உலக நாடுகளில் தொடரும் கொரோனா கோரத்தாண்டவம்- அமெரிக்காவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,85,122
நியூயார்க்:உலக நாடுகளில் கொரோனா கோரத்தாண்டவம் தொடர்கிறது. அமெரிக்காவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,85,122 ஆக பதிவாகி உள்ளது. ரஷ்யாவில் நேற்று ஒருநாளில் மட்டும் 811 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.
உலக நாடுகளில் நேற்று ஒருநாள் மட்டும் 8,22,385 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேல்லும் 2,946 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் மொத்தம் 3,42,796 பேர் கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து உலக நாடுகளின் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 290,588,293 ஆக உயர்ந்தது. உலகம் முழுவதும் கொரோனாவுக்கு இதுவரை 5,460,216 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் மொத்தம் 254,503,740 பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் அதிக பாதிப்பு
உலக நாடுகளிலேயே ஒருநாள் பாதிப்பு அமெரிக்காவில்தான் அதிகம். அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் 185,122 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 162 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 18,085 பேர் கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினர். அமெரிக்காவில் இதுவரை 56,142,175 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 847,408 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா சிகிச்சையில் இருந்து 41,543,060 பேர் குணமடைந்துள்ளனர்.

இங்கிலாந்தில் தொடரும் உச்சம்
அமெரிக்காவை தொடர்ந்து இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு அதி உச்சமாக இருக்கிறது. இங்கிலாந்தில் நேற்று மட்டும் 137,583 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இங்கிலாந்தில் கொரோனாவால் நேற்று 73 பேர் உயிரிழந்தனர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 45,011 பேர் இங்கிலாந்தில் குணமடைந்தனர். இங்கிலாந்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,235,401. இங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 148,851. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,410,273.

இத்தாலியிலும் பாதிப்பு அதிகம்
ஒருநாள் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இத்தாலி 3-வது இடத்தில் உள்ளது. இத்தாலியில் நேற்று 61,046 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. மேலும் 133 பேர் நேற்று இத்தாலியில் கொரோனாவால் மரணம் அடைந்தனர். இத்தாலியில் 12,164 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இத்தாலியின் மொத்த கொரோனா பாதிப்பு 6,328,076. இத்தாலியில் இதுவரை கொரோனா பாதிப்பால் 137,646 பேர் உயிரிழந்தனர். மேலும் 5,119,893 பேர் கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்துள்ளனர்.

இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள்
இத்தாலிக்கு அடுத்த பிரான்சில் 58,432; கனடாவில் 35,127; துருக்கியில் 33,520; ஆஸ்திரேலியாவில் 32,222 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் நேற்று 28,458 பேருக்கு கொரோனா உறுதியானது.












Click it and Unblock the Notifications