச்சல் குளத்திற்கும் நடுவில் அமைந்திருக்கும் முற்றத்தின் மேற்கூரையில் இடறி விழுந்து அடிபட்டு, சறுக்கிக்கொண்டே வந்து தலைக்குப்புற நீச்சல் குளத்தில் விழுந்தார்.
|
நல்லநேரம்
தரையில் விழாததால் நல்லவேளையாக அவருக்கு பெரிய காயம் ஏதும் ஏற்படவில்லை. நூலிழையில் அவர் உயிர் தப்பி இருக்கிறார். பொழுதுபோக்கிற்காக எத்தனையோ விஷயங்கள் இருக்க, இதுபோன்ற விபரீதமான முயற்சிகளில் மக்கள் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் கொரோனா பிரச்சினையால் மருத்துவமனைகள் ஏற்கனவே நிரப்பி கிடக்கின்றன என்பது அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications