பாராசிட்டமாலால் ஆட்டிசம் நோய் வரும்? "டாக்டர்" டிரம்ப் சொன்னதுமே, உடனே மறுத்த உலக சுகாதார நிறுவனம்
நியூயார்க்: இத்தனை நாளும் எச்1பி விசா கொள்கையை மாற்றியமைத்து, இந்தியாவை திகைக்க செய்து வந்த அமெரிக்க டிரம்ப், திடீரென டாக்டர் போல பேச ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது. கர்ப்பிணிகள் பாராசிட்டமால் எடுத்துக் கொண்டால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது" என்று கூறியிருந்தார்.. ஆனால், டிரம்பின் கூற்றை உலக சுகாதார நிறுவனம் மறுத்துள்ளது.. டிரம்ப் இப்படி சொல்வது மருத்துவ ரீதியாக எந்த தொடர்பும் இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஜெனீவாம்' என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கூற்றில் எந்த உண்மையும் இல்லை என உலக சுகாதார மையம் விளக்கம் அளித்துள்ளது.

டாக்டர் டிரம்ப் தந்த விளக்கம்
அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் டிரம்ப் பேசும்போது, "அதிகமாக Tylenol எடுக்காதீர்கள். (அமெரிக்காவில் பாராசிட்டமல் மாத்திரைக்கு வழங்கப்படும் ஒரு பிராண்ட் பெயர்தான் டைலெனால்) இதனை எவ்வளவு முடியுமோ தவிர்த்து விடுங்கள்.. மிகுந்த அவசரம் என்றால் மட்டும் எடுத்துக்கொள்ளலாம்...
தடுப்பூசி ஒன்றாக கொடுக்கப்படாமல், தனித்தனியாக கொடுக்கப்பட வேண்டும். ஒன்றாகக் கலந்து கொடுத்தால் பிரச்சனை உண்டாகிவிடும் என்று தெரிகிறது. பாராசிட்டமால் மாத்திரைகளால் ஆட்டிசம் பிரச்சனை ஏற்படுகிறது..
குறிப்பாக, கர்ப்பிணிகள் பாராசிட்டமால் எடுத்துக் கொண்டால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் அல்லது அதிக கவன சிதறல் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது" என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
பாரசிட்டமால் சாப்பிட்டால் ஆட்டிசம் வருமா
இதைக்கேட்டதுமே மருத்துவ துறையில் லேசான அதிர்வலைகள் எழும்பின.. பாராசிட்டமால் அல்லது அசிட்டாமினோபென் என்று அழைக்கப்படும் மாத்திரையை உலகம் முழுவதும் பலரும் பரவலாக பயன்படுத்தி வருகிறார்கள்.. மேலும் இது ஒரு வலி நிவாரணியாக செயல்படுகிறது.. அத்துடன் காய்ச்சலையும் குறைக்கக்கூடியது.
இப்படிப்பட்ட சூழலில் டிரம்ப் இப்படியொரு விஷயத்தை சொன்னதுமே பலருக்கும் வியப்பு ஏற்பட்டது. தற்போது டிரம்பின் கூற்றை உலக சுகாதார நிறுவனம் முற்றிலும் நிராகரித்துள்ளது.
பாராசிட்டமால் மாத்திரை பாதுகாப்பானது
இது குறித்து அதன் செய்தி தொடர்பாளர் தாரிக் ஜசரேவிக் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், "அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கூற்றில் எந்த உண்மையும் இல்லை.. கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதுகாப்பான சில மருந்துகளில் பாராசிட்டமால் முக்கியமானது. காய்ச்சல் மற்றும் வலி குறைக்க இது அவசியம்.
கர்ப்பிணி பெண்களில் சுமார் 50% பேர் பாராசிட்டமால் பயன்படுத்துவதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. பல நாடுகளில் இது பல பெயர்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.. காய்ச்சல் கர்ப்பிணி பெண்களுக்கும், கருவில் மலரும் குழந்தைக்கும் ஆபத்தானதாக இருக்கக்கூடும். அதனால், டாக்டர்கள் பாராசிட்டமாலை பாதுகாப்பான தேர்வாகவே கருதுகின்றனர்.
வதந்திகளை நம்ப வேண்டாம்
கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு பாதிப்பு என்பதற்காக எந்த ஆதாரமும் இல்லை. ஆட்டிசத்துக்கும், இதற்கும் தொடர்பு என்று சொல்வது பொருத்தமில்லாதது.. பாராசிட்டமாலை பாதுகாப்பான டாக்டர்களே பரிந்துரைக்கிறார்கள்.. அதனால் மக்கள் இதுபோன்ற ஆதாரமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம்" என்று விளக்கம் தந்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்துக்கு ஐரோப்பிய மருந்துகள் நிறுவனமும் ஆதரவு தெரிவித்துள்ளது... இதையடுத்து, டிரம்பின் கருத்துக்கு எதிரான கமெண்ட்கள் சோஷியல்மீடியாவில் சர்வதேச அளவில் பதிவாகி வருகின்றன.. பாராசிட்டமாலுக்கும், ஆட்டிசத்துக்கும் என்ன தொடர்பு? ஒரு நாட்டின் அதிபர் இப்படியா ஆதாரமின்றி பொறுப்பில்லாமல் பேசுவது? என்று இணையவாசிகள் விமர்சிக்க துவங்கியிருக்கிறார்கள்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications